உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 5/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 5/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஐம்பது வருடங்களுக்கு முன்பு “1945-1995—நாம் என்ன கற்றுக்கொண்டோம்?” என்ற தொடரை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். (செப்டம்பர் 8, 1995) அப்படிப்பட்ட ஒரு குறுகிய பகுதியில் அந்த எல்லா சரித்திரத்தின் விவரங்களையும் நீங்கள் உள்ளடக்கியிருக்கும் முறையால் நான் கவரப்பட்டேன். நான் அதிகத்தைக் கற்றுக்கொண்டேன்; ஒரு சரித்திர புத்தகத்தை வாசிப்பதைப் பார்க்கிலும் மேலானதாக இருந்தது.

எம். வி., பிலிப்பீன்ஸ்

ஜெபம் நான் வேலையில்லாதிருக்கிறேன், இடம்மாறிச் செல்லும் தறுவாயிலும் உள்ளேன். “பைபிளின் கருத்து: உங்கள் ஜெபங்களில் உங்கள் பங்கு” (செப்டம்பர் 8, 1995), என்ற கட்டுரையை வாசிக்கும்வரை சற்று கவலையாயிருந்தேன். இந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததற்காக நன்றி. என் ஜெபங்களுக்கு இசைவாக வாழ்வதன்மூலம் அவற்றிற்கு பதிலைப்பெற நான் ஆர்வமுள்ளவளாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க என்னாலானதைச் செய்வேன்.

டி. சி., ஐக்கிய மாகாணங்கள்

சூதாட்டம் சூதாட்டத்தின்பேரில் ஒரு கட்டுரைக்காக நான் சமீபத்தில் ஜெபம் செய்தேன், ஏனென்றால் என் உறவினர்கள் இந்தக் காரியத்தில் அதிக உதவிக்கான தேவையோடு இருக்கின்றனர். நொடித்துப்போகும் தறுவாயில் இருக்கின்றனர். “சூதாட்டம்—அதற்கு அடிமையாதல் பரவிவருகிறது” (செப்டம்பர் 22, 1995) என்ற தொடர்கட்டுரை அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். அவர்களுடைய அடிமைத்தனத்தின் காரணமாக அவ்வளவு அதிகமாக கஷ்டப்படுகின்றனர். பந்தயச் சீட்டாட்டத்தைக் குடும்பமாக ஒரே சமயத்தில் 6-லிருந்து 12 மணிநேரம்வரை நாங்கள் விளையாடியது உண்டு! இப்போது யெகோவாவை என் வாழ்க்கையில் கொண்டிருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எல். டி., ஐக்கிய மாகாணங்கள்

சூதாட்டத்திற்கு அடிமையாயிருக்கும் என் கணவருடன் நான் வாழ்ந்த 20 ஆண்டு திருமண வாழ்க்கையை நீங்கள் விவரித்திருந்தீர்கள். முன்பு வெளிவந்த பத்திரிகைகளிலிருந்து நான் அதிக உற்சாகத்தைப் பெற்றிருக்கிறேன், ஆனால் இந்த முறை 20 வருடங்களாக நான் எதற்காக ஏங்கிக்கொண்டிருந்தேனோ அதைப் பெற்றுக்கொண்டேன்!

எஃப். இ., ஜப்பான்

தற்காப்பு “இளைஞர் கேட்கின்றனர் . . . தற்காப்பை நான் கற்றுக்கொள்ள வேண்டுமா?” (செப்டம்பர் 22, 1995) என்ற கட்டுரையை நான் பெரிதும் போற்றினேன். இங்கே உக்ரேனில் விழித்தெழு! பத்திரிகையை மாதம் ஒருமுறைதான் பெற்றுக்கொள்கிறோம், அதில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” இருப்பதில்லை. என்னால் ஆங்கிலம் வாசிக்கமுடிந்ததால், அந்தக் கட்டுரையை என்னால் வாசிக்கமுடிந்தது. கடவுளுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.

வி. எல்., உக்ரேன்

எனக்கு 12 வயதாகிறது, நீங்கள் பிரசுரிக்கும் கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தற்காப்பின்பேரில் உள்ள கட்டுரை குறிப்பாய் உபயோகமாக இருந்ததைக் கண்டேன். என்னுடைய பள்ளி மாணாக்கர்கள் என்னை துன்புறுத்தும்போது எவ்வாறு நடந்துகொள்வது என்பதை மேம்பட்ட விதத்தில் புரிந்துகொள்ளும்படி செய்தது.

டி. சி., இத்தாலி

ஆப்பிரிக்க பள்ளி நான் ஒரு ஏக்கன். பாரம்பரிய ஆப்பிரிக்க பள்ளி மற்றும் மேற்கத்திய பள்ளிகள் ஆகிய இரண்டிலிருந்துமே பயனடைந்திருக்கிறேன், “ஆப்பிரிக்க பள்ளி—அது என்ன போதித்தது?” (செப்டம்பர் 22, 1995) என்ற உங்கள் கட்டுரையை அனுபவித்தேன். ஆப்பிரிக்க பள்ளிக்கு நீங்கள் கொடுத்திருந்த மரியாதையும் கண்ணியமும் என்னை நெகிழவைத்தது. உங்களுடைய நம்பிக்கை ஆப்பிரிக்க பாரம்பரியத்துக்கு அவமதிப்பைக் காண்பிப்பதாக எண்ணும் சிலர் இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல என்ற காரியத்தை இந்தக் கட்டுரை தெளிவாக்குகிறது.

எஸ். என்., கானா

சுயசரிதை கர்ரன் மலோனின் “உண்மை விசுவாசத்தைத் தேடி என் நீண்ட கடினமான போராட்டம்” (செப்டம்பர் 22, 1995) என்ற சுயசரிதையைப் பிரசுரித்ததற்காக மிகவும் நன்றி. அது ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

ஜே. எஸ்., செக் குடியரசு

என் குடும்பத்தில் நான்தான் மூத்தபிள்ளை. நான் விரும்பின அநேக பொருட்களை என்னால் பெறமுடியாததன் காரணமாக வருத்தமாக உணர்ந்திருக்கிறேன். சிலசமயங்களில் உணவை வாங்குவதற்கும்கூட போதிய பணம் எங்களிடத்தில் இருக்கவில்லை. ஆனால் கர்ரனின் உதவியினால், பொருளுடைமைகளைக் காட்டிலும் கடவுளுக்கு செய்யும் சேவை அதிக முக்கியமானது என்பதை இப்போது நான் உணருகிறேன்.

டி. டி., கிரீஸ்

இதுவரையாக இந்தக் கட்டுரையை நான்கு முறை வாசித்துவிட்டேன், ஒவ்வொருமுறையும் அது கண்ணீரை வரவழைத்தது. குடும்ப எதிர்ப்பையும் பெருங்கஷ்டத்தையும் எதிர்ப்படும் சமயத்திலும் யெகோவாவைச் சேவிக்க வேண்டும் என்ற அவருடைய தீர்மானத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சீக்கிரத்தில் ஒரு முழுநேர சுவிசேஷகராக, ஒரு ஒழுங்கான பயனியராக, சேவை செய்யத் துவங்குவதை நான் எதிர்பார்க்கிறேன், இந்தக் கட்டுரை உண்மையிலேயே என்னை பலப்படுத்தியிருக்கிறது.

டி. எஃப்., ஆஸ்திரேலியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்