உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 11/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எய்ட்ஸும் ஆசியாவும்
  • ஜெர்மனியைத் தாக்கும் அலர்ஜிகள்
  • கைகளை கழுவுங்கள்!
  • குழந்தை துர்ப்பிரயோகமும் நோய்த்தடுப்பு ஆற்றலும்
  • மெசொப்பொத்தாமியாவுடன் சீனாவின் தொடர்பு
  • ஹெப்படைட்டஸ்-பி இறப்புகள்
  • வீட்டுக்குள்ளே காற்றுத் தூய்மைக்கேடு
  • தண்ணீர் யுத்தங்கள்
  • வெனிசுவேலாவில் கொடூர குற்றச்செயல்
  • ஆரோக்கியமான வாழ்க்கை பாணியை முன்னேற்றுவித்தல்
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
  • நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதர் கொண்டுவர முடியுமா?
    உண்மையான சமாதானம்
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • இருபதாம் நூற்றாண்டில் கொள்ளைநோய்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 11/8 பக். 28-29

உலகை கவனித்தல்

எய்ட்ஸும் ஆசியாவும்

சில மேற்கத்திய நாடுகளில் எய்ட்ஸ் தாக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருக்கிறபோதிலும், ஆசியாவின் அநேக பகுதிகளில் இக்கொள்ளைநோய் கட்டுக்குமீறி சென்றுகொண்டிருக்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் “1990-களின் முற்பாதியில் 71 மடங்காக அதிகரித்தது” என்று ஏசியாவீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. 1990-ல் இந்நோயாளிகளின் எண்ணிக்கையில் 57-வது இடத்தில் இருந்த தாய்லாந்து, 1990-களின் மத்திபத்துக்குள் ஐந்தாவது இடத்தை வகித்தது. கம்போடியா 173-வது இடத்திலிருந்து 59-வது இடத்திற்கு தாவியது. அதே காலப்பகுதியில் பிலிப்பீன்ஸில் 131 சதவீத அதிகரிப்பு இருந்தது. பெரும்பாலும் இந்நாடுகளில் செழித்தோங்கியிருக்கும் சிறுவர்-பாலியல் வியாபாரமே இதற்காக ஓரளவு குற்றஞ்சாட்டப்படவேண்டும் என்று அநேகர் அறிந்திருக்கிறார்கள்; எனினும், “சுற்றுலா பயணிகளின் டாலர் பணத்தையே பெருமளவில் நம்பியிருக்கும்” நாடுகளிலுள்ள சில அரசியல்வாதிகள் “. . . இதற்கு எதிராக பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு மனமற்றவர்களாக இருக்கின்றனர்” என்று ஏசியாவீக் குறிப்பிடுகிறது.

ஜெர்மனியைத் தாக்கும் அலர்ஜிகள்

ஜெர்மன் ஃபெடரல் அஸோசியேஷன் ஆஃப் கம்பெனி ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம்ஸ் வெளியிட்ட ஒரு ஆய்வு, 14 வயதுக்கு மேற்பட்ட ஜெர்மானியர்களில் நான்கு பேரில் ஒருவர் அலர்ஜியால் அவதியுறுவதாக தெரிவித்துள்ளது. அங்குள்ள கிட்டத்தட்ட 60 லட்சம் மக்களைப் பாதிக்கும், மிகவும் சாதாரணமான அலர்ஜி தூசியால் ஏற்படும் சளிக்காய்ச்சல் ஆகும். சுமார் 23 லட்சம் ஆட்கள் சூரியவெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விலங்குகளின் மயிர்கள் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன என்று ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் குறிப்பிடுகிறது. இத்தகைய அலர்ஜிகளால் அவதிப்படுகிறவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்களுடைய சுகவீனத்துக்கு மருந்து உட்கொள்கிறார்கள்; மேலும் பத்து சதவீதத்தினர் இந்த அறிகுறிகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை வெகுவாக கட்டுப்படுத்துவதாக அறிவிக்கிறார்கள். “ரொட்டி சுடுபவர்கள், மர வேலை செய்பவர்கள், நர்சுகள், டாக்டர்கள் போன்ற” குறிப்பிட்ட சில “வியாபாரங்களையும் தொழில்களையும்” செய்யும் மக்கள் “அலர்ஜியால் பாதிக்கப்படும் பெரும் ஆபத்தில் இருக்கிறார்கள்” என்றும் அந்தச் சுற்றறிக்கை தெரிவித்திருக்கிறது.

