உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/8 பக். 18-19
  • பேய்கள் இருப்பது உண்மையா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேய்கள் இருப்பது உண்மையா?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அசட்டை மனப்பான்மை
  • நம்பிக்கையின்மை இரண்டும்கெட்ட நிலையை ஏற்படுத்துகிறது
  • பொல்லாத மோசடிக்காரர்கள்
  • தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பிசாசுகளைவிட இயேசு பலமானவர்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • தேவதூதர்கள் யார்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/8 பக். 18-19

பைபிளின் கருத்து

பேய்கள் இருப்பது உண்மையா?

ஐரோப்பா முழுவதிலும், 17-வது, 18-வது நூற்றாண்டுகளில், சூனியக்காரிகள் வெறியுடன் துன்புறுத்தப்பட்டனர். சூனியக்காரிகளாக சந்தேகிக்கப்பட்ட அநேகர் பயங்கரமான சித்திரவதையை அனுபவித்தனர். பொய் குற்றச்சாட்டை எதிர்ப்பட்ட சிலர், சித்திரவதை மிகக் கொடூரமாக இருந்தமையால் அதிலிருந்து தப்பிக்க பில்லிசூனியத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். எண்ணிலடங்கா அநேகர் வதந்திகளின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டனர்.

பில்லிசூனியம் என்பது ஒருவகையான பேய்க்கொள்கை; அதற்கு எதிராக அந்தக் காலப்பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வேதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதைப்போல் தோன்றினாலும், அது நிச்சயமாகவே ஒருவித வெறியோடு செய்யப்பட்டது. சூனியக்காரிகளை அல்லது வேறு ஏதாவது ஆவியுலகத் தொடர்புள்ள ஆட்களை சித்திரவதை செய்யவோ கொலை செய்யவோ கிறிஸ்தவர்களுக்கு எந்தவித அதிகாரமும் அளிக்கப்படவில்லை. (ரோமர் 12:19) இதைப்பற்றி இன்றுள்ள மனப்பான்மை என்ன?

அசட்டை மனப்பான்மை

இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ள அநேகர் இப்படிப்பட்ட ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களை அவ்வளவு மோசமானதாகக் கருதுவதில்லை. தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் சிலர் மேலோட்டமாக ஜோதிடம், மந்திரம், பில்லிசூனியம் ஆகியவற்றில் ஈடுபடலாம்; அவர்கள் இப்படிப்பட்ட மாயமந்திர பழக்கங்களை பேய்க்கொள்கை என்பதாக நினைப்பதில்லை. சில சமயங்களில் பொழுதுபோக்கு உரிமையாளர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் தாங்கள் வெளிப்படையாகவே மாயமந்திரத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். சில புத்தகங்களும் திரைப்படங்களும் சூனியக்காரிகளையும் பில்லிசூனியக்காரர்களையும் குறித்து, “கவர்ச்சிகரமான, சற்றே வித்தியாசமான ஆட்கள், இவர்களுடைய ஆவியுலகத் தொடர்பு நடவடிக்கைகள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவை” என்று வருணிப்பதாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகவும் அவர்களுக்கு கற்பிப்பதற்காகவும் திட்டமிடப்பட்டிருக்கும் புத்தகங்கள் ஒருவேளை மாயமந்திரத்தை முன்னேற்றுவிக்கலாம்.

இப்படிப்பட்ட அலட்சியமான மற்றும் ஏனோதானோ என்ற மனப்பான்மை, பேய்கள் இருக்கின்றன என்பதை நம்பாமல் இருப்பதற்கு வழிநடத்தக்கூடும். பேய்கள் இருக்கின்றன என்பதையும் அவை நமக்கு தீங்கிழைக்க மும்முரமாக முயற்சிக்கின்றன என்பதையும் நீங்கள் நம்புகிறீர்களா? இன்று, அநேகர் தங்களுக்கு பேய்களோடு எவ்வித தொடர்பும் ஏற்பட்டதில்லை என்றோ, அவற்றின் நடவடிக்கைகளை கவனித்ததில்லை என்றோ சொல்லலாம். பேய்கள் இருப்பது உண்மையா?

நம்பிக்கையின்மை இரண்டும்கெட்ட நிலையை ஏற்படுத்துகிறது

பைபிளை நம்புவதாக உரிமைபாராட்டி அதேசமயம் பேய்கள் இருக்கின்றன என்று நம்பாதவர்கள் இரண்டும்கெட்ட நிலையை எதிர்ப்படுகின்றனர். அவர்கள் பேய்கள் இருப்பதை நம்பவில்லையென்றால் பைபிள் மீதும் ஓரளவிற்கு நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றனர். ஏன்? ஏனென்றால், மனிதர்களுக்கப்பாற்பட்ட சக்தியுடைய பொல்லாத ஆவிகளைப்பற்றி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் போதிக்கப்படுகிறது.

அதன் முதல் புத்தகமாகிய ஆதியாகமம், எப்படி ஒரு புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டி ஒரு சர்ப்பத்தை உபயோகித்து ஏவாளை ஏமாற்றி தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ய தூண்டினான் என்று விவரிக்கிறது. (ஆதியாகமம் 3:1-5) பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதல் இந்தப் பொல்லாத மோசடிக்காரனை அடையாளப்படுத்தி, “பழைய பாம்பு” என்றும் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான்” என்றும் எடுத்துக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) மற்ற தூதர்களும் கலகத்தில் ஈடுபடுவதற்கு, அவர்களை மயக்கி சிக்கவைப்பதில் சாத்தான் வெற்றி அடைந்தான். (யூதா 6) பைபிளில், இவ்விதம் வீழ்ச்சி அடைந்த தேவதூதர்கள் பேய்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பூமிக்கு அருகில் செயல்படுகின்றனர்; தேவனோடும் அவருக்கு ஊழியம் செய்பவர்களோடும் கடும்கோபமாக இருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:12.

