உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 3 பக். 12-13
  • அன்பு காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பு காட்டுங்கள்
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினைக்கு ஆணிவேர்
  • பைபிள் ஆலோசனை
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • அவர்கள் பாகுபாட்டைத் தகர்த்தெறிந்தார்கள்
    விழித்தெழு!—2020
  • பாகுபாடு​—⁠உங்களைத் தொற்றியிருக்கிறதா?
    விழித்தெழு!—2020
  • அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன்
    பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • தப்பெண்ணத்தின் வேர்கள்
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 3 பக். 12-13
மளிகை சாமான்களை எடுத்துக்கொண்டு படி ஏற காக்கேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டிக்கு ஒரு இந்தியப் பெண் உதவுகிறார்.

அன்பு காட்டுங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

பாகுபாடு நம்முடைய மனதிலிருந்து அவ்வளவு சுலபமாக மறைந்துவிடாது. நம் உடம்பில் தொற்றியிருக்கும் வைரஸ் கிருமியை விரட்டியடிக்க நேரமும் முயற்சியும் தேவைப்படுவது போல, பாகுபாடு என்ற தொற்றையும் நம் மனதிலிருந்து விரட்டியடிக்க நேரமும் முயற்சியும் தேவை. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பைபிள் ஆலோசனை

படத்தொகுப்பு: 1. கையில் காஃபி கப்புகளோடு வரும் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் கதவைத் திறந்துவிடுகிறார். 2. அந்தக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் தன்னோடு வேலை பார்ப்பவர்களுக்கு காஃபி கொடுக்கிறார். அவர்களில் அந்த இந்தியப் பெண்ணும் இருக்கிறார்.

“அன்பைக் காட்டுங்கள். எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.”—கொலோசெயர் 3:14.

இதன் அர்த்தம் என்ன? அன்போடு உதவி செய்வது மக்களை ஒன்றுசேர்க்கும். மற்றவர்களிடம் அதிகமாக அன்பு காட்டும்போது, பாகுபாடு நம் மனதிலிருந்து படிப்படியாக மறைந்துவிடும். அன்பு நம் இதயத்தில் குடியேறினால், பகையும் வெறுப்பும் வெளியேறிவிடும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

படத்தொகுப்பு 1. ஒரு இந்தியப் பெண்ணின் உதவியோடு காக்கேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டி மளிகை சாமான்களை எடுத்துக்கொண்டு படி ஏறி வருகிறார். 2 காக்கேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டி தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு, அதாவது ஏற்கெனவே படத்தில் காட்டப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த நபருக்கு, பிஸ்கட் கொடுக்கிறார்.

ஒரு பிரிவைச் சேர்ந்த ஆட்களிடம் உங்களுக்குத் தப்பான அபிப்பிராயம் இருக்கிறதென்றால், அவர்களிடம் எப்படியெல்லாம் அன்பு காட்டலாம் என்று யோசித்துப்பாருங்கள். அதற்காக, நிறைய செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. இவற்றில் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்:

அன்போடு சின்ன சின்ன விஷயங்களைச் செய்தால் பாகுபாடு உங்களைவிட்டு பறந்துவிடும்

  • அவர்களுக்காக கதவைத் திறந்துவிடுவதன் மூலமும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது உட்காருவதற்கு உங்கள் இருக்கையைக் கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள்.

  • அவர்களுக்கு உங்களுடைய மொழி சரளமாகப் பேசத் தெரியவில்லை என்றாலும் அவர்களிடம் ஏதாவது பேச முயற்சி செய்யுங்கள்.

  • அவர்கள் செய்கிற சில விஷயங்கள் உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் பொறுமையாக இருங்கள்.

  • தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி உங்களிடம் சொல்லும்போது அனுதாபத்தோடு கேளுங்கள்.

நிஜ அனுபவம்: நஸரே (கினி பிஸ்ஸாவ்)

“வேற நாட்டுலருந்து குடிமாறி வந்தவங்கள பத்தி ஒருசமயம் எனக்கு தப்பான எண்ணம் இருந்துச்சு. அந்த ஆட்கள்ல நெறய பேர் பணத்துக்காகவும், உதவிக்காகவும் அரசாங்கத்த ஏமாத்துவாங்க, சட்டவிரோதமான செயல்கள செய்வாங்கனல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். அதனால, எனக்கு அவங்கள பிடிக்கல. ஆனாலும், எனக்குள்ள பாகுபாடு இருக்குறதா நான் நெனக்கில. ஏன்னா, நெறய பேருக்கு அந்த ஆட்கள பத்தி தப்பான எண்ணம் இருந்துச்சு.

போகப் போக, எனக்குள்ள பாகுபாடு இருக்குறத புரிஞ்சிக்கிட்டேன். பைபிள்ல இருக்குற நடைமுறையான ஆலோசனைகள், அவங்ககிட்ட ரொம்ப அன்பா நடந்துக்க எனக்கு உதவி செஞ்சுது. இப்பல்லாம் நான் அவங்கள ஒதுக்குறதில்ல, அவங்ககிட்ட நல்லா பேசுறேன். அவங்க ஒவ்வொருத்தரையும் பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்றேன். இப்போ, அவங்கமேல எனக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு. அவங்களோட பழகுறது எனக்கு பிடிச்சிருக்கு.”

“அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன்”

ரஃபீக்கா மோரிஸ்

ரஃபீக்கா என்ற பெண் இனவெறிக்கு எதிராகப் போராடுகிற ஒரு இயக்கத்தில் சேர்ந்தார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறியது. அங்கே வித்தியாசப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருப்பதை அவர் கண்கூடாகப் பார்த்தார்.

ரஃபீக்கா மோரிஸ்: அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன் என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்