உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 25
  • பலமுள்ள—லாம்மர்கேயர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பலமுள்ள—லாம்மர்கேயர்
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • பறவைகளைப் பார்வையிடுதல்—எல்லாருக்குமே இனியதோர் விருப்பவேலையா?
    விழித்தெழு!—1998
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 25

பலமுள்ள—லாம்மர்கேயர்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

லாம்மர்கேயர், ஒரு கம்பீரமான பறவை, அது அதன் அலகிலிருந்து வால் வரையிலும் 120 சென்டிமீட்டருக்கும் மேல் நீளமுடையது. அது ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள மலைத்தொடர்களுக்கு மேலாகவும், சிலசமயங்களில், இமயமலையில் எட்டு கிலோமீட்டர் வரையுள்ள உயரத்திலும் அதன் மூன்று மீட்டர் அகலமுடைய சிறகுகளால் அதிக முயற்சி ஏதுமின்றி மேலே எழும்பிப் பறந்து கொண்டிருக்கையில் காணலாம். இக்கம்பீரமான பறவையின் மார்பும் கழுத்தும் ஆரஞ்சு நிறத்திலும் தலை கறுப்பு-வெள்ளை நிறத்திலும் இருப்பதுடன், அதன் அலகின் கீழ்ப்பகுதியிலிருந்து தடித்த ரோமம் நீளமாக தொங்கிக்கொண்டுள்ளது. இவற்றாலேயே அதற்கு, தாடியையுடைய கழுகு என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஒதுக்கமாயுள்ள, வறண்ட பகுதிகளில் வாழ்வதாய், அது எதை உண்டு உயிர் வாழ்கிறது?

லாம்மர்கேயர் உயிருள்ள பிராணிகளை—மலை மான், செம்மறியாட்டுக் குட்டி, வெள்ளாட்டுக் குட்டி, முயல்கள், மேலும் விரிகுளம்புள்ள சிறிய பிராணிகளை—கொன்று தின்றுதான் உயிர்வாழ்கிறது என்பதாக சில நோக்கீட்டு புத்தகங்கள் ஊர்ஜிதமாய்க் கூறுகின்றன, ஆனால் மற்ற வல்லுநர்கள் அவ்விதமாக இருப்பதாய் ஒத்துக்கொள்வதில்லை. விலங்குகள், பிற பிராணிகளைக் கொன்று தின்னுகையில், சதைப்பகுதியை ஜீரணித்த பிறகு, அவற்றோடு ஒட்டிக்கொண்டிருந்த ரோமத்தை, சிறு சிறு உருண்டைகளாகக் கழிக்கையில், அவற்றை லாம்மர்கேயர் தின்பதாக அறியப்பட்டிருக்கிறபோதிலும், “இந்தப் பறவை ஓர் உயிருள்ள விலங்கை எப்போதாவது தாக்குவதைப் பற்றிய ஊர்ஜிதமாக்கப்பட்ட அறிக்கை ஒன்றுகூட இல்லை,” என்று தி உவர்ல்ட் அட்லஸ் ஆஃப் பேர்ட்ஸ் கூறுகிறது. அப்படியானால் அது எதைத்தான் உணவாக உட்கொள்கிறது?

கொன்று தின்னிகளால் கொல்லப்பட்டிருக்கும் அல்லது மற்ற வழிகளில் இறந்திருக்கும் விலங்குகளின் எலும்புகளை மிகவும் உயரமான பகுதிகளுக்கு லாம்மர்கேயர் தூக்கிச் சென்று, அந்த எலும்புகளைக் கீழிருக்கும் பாறைகளின்மீது போடுகிறது. அது இவ்விதமாய் எலும்புகளைப் போடுவது, எலும்பு மஜ்ஜையைப் பெறுவதற்காகத்தான் என்பதாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. இப்போது, இந்தப் பறவையை உயிரோடும் செத்த பிறகும் தீர்க்கமாக ஆய்வு செய்தபின்பு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் ஒரு வித்தியாசமான விளக்கத்தை அளிக்க முடிந்திருக்கிறது என்பதாக தி இக்கானமிஸ்ட் அறிக்கையிடுகிறது.

லாம்மர்கேயர், 25 சென்டிமீட்டர் நீளம் 4 சென்டிமீட்டர் அகலமுடைய அவ்வளவு பெரிய எலும்புத் துண்டுகளைக்கூட விழுங்குகிறது. ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஆச்சரியப்படும் வகையில், பறவை அதன் ஜீரணிக்க முடியாத உணவைச் சமாளிப்பதற்கு, இரண்டாவதான ஓர் அரைவைப் பையைப் போன்ற எந்தவித விசேஷித்த ஜீரண அமைப்பையும் உடையதாயில்லை என்பதாகக் கண்டறிந்தனர். எலும்புத் துண்டுகள் கடந்துசெல்வதைச் சாத்தியமாக்கும் வகையில் மிதமிஞ்சிய விரியும் தன்மையுடைய உணவுக்குழல் மட்டுமே ஓர் அபூர்வமான அம்சமாயுள்ளது. என்றபோதிலும், லாம்மர்கேயரின் வயிற்றிலிருந்து அதிகத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது.

அதன் வயிற்றில், எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து, அதிலிருந்து புரோட்டீனையும் மஜ்ஜைக் கொழுப்பையும் வெளிவிடும் அசாதாரண அடர்த்தியுள்ள அமிலத்தை—பேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலத்தைக் காட்டிலும் கடுமையான அமிலத்தை—சுரக்கச் செய்யும்; எண்ணிக்கையில் அதிகளவான அறைகளைக் கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர். இவ்வுணவானது, அதே எடையுள்ள மாமிச உணவைக் காட்டிலும் அதிகளவு சக்தியை அளிக்கிறது. இன்னும் திகைப்பூட்டும் காரியம் என்னவெனில், அத்தகைய அடர்த்தி மிகுந்த அமிலம் சூழ்ந்திருந்தபோதிலும், ஜீரணத்திற்கு உதவியாயிருக்கும் என்ஸைம்கள் காணப்படுவதாகும். ஆகவே, 90 சதவீதம் எலும்பை விழுங்குவதிலிருந்து கிடைக்கும் அற்பமான உணவை உட்கொண்டபோதிலும் இந்த பலமான உயிரினம் எப்படி தன்னை ஆதரித்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றிய மர்மம் தீர்க்கப்பட்டுவிட்டது—படைப்பின் மற்றொரு அதிசயம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்