கைகளை கழுவுங்கள்!

“அநேக தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மிகச்சிறந்த, எளிய, அதிக செலவற்ற வழி கைகளை கழுவுவதே” என்று இத்தாலிய செய்தித்தாள் கோரியரே டேல்லா சேரா தெரிவிக்கிறது. இருப்பினும், “ஒவ்வொரு 10 இத்தாலியர்களிலும் மூன்றுக்கும் அதிகமானவர்கள், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு தங்கள் கைகளை கழுவுவதில்லை; அதன் பின்பு உடனடியாக சாப்பிடச்சென்றாலும் அவர்கள் அவ்விதம் கைகளை கழுவுவதில்லை.” இந்தச் சுற்றாய்வின் முடிவுகள் மற்ற நாடுகளிலுள்ள இதைப்போன்ற சுற்றாய்வின் முடிவுகளுக்கு பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. “கைகள் கிருமிகளை உணவுக்கு கடத்தி, இவ்வாறு அடுத்தடுத்து மாசு ஏற்பட காரணமாகிறது” என்று மைக்ரோபயாலஜிஸ்ட் என்ரிகோ மல்யானோ விளக்குகிறார். இவ்வாறு கிருமிகள் கடத்தப்படுவது எவ்விதம் தடுக்கப்படலாம்? கைகளை, கழுவுகையில் நகங்களுக்குள் இருக்கும் அழுக்குகளையும் சேர்த்து கழுவுங்கள்; சோப்பு போட்டு, சுடுநீரிலோ வெதுவெதுப்பான நீரிலோ குறைந்தது 30 வினாடிகளுக்கு (பாக்டீரியாவை அழிப்பதற்கு தேவையான குறைந்தளவு நேரம்) கழுவுங்கள். இது 10-லிருந்து 15 வினாடிகளுக்கு கைகளை நன்றாக தேய்ப்பதையும் உட்படுத்துகிறது. உங்கள் கையை மேலிருந்து விரல்கள் வரைக்குமாக தண்ணீர் ஊற்றி கழுவி, பின்பு நன்றாக துடைக்குமாறு அந்தக் கட்டுரை சொல்கிறது.

குழந்தை துர்ப்பிரயோகமும் நோய்த்தடுப்பு ஆற்றலும்

ஜப்பானிலுள்ள மியே யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தபடி, ஒரு பிள்ளை அதிக காலத்திற்கு துர்ப்பிரயோகிக்கப்படும்போது, அதன் நோய்த்தடுப்பு ஆற்றல் சீர்கேடடைந்து, அப்பிள்ளையை நோய் எளிதாக தொற்றிக்கொள்கிறது. மூளை இரத்தக்கசிவாலோ, சரீரப்பிரகாரமாக மோசமாக தாக்கப்பட்டதன் மற்ற விளைவுகளாலோ மரித்துப்போயிருந்த, ஒரு மாதத்துக்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட 50 பிள்ளைகளின் பிரேதத்தை இந்த யுனிவர்சிட்டி ஆய்வுசெய்தது. “நோய்த்தடுப்பு அமைப்பின் இயக்கத்தை கட்டுப்படுத்தும்” பிள்ளைகளின் கழுத்து கணையச் சுரப்பிகள் “அவற்றினுடைய சாதாரண அளவைவிட பாதியாக சுருங்கிவிட்டிருந்தன” என்று மைனிச்சி டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. துர்ப்பிரயோகம் எந்தளவுக்கு நீடித்திருந்ததோ அந்தளவுக்கு, சுருங்குதலும் அதிகமாக இருக்கிறது. உண்மையில், “ஆறு மாதங்களுக்கும் மேலாக துர்ப்பிரயோகிக்கப்பட்ட பிள்ளையின் சுரப்பி, துர்ப்பிரயோகிக்கப்படாத பிள்ளையுடையதோடு ஒப்பிடுகையில் பதினாறில் ஒன்று என்ற அளவு சுருங்கி இருந்தது” என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. மன சம்பந்தமாக துர்ப்பிரயோகிக்கப்பட்டதாலோ, பெற்றோர் உணவு கொடுக்கத் தவறியதன் ஊட்டச்சத்துக்குறைவாலோ துன்புற்ற பிள்ளைகளின் சுரப்பிகளும் இதேபோன்று சுருங்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

