உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g21 எண் 3 பக். 8-9
  • விஞ்ஞானிகளால் விளக்க முடியாதவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விஞ்ஞானிகளால் விளக்க முடியாதவை
  • விழித்தெழு!-2021
  • இதே தகவல்
  • கருவியல் நிபுணர் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்...
    விழித்தெழு!—2016
  • படைப்பாளர் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கூட்ட முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • உயிர் எப்படி உருவானது?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • படைப்பாளர்மீது பலமான விசுவாசத்தை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
விழித்தெழு!-2021
g21 எண் 3 பக். 8-9
அறிவியல் ஆசிரியர் தன் மாணவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

விஞ்ஞானிகளால் விளக்க முடியாதவை

விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருப்பது என்னவோ உண்மைதான்! ஆனால், நிறைய முக்கியமான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி விஞ்ஞானத்தால் விளக்க முடியுமா? இல்லை! பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடம் இதற்குப் பதில் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், டார்ட்மவுத் கல்லூரியின் வானவியல் பேராசிரியர் மார்செலோ க்லெய்செர், “இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை இதுவரை எங்களால் விளக்கவே முடியவில்லை” என்று சொல்கிறார். இவருக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை!

சைன்ஸ் நியூஸ் பத்திரிகை உயிர் உருவானதைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “பூமியில் உயிர் இப்படித்தான் உருவானது என்று திட்டவட்டமாக சொல்வது கஷ்டம்! ஏனென்றால், பூமி உருவான சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற பாறைகளும் புதைபடிவங்களும் காலப்போக்கில் இல்லாமலே போய்விட்டது.” இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

‘உயிர் உருவாகியிருக்கிறது என்றால், அதை உருவாக்கியவர் யார்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இது சம்பந்தமாக இன்னும் சில கேள்விகளும் உங்களுக்கு வரலாம். ‘ஞானமான அன்பான படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்றால் மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு ஏன் சும்மா இருக்கிறார்? ஏன் இத்தனை மதங்களை விட்டுவைத்திருக்கிறார்? அவரை வணங்குகிறவர்கள் தவறு செய்யும்போது ஏன் கண்டும்காணாமல் இருக்கிறார்?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானத்தில் பதில் இல்லை. அதற்காக எங்குமே பதில் இல்லை என்று சொல்ல முடியாது. பைபிளில் பதில் இருக்கிறது! அந்தப் பதில் ரொம்பத் திருப்தியாக இருப்பதாக நிறைய பேர் நினைக்கிறார்கள்.

சில விஞ்ஞானிகள் நேரம் எடுத்து பைபிளைப் படிக்கிறார்கள். படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். அதைப் பற்றி அவர்களே என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள jw.org வெப்சைட்டில் உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன என்ற வீடியோ தொடரைப் பாருங்கள்.

ஒரு முடிவுக்கு வர விஞ்ஞானமும் பைபிளும் அவர்களுக்கு உதவியது

ஜார்ஜ் கோய்டன், வேதியியல் ஆராய்ச்சியாளர்

“வித்தியாசமான வேதிப்பொருள்களை ஒன்றுசேர்த்து மூலக்கூறுகளைத் தயாரிப்பதுதான் என்னுடைய வேலை. அது, சதுரங்க விளையாட்டு (chess) மாதிரி இருக்கும்! ஒவ்வொரு அடியையும் ரொம்ப கவனமாக எடுத்துவைக்க வேண்டும். செயல்முறையில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால்கூட மூலக்கூறு உருவாகாது. என் வேலை சிக்கலானது. ஆனால், செல்களுக்குள் நடக்கிற வேதியியல் மாற்றங்களோடு ஒப்பிடும்போது அது எளிமையானதுதான்! ஏனென்றால், சிக்கலான மூலக்கூறுகள் உருவாவதற்கு செல்களுக்குள் ஆயிரக்கணக்கான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. இதையெல்லாம் பார்த்து ஞானமுள்ள ஒரு வேதியியல் அறிஞர், அதாவது படைப்பாளர், இருக்கிறார் என்று நம்ப ஆரம்பித்தேன்.

பைபிளைப் படித்தபோது அது ஒரு சாதாரண புத்தகம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அது கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பே எழுதி முடிக்கப்பட்டது. ஆனாலும், அதன் ஆலோசனைகள் நம் காலத்துக்கு ஒத்துவருகிறது. குடும்பத்திலும் வேலையிலும் மற்றவர்களிடத்திலும் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது. மனிதர்களைவிட ஞானமுள்ள ஒருவரால்தான் இதுபோன்ற முத்தான ஆலோசனைகளைக் கொடுக்க முடியும் என்று புரிந்துகொண்டேன்.”

யான்-டெர் ஷு, கருவியல் ஆராய்ச்சியாளர்

“ஒரு கரு வளரும்போது செல்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. இப்படி நடக்கும்போதுதான் குறிப்பிட்ட செல்கள் நரம்புகளாக, தசைகளாக, எலும்புகளாக, இரத்தமாக, திசுக்களாக உருமாற முடியும். கடைசியில், ஒரு குழந்தை உருவாகும். கருவின் வளர்ச்சி இப்படி சீராக நடப்பதற்கு எது உதவி செய்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இன்றுவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதிலிருந்து ரொம்ப புத்திசாலியான ஒருவர்தான் உயிரை வடிவமைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சங்கீதம் 139:15, 16-ல் ஒரு கரு எப்படி வளர்ச்சி அடைகிறது என்பதைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. சமீப வருஷங்களில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததோடு இது ஒத்துப்போகிறது. பல நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பதிவு எப்படி இவ்வளவு சரியாக இருக்கிறது? நிச்சயமாக அதை எழுதியவருக்குப் படைத்தவர்தான் சொல்லியிருக்க வேண்டும்.”

ரோசியோ பிக்காடோ ஹெரேரோ: வேதியியல் ஆசிரியர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார் என்ற வீடியோவை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்