உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 11/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • டிரூபடோர்கள்—காதல் கவி பாடுவோர் மட்டுமல்லர்
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 11/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தகவல் கவலை “தகவல் கவலை—உங்களை எவ்வாறு பாதிக்கிறது?” (ஜனவரி 8, 1998) என்ற தொடர் கட்டுரையை வாசித்தேன். செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மலைபோல் வந்துகுவிவதே தகவல்கள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கு உங்கள் பத்திரிகையும் காரணம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் இப்படி சொல்வது, “ஓரக்கண்ணனைப் பார்த்து ஒற்றைக்கண்ணன் பழிப்பது போல்” இல்லையா?

ஜே. கே., ஐக்கிய மாகாணங்கள்

எமது கட்டுரைகள் “பயனற்ற” தகவல்கள் வெள்ளம்போல் பெருக்கெடுப்பதை அம்பலப்படுத்தியது. இதற்கு “விழித்தெழு!” பத்திரிகை எவ்விதத்திலும் காரணமல்ல; ஏனெனில் ‘காரியங்களை ஆழ்ந்து ஆய்வு செய்து, தற்கால நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக்காட்டுவதே’ அதன் நோக்கம். இப்படிப்பட்ட தகவல்களை பயனற்றவை என அழைக்க முடியாது.—ED.

மரியாளும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவும் “உலகை கவனித்தல்” பகுதியில் வெளிவந்த “உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை முதலில் பார்த்தவர் மரியாளா?” (ஜனவரி 8, 1998) என்ற கட்டுரையை கண்டித்து இக்கடிதத்தை வரைகிறேன். உங்களுக்கு பைபிளே தெரியவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இது சத்தியத்தின் மீது உங்களுக்கு அக்கறையில்லை என்பதையும் காட்டுகிறது. சம்பவித்தவையும் சொல்லப்பட்டவையும் அநேகம், ஆனால் அவை அனைத்தும் பைபிளில் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக யோவான் 21:25-ஐ வாசியுங்கள்.

ஜே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

எங்கள் பத்திரிகை வாட்டிக்கன் “எல்’ ஓசர்வேட்டர் ரோமேனோ” என்ற செய்தித்தாளில் வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்தியில் குறிப்பிட்டிருந்ததையே அறிக்கை செய்தது. ‘உயிர்த்தெழுந்த இயேசுநாதர் முதலில் மரியாளுக்கு காட்சியளித்திருக்கலாம்’ என்ற போப் இரண்டாம் ஜான் பாலின் மேற்கோளே அதில் கொடுக்கப்பட்டிருந்தது. எமது வாசகர்கள் தங்களுடைய இஷ்டப்படி நம்புவதற்கு இருக்கும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் போப் சொன்ன கருத்திற்கு எந்த பைபிள் ஆதாரமும் இல்லை.—ED

டிரூபடோர்கள் “டிரூபடோர்கள்—காதல் கவி பாடுவோர் மட்டுமல்லர்” (பிப்ரவரி 8, 1998) என்ற கட்டுரை இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த கவி பாடுவோரின் பங்களிப்பை திறம்பட அலசி ஆராய்ந்தது. இலக்கியம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக, போர்ச்சுக்கீஸிய டிரூபடோர்களைப் பற்றி படித்துள்ளேன். அதில் உங்கள் கட்டுரை குறிப்பாக இந்த கலைநுட்பமிக்க இயக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. இப்படிப்பட்ட தரமிகு கட்டுரைகள் உங்கள் பத்திரிகையின் நம்பகத்தன்மைக்கு முத்திரை பதிக்கிறது.

ஆர். என். ஏ., பிரேஸில்

இந்த கட்டுரையை வாசிக்க துவங்குவதற்கு உண்மையிலேயே பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் வாசிக்க தொடங்கியபின் என்னால் கீழே வைக்கமுடியவில்லை. குறிப்பாக “பெண்களுக்கு முதலிடம்” என்ற கலாச்சாரத்தை யார் முதலில் உலகிற்கு அறிமுகமாக்கினவர்கள் என்பதை கற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஜப்பானில் பெண்களுக்கு முதலிடம் என்ற கலாச்சாரம் இல்லை. ஆனால் இளம் வயதிலிருந்தே ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்ட என் கணவர், நாங்கள் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்தே இக்கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார். (திருமணமாகி இப்போது எங்களுக்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.) நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்.

ஒய். என்., ஜப்பான்

குழந்தை தாய் மறு இணைவு “அரியதோர் மறு இணைவு” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரை என் மனங்கவர்ந்த கட்டுரை. என்னுடைய ஆரம்பத்தை தெரிந்துகொள்வது உணர்ச்சிரீதியாக பெரும் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. என் தாயும் தகப்பனும் திருமணமே செய்துகொள்ளவில்லை. என் அப்பா யார் என்பதை அறிய அடிக்கடி ஆவலாய் இருந்தேன், ஆனால் என் கேள்விகளுக்கு சுருக்கமான பதில்களே கிடைத்தன. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு என் அம்மாவிடம் என் அப்பாவின் முழுப்பெயர் என்ன என்று கேட்டேன். தொலைபேசி டைரக்டரியை உபயோகித்து அப்பாவின் தங்கையை அறிந்துகொள்ள முடிந்தது. அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அறிந்துகொண்டபோது எனக்கு ஒரே ஆச்சரியம்! என் அப்பா திருமணம் செய்துகொள்ளாமல் 1980-ல் இறந்துபோனார் என்பதை அவர் விளக்கினார். அப்படி இருந்தபோதிலும், நான் கஷ்டத்தில் இருந்த சமயத்தில் எனது அம்மாவும் அத்தையும் உண்மையான ஆறுதலாக இருந்திருக்கிறார்கள். உங்கள் கட்டுரைகளும் சரியான சமயத்தில் எனக்கு அருமருந்தாக இருந்தன.

எல். டி., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்