மெசொப்பொத்தாமியாவுடன் சீனாவின் தொடர்பு

பூர்வ சீன நாகரிகம், மற்ற நாகரிகங்களின் செல்வாக்கின்றி சுதந்திரமாக, சீனாவின் ஹ்வாங் ஹ பள்ளத்தாக்கில் தோன்றியது என்று நீண்டகாலமாக கருதப்பட்டு வந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்புக்குப் பிறகு, இந்தக் கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஸெக்வான் மாகாணத்தில், செங்டூவுக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழு மதில் சூழ்ந்த பகுதிக்குள்ளே கட்டப்பட்டிருந்த ஒரு பழங்காலக் கோயிலைப் போன்றதன் இடிபாடுகளைக் கண்டுபிடித்திருப்பதாக பிரெஞ்சு பத்திரிகை கூர்யே இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது. கோயிலின் அமைப்பும் உருவமும் பூர்வ மெசொப்பொத்தாமியாவிலுள்ள கோவில் கோபுரங்களை வெகுவாக ஒத்திருக்கின்றன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். “[ஸெக்வான்], சிந்து மற்றும் மெசொப்பொத்தாமியா நாகரிகங்களோடு நெருங்கிய தொடர்பை உடையதாயிருந்த தனித்துவம் வாய்ந்த பூர்வ சீன நாகரிகத்தின் பிறப்பிடமாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது” என்று கியோடோ யுனிவர்சிட்டியின் பேராசிரியர் இச்சிரோ கோமினாமி தெரிவித்தார்.

ஹெப்படைட்டஸ்-பி இறப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹெப்படைட்டஸ் பி நோயால் இறக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. இத்தகைய இறப்புகளில் கிட்டத்தட்ட 1,50,000 இறப்புகள் இந்தியாவில் ஏற்படுகின்றன என்று குழந்தை மருத்துவர் ஜெகதீஷ் சின்னப்பா கூறுகிறார். பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்தாய்வில் அவர் பேசும்போது, இந்தியாவில் “3.5 கோடியிலிருந்து நான்கு கோடி பேர் HBV-யால் [ஹெப்படைட்டஸ்-பி வைரஸ்] பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; இது, உலகளாவிய எண்ணிக்கையில் பத்து சதவீதத்தை உள்ளடக்கும்” என தெரிவித்தார் என்று த டைம்ஸ் ஆஃப் இண்டியா குறிப்பிட்டது. “நாள்பட்ட ஈரல் நோயை உடைய இரண்டு நோயாளிகளில் ஒருவருக்கும், தொடக்கநிலை ஈரல் புற்றுநோயையுடைய பத்துபேரில் எட்டுபேருக்கும், இந்நோய்கள் வருவதற்கு ஹெப்படைட்டஸ் பி நோய்த்தொற்றே காரணம்” என்றும் அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.

வீட்டுக்குள்ளே காற்றுத் தூய்மைக்கேடு

இந்தியாவில், புது டில்லியிலுள்ள டாட்டா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டிடூட் (TERI) சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு, ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் இந்தியர்கள் காற்றுத் தூய்மைக்கேட்டினால் வரும் வியாதிகளால் இறக்கிறார்கள் என்று காட்டியது. அந்த ஆய்வின்படி, வீட்டுக்குள்ளேயிருக்கும் காற்றுத் தூய்மைக்கேடுதான் பிரதான காரணம் என்று தி இண்டியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது. நிலக்கரி, விறகு, சானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சமையல் செய்கின்ற சேரியில் வாழும் பெண்களே பெருமளவு ஆபத்தில் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியேயுள்ள காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்போது, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலிருக்கும் ஆபத்தைக் குறைப்பதற்காக சிறிதளவே முயற்சி செய்வதாக நிபுணர்கள் கருதினர். “மறைவிலிருக்கும் இப்பிரச்சினைக்கு எந்த உடனடித் தீர்வும் சாத்தியப்படாததாகத் தோன்றுகிறது” என்று TERI-யின் டைரக்டர் ஆர். கே. பச்சௌரி தெரிவித்தார்.