மனிதர்கள்மீது செல்வாக்கு செலுத்துதல், தீங்கு விளைவித்தல், தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றிற்கு சாத்தானுக்கும் பேய்களுக்கும் வல்லமை இருக்கிறது. (லூக்கா 8:27-33) அவர்கள் மனிதனுடைய இயல்பான குணங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவனித்து அறிந்திருக்கிறார்கள். மனித பலவீனத்தை எவ்விதம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற தந்திரம் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஆண்களையோ பெண்களையோ அல்லது பிள்ளைகளையோ பிடித்தாட்டினர் அல்லது அவர்களை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர் என்பதற்கான ஆதாரத்தை பைபிள் அளிக்கிறது. (மத்தேயு 15:22; மாற்கு 5:2) அவர்களால் நோய்களை அல்லது குருடாக்கப்படுதல் போன்ற சரீர வேதனைகளையும் ஏற்படுத்தமுடியும். (யோபு 2:6, 7; மத்தேயு 9:32, 33; 12:22; 17:14-18) அவர்களால் ஜனங்களுடைய மனதையும் குருடாக்க முடியும். (2 கொரிந்தியர் 4:4) ‘கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடும்’ சாத்தானை தங்களுடைய தலைவனாக ஏற்றுக்கொண்ட பேய்களும் அவனைப்போலவே எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். (1 பேதுரு 5:8) பேய்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் அநேக பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. நீங்கள் பைபிளை நம்புகிறீர்கள் என்றால் காணக்கூடாத பொல்லாத ஆவி ஆட்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

பொல்லாத மோசடிக்காரர்கள்

அப்படியென்றால், உலகத்தில் தொடர்ந்து திகில் ஏற்படாமலே இப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த பேய்கள் எவ்விதம் இருக்க முடியும்? அவை இருக்கின்றன என்பதற்கான ஆதாரமும் அவர்களுடைய நடவடிக்கைகளும் ஏன் வெளிப்படையாகத் தெரிவதில்லை? பைபிள் பின்வருமாறு பதிலளிக்கிறது: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:14) பிசாசு ஒரு பெரிய மோசடிக்காரன். பேய்களுடைய நடவடிக்கை அநேகமாக யாருக்கும் தீங்கிழைக்காததைப்போல் அல்லது நன்மையளிப்பதைப்போல் பொய்த்தோற்றமளிக்கும். ஆகவே அதை உணர்ந்து கொள்வது கடினம்.

பைபிள் காலங்களில் செய்ததைப்போல் சாத்தானும் அவனுடைய பேய்களும் தொடர்ந்து ஜனங்களை வித்தியாசப்பட்ட முறைகளில் துன்புறுத்துகிறார்கள். இப்பொழுது மெய்கிறிஸ்தவர்களாக இருக்கும் அநேகர் ஒரு சமயத்தில் மாயமந்திரத்தில் ஈடுபட்டவர்கள்; பேய்களுடைய தாக்குதல் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதற்கு அவர்கள் சான்றளிப்பார்கள். பேய்கள் தங்களுடைய மனித ஆற்றலுக்கு மேற்பட்ட வல்லமையை, என்றும் இல்லாத அளவிற்கு இன்று உபயோகித்து ஜனங்களை நேரிடையாக மாயமந்திரத்தில் ஈடுபடுத்த முயலுவதைப்போல் தோன்றுகிறது. அவர்களுடைய வல்லமையை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. ஆனால், அவர்கள் ஜனங்களை திகிலடைய செய்து சாதிப்பதைவிட தேவனிடத்திலிருந்து வஞ்சகமாக கவர்ந்திழுப்பதன் மூலம் அதிகத்தை சாதிக்கிறார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும், ‘குடியிருக்கப்பட்ட பூமி முழுவதையும் தவறாக வழிநடத்துகிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9, NW) அவர்கள் ஆவிக்குரியதன்மையை சூழ்ச்சித் திறமிக்கவகையில் நயவஞ்சகமாக அடியோடு அழித்திட உள்நோக்கம் கொண்டிருக்கிறார்கள்.

பேய்கள் உண்மையில் இருக்கின்றன. ஜனங்களிடத்தில் மிக அதிகமாகக் காணப்படும் தணியாத ரத்த தாகத்தையும் அழிக்கும் தன்மையையும் வேறு எப்படி விளக்கமுடியும்? இயற்கையில் மனிதர்கள் சமாதானத்துடன் சந்தோஷமாக வாழவே விரும்புகிறார்கள். ஆனால் பேய்களுக்கு மனித சிந்தனையின்மீது செல்வாக்கு செலுத்தவும் மோசம்போக்கவும் வல்லமையிருக்கிறது; எனவே தீமையை ஆதரித்து முன்னேற்றுவிக்கின்றன.

ஆனால் யெகோவா சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறார்; பேய்களைவிட அதிக சக்தி வாய்ந்தவர். “பிசாசின் சூழ்ச்சிகளுக்கு” எதிராக தம்முடைய சக்தியையும் பாதுகாப்பையும் அளிக்க முன்வருகிறார். (எபேசியர் 6:11-18) ஆகவே பேய்களை நினைத்து நாம் பயந்து நடுங்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் தேவன் பின்வருமாறு வாக்குக்கொடுத்திருக்கிறார்: “ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7.

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

Sipa Icono

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்