உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • பல் சீரமைப்பு என்ன உட்பட்டிருக்கிறது?
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • நீங்கள் பல்லைக் கடிக்கிறீர்களா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கூடுதல் மதிப்பெண் வாங்குதல் நான் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி. “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் பள்ளியில் இன்னும் நன்றாக படிக்க முடியுமா?” (மார்ச் 22, 1998) என்ற கட்டுரைக்கு நன்றி. என்னுடைய மதிப்பெண்கள் எப்பொழுதும் சராசரிக்கு மேல் இருந்தபோதிலும், இன்னும் நன்றாக படிக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை. ஆனால், ஆர்வத்தை தூண்டும், செயல்படச் செய்யும் இந்தக் கட்டுரை நியாயமான இலக்குகளை வைத்து இன்னும் நிறைய சாதிக்கலாம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள உதவியது.

பி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு 14 வயது. எப்படி படிப்பது என்பது எனக்கு ஒருகாலும் விளங்கவில்லை. படிக்கும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் கொஞ்சம்கூட பிரயோஜனப்படாது என தீர்மானித்தேன். ஆகவே அவற்றை படிப்பது அர்த்தமற்றது என நினைத்தேன். இந்தக் கட்டுரை என்னுடைய மனதை மாற்றியது. எப்படி படிப்பது என்பதை நடைமுறையான முறையில் விளக்கியதற்காக உங்களுக்கு நன்றி!

கே. எஃப்., ஜப்பான்

பல்லைக் கடித்தல் “நீங்கள் பல்லைக் கடிக்கிறீர்களா?” (மார்ச் 22, 1998) என்ற கட்டுரை எனக்கு பொருத்தமான கட்டுரை. நான் இந்தப் பிரச்சினையால் அவதியுறுவதால், இது தகவல் களஞ்சியமாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருப்பதைக் கண்டேன். இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் பிரசுரிப்பீர்கள் என நான் கனவிலும் நினைத்ததில்லை. இப்படி பலதரப்பட்ட தகவலை வழங்கி என்னைப் போல ஒவ்வொரு வாசகரையும் நீங்கள் கவருகிறீர்கள்.

ஏ. எம். என். சி., பிரேஸில்

பெண்கள் “பண்கள்—அவர்கள் எதிர்காலம் என்ன?” என்ற தொடர் கட்டுரைகளை ஏப்ரல் 8, 1998, விழித்தெழு!-வில் நான் வாசிக்க ஆரம்பித்தபோதே என் கண்களில் நீர் பெருகுமளவுக்கு என் நெஞ்சைத் தொட்டது. இந்தளவுக்கு ஒருபோதும் உணர்ச்சிரீதியாக தூண்டப்படவில்லை. ஒடுக்குமுறைக்கு ஒரு முடிவுகாலம் வருவதை எதிர்நோக்கியிருப்பதற்கு நீங்கள் அளித்த உற்சாகத்திற்காக மிக்க நன்றி.

சி. ஜே., ஐக்கிய மாகாணங்கள்

உலகமுழுவதிலும் உள்ள பல பெண்கள் படும் பாட்டைக் கண்டு என் உள்ளம் நெகிழ்ந்தது. இந்தப் பெண்கள் செய்யவேண்டிய எல்லா வேலைகளை—பெரும்பாலும் அந்தச் சுமைகளை தாங்களே சுமக்க வேண்டியதை—கேட்கையில் என்னுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. நான் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய், நான் எதிர்ப்படும் பல கஷ்டங்களை நினைத்து அடிக்கடி அழுகிறேன். மற்றவர்களைவிட என்னுடைய வாழ்க்கை எவ்வளவோ மேல் என்பதை உணர இந்தக் கட்டுரை உதவியது.

கே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

விதவை “பருவத்தை” சமாளித்தல் “‘இருளின் பள்ளத்தாக்கிலே’ ஆறுதலைக் கண்டடைதல்” (ஏப்ரல் 8, 1998) பர்ப்ரி சவீஸருடைய வாழ்க்கை சரிதைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னுடைய கணவரை இழக்கவில்லை, ஆனால் மூன்று வருடங்களுக்குள் பெற்றோரையும் அண்ணனையும் இழந்துவிட்டேன். ‘துக்கம் என்பது இடையிடையே வந்து போகும் ஒன்று’ என்று பர்ப்ரி சவீஸர் சொன்னார். என்னைப் போலவே வேறொருவர் உணருவதை வாசித்தபோது எனக்கு ஆறுதலாக இருந்தது.

எச். டி., ஹவாய்

நான் 17 வயதுடைய ஒரு முழுநேர பிரசங்கி, எனக்கு பெரும் பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும், சந்தோஷத்துடனும் உறுதியுடனும் இருப்பதற்கு இந்த சரிதை என்னை ஊக்கப்படுத்தியது. யெகோவா எனக்கு ஆதரவு தருகிறார், என்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதைப் எனக்குப் புரியச்செய்தது.

டி. சி., இத்தாலி

பல் சீரமைப்பு ஏப்ரல் 8, 1998 இதழில் வெளிவந்த “பல் சீரமைப்பு—என்ன உட்பட்டிருக்கிறது?” என்ற கட்டுரைக்கு நன்றி. எனக்கு 12 வயது, சமீபத்தில்தான் என்னுடைய பற்களுக்கு கம்பி போட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு அதிக அக்கறையில்லை. ஆனால், அவை எப்படி உதவும் என்பதையும் அநேகர் கம்பி போடுகிறார்கள் என்பதையும் உங்களுடைய கட்டுரை விளக்கியது. ஆகையால் நான் இப்பொழுது சங்கோஜப்படுவதில்லை.

ஜே. எல்., கனடா

பல் சீரமைப்பு கட்டுரையைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி! சிறுபிள்ளையாக இருந்த சமயத்திலிருந்தே அழகிய பற்களுடன் காட்சியளிக்க விரும்பினேன். சமீபத்தில் என்னுடைய முன் பற்களில் ஒன்று உடைந்துவிட்டது, அதற்காக அதிக செலவுசெய்து செயற்கைப் பல் பொருத்த வேண்டியதாயிருந்தது. இங்கே யுகோஸ்லாவியாவில் உள்ள பல் மருத்துவர்களிடம் தேவையான கருவிகள் இல்லை. பணம் இல்லாத எங்களைப் போன்றவர்களுக்கு தனியார் பல் மருத்துவர்களிடம் செல்வது கட்டுப்படியாகாது. நாம் அனைவரும் முத்துப் போன்ற பற்களை பெற்றிருக்கும் காலத்திற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை!

பி. ஈ., யுகோஸ்லாவியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்