தண்ணீர் யுத்தங்கள்

மொராக்கோ, மர்ராகேஷியில் மார்ச் 1997-ல் நடைபெற்ற தண்ணீர் பற்றிய முதல் உலக மாநாட்டில் உலகளாவிய தண்ணீர் சப்ளையின் எதிர்காலத்தைக் குறித்து அச்சுறுத்தும் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டன. தூய்மைக்கேடு, வறட்சி, அதிகரித்துவரும் ஜனத்தொகை ஆகியவை தண்ணீருக்கான வள ஆதாரங்களின்மீது என்றுமில்லாத அதிக அழுத்தத்தை வைக்கின்றன. “தண்ணீருக்கான தேவை உலக ஜனத்தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வேகமாக வளர்ந்து வருகிறது” என்று பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் குறிப்பிடுகிறது. உலக வானிலை ஆராய்ச்சி கழகத்தின்படி, 2025-ம் ஆண்டிற்குள், உலக ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், தங்களுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்காத இடங்களில் வாழ்வர். நடுநிலையான தீர்வு கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், 21-ம் நூற்றாண்டில், தண்ணீர்தானே யுத்தத்திற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று சில அதிகாரிகள் பயப்படுகின்றனர். ஏற்கெனவே “ஐநா சச்சரவு ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள சுமார் 300 இடங்களை சுட்டிக்காட்டியுள்ளது” என்று லா மாண்ட் கூறுகிறது.

வெனிசுவேலாவில் கொடூர குற்றச்செயல்

இரண்டு கோடி ஜனத்தொகை உள்ள வெனிசுவேலாவில், ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 400 கொலைகள் நடக்கின்றன என்று எல் யூனிவர்சல் என்ற செய்தித்தாள் கூறுகிறது. அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறபடி, பொருளாதாரம் அல்ல, மாறாக சமுதாய, கலாச்சார அம்சங்களே குற்றச்செயல் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணங்களாக உள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம், மனிதாபிமான மதிப்பீடுகளும், வீட்டில் பெற்றோரின் பயிற்றுவிப்பும் இல்லாததுதான் வெனிசுவேலாவில் வன்முறையை அதிகரிக்கச்செய்கிறது என்று “குற்றமிழைப்பதற்கான பிரதான காரணம் வறுமை அல்ல” என்ற தலைப்பில் அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. நிலைமையை முன்னேற்றுவிப்பதற்காக, பொறுப்பான பெற்றோராயிருப்பதற்கு கற்பிக்கும்படியும், மக்களை தங்கள் குடும்பங்களோடு அதிகமாக ஒட்டியிருக்கும்படி உற்சாகப்படுத்தும்படியும் வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை பாணியை முன்னேற்றுவித்தல்

உலக சுகாதார அமைப்பு (WHO) அதனுடைய 1997-க்கான உலக சுகாதார அறிக்கையில் (ஆங்கிலம்) மனிதவர்க்கம், “வளர்ந்துவரும் துன்பத்தின் நெருக்கடி நிலையை” எதிர்ப்படுகிறது என்று எச்சரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், முத்திப்போன உடல்நலப் பிரச்சினைகளுடன்கூட புற்றுநோயும் இருதய நோயும் 2.4 கோடிக்கும் அதிகமான மக்களை விழுங்கி, இன்னும் கோடிக்கணக்கான அநேகருடைய துயரச்சுமையை அதிகரிப்பதாக அச்சுறுத்துகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில், பெரும்பாலான நாடுகளிலுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வந்த நாடுகளின் முக்கிய கொலையாளிகளாக இருக்கும் இருதய நோயும் ஸ்ட்ரோக்கும், ஏழை நாடுகளில் இன்னும் சர்வசாதாரணமாக ஆகக்கூடும். இவற்றிற்கு எதிராக செயல்படுவதாக, ஆரோக்கியமான வாழ்க்கை பாணியை முன்னேற்றுவிப்பதற்கும், பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கும் வியாதிகளை உண்டாக்கும் ஆரோக்கியமற்ற உணவுமுறை, புகைபிடித்தல், குண்டாயிருத்தல், உடற்பயிற்சியின்மை போன்ற ஆபத்தான அம்சங்களை குறைப்பதற்கும் “தீவிரமான மற்றும் நீடித்த” உலகளாவிய பிரச்சாரத்திற்கு WHO அழைப்பு விடுத்திருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்