காச நோய் திரும்பவும் தாக்குகிறது!
1950-களிலிருந்து, காச நோயால் (TB) அவதியுறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களில் ஓராண்டுக்கு 5 சதவிகிதம் என்ற வீதத்தில் குறைந்துவந்தது. என்றபோதிலும், 1985-லிருந்து, அறிக்கை செய்யப்பட்ட TB நோயாளிகளில் 18-சதவிகித அதிகரிப்பு இருந்திருக்கிறது. அதிலும் வேதனை தருவது, மருந்து மூலம் குணமாக்கப்படும் சிகிச்சைக்குப் பிரதிபலிக்காத ஒரு புதுவிதமான நோய் பரவி வருவதுதான். இப்போது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிடப்பட்ட 30 லட்சம் மக்களை TB கொல்லுகிறது. TB-க்கு எதிரான போர் ஏன் தோல்வியுறுகிறது?
ஒரு காரணம், நோயாளிகள் பலர் தங்களுக்குக் குறிக்கப்பட்ட காலப்பகுதிவரைப—பொதுவாக ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள்—மருந்தை உட்கொள்ளத் தவறுவதால்மட்டுமே. உதாரணமாக, நியூ யார்க் நகரில், அதிகரித்துவரும் TB-யைக் கொண்ட சுமார் 200 நோயாளிகள் அடங்கிய ஒரு தொகுதியின் 89 சதவீதத்தினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதாக ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது. “அது பயங்கரம், ஏனெனில், அம் மக்கள் (அ) நிவாரணம் அடையப்போவதில்லை, மேலும் (ஆ) பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளை எதிர்த்து நிற்கும் சக்தியுள்ள TB-யை ஒருவேளை அவர்கள் பெறப்போகிறார்கள்” என்று அமெரிக்கன் லங் அசோஸியேஷனின் தலைவர் டாக்டர் லீ ரீக்மன் கூறுகிறார். ஆனால் TB-யைக் கடத்தும் இவர்கள் தங்களின் உடல்நலத்தைக் காட்டிலும் அதிகத்தைப் பாதிக்கலாம். “அவர்களுக்குரிய மருந்தை உட்கொள்ளாததால், அவர்கள் மற்றவர்களுக்கும் அந்நோயைக் கடத்தலாம்” என்று டாக்டர் ரீக்மன் மேலும் கூறுகிறார். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்யப்பட்ட 80 லட்சம் புது நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம் என்பதில் சந்தேகமில்லை.
‘பல இடங்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்பது, நாம் இக் காரிய ஒழுங்குமுறையின் ‘கடைசிநாட்களில்’ வாழ்ந்துவருகிறோம் என்பதற்கான அடையாளத்தின் ஒரு பகுதி என்று பைபிள் மாணாக்கர் உணருகின்றனர். (லூக்கா 21:11; 2 தீமோத்தேயு 3:1) தொடரப்போவது எது? “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத” ஒரு புதிய பூமி. (ஏசாயா 33:24) ஆம், தற்காலிக நிவாரணமல்ல, ஆனால் வியாதியிலிருந்தும் மரணத்திலிருந்தும் நிரந்தர விடுதலையை யெகோவா தேவன் வாக்களிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:1-4.