உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 3 பக். 3
  • பிரிவின் கொடுமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிரிவின் கொடுமை
  • விழித்தெழு!—2018
  • இதே தகவல்
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2018
  • இந்த இதழில்: உயிர் உதிரும்போது...
    விழித்தெழு!—2018
  • பிரிவின் பாதிப்புகள்
    விழித்தெழு!—2018
  • “என்னுடைய துக்கத்தில் நான் எப்படி வாழ முடியும்?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 3 பக். 3
துக்கத்தில் இருக்கும் ஒருவர் ஹோட்டலில் தனியாக உட்கார்ந்திருக்கிறார்

உயிர் உதிரும்போது...

பிரிவின் கொடுமை

“சோஃபியாவுக்கும்a எனக்கும் கல்யாணமாகி 39 வருஷத்துக்கு அப்புறம் திடீர்னு அவ படுத்த படுக்கையாகி இறந்துட்டா. அந்த வலியை மறக்குறதுக்கு நிறைய வேலைகள இழுத்துப்போட்டு செஞ்சேன். என்னோட நண்பர்களும் எனக்கு ரொம்ப உதவி செஞ்சாங்க. இருந்தாலும், ஒரு வருஷத்துக்கு ஏதோ நடைப்பிணம் மாதிரிதான் சுத்திட்டு இருந்தேன். எப்போ, எப்படி இருப்பேன்னு எனக்கே தெரியாது. சோஃபியா இறந்து கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும், திடீர் திடீருன்னு அப்படியே உடைஞ்சுபோயிடறேன்.”​—கோஸ்டாஸ்.

நீங்களும் உயிருக்கு உயிரான ஒருவரை இழந்து தவிக்கிறீர்களா? அப்படியென்றால், கோஸ்டாஸ் சொல்வதை உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வேறெந்த வேதனையையும் சமாளித்துவிடலாம், ஆனால் கணவனையோ, மனைவியையோ, குடும்பத்தில் இருப்பவரையோ, அல்லது நண்பரையோ மரணத்தில் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே... அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது! நிபுணர்கள்கூட இதைத்தான் சொல்கிறார்கள். “ஈடு செய்யவே முடியாத பெரிய இழப்பு மரணம்தான், தாங்கவே முடியாத வேதனையைத் தருவதும் மரணம்தான்” என்று ஒரு பத்திரிகை (The American Journal of Psychiatry) சொல்கிறது. இந்த வலியில் துடிக்கிறவர்கள், ‘இனி நிம்மதியா இருக்கவே முடியாதா? எப்படித்தான் இந்த வேதனைய சமாளிப்பேனோ?’ என்றெல்லாம் யோசிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கு இந்தப் பத்திரிகை பதில் தரும். நீங்கள் சமீபத்தில் யாரையாவது மரணத்தில் பறிகொடுத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பிரிவு உங்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று அடுத்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு அடுத்து வரும் கட்டுரைகளில், வேதனை குறைய நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரிவின் கொடுமையை அனுபவிக்கிறவர்களுக்கு இந்தக் கட்டுரைகள் ஆறுதலையும் நடைமுறையான உதவியையும் தரும் என்று மனதார நம்புகிறோம்.

a இந்தக் கட்டுரைகளில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்