பாட்டு 127
திரளான சகோதரர்
1. திரளான சகோதரர்
சூழ்ந்து நிற்கின்றனர்.
உண்மை சாட்சிகளாவர்,
உத்தமமானவர்.
சகோதரரின் கூட்டம்,
ஆம், மாபெரும் கூட்டம்.
எல்லா நாட்டிலும் துதிப்பர்.
தேவனைச் சேவிப்பர்.
2. திரளான சகோதரர்,
வெண்வஸ்திரம் பெற்றனர்.
தேவாலயத்தில் நிற்பர்.
நாளெல்லாம் சேவிப்பர்.
திரளாய் சகோதரர்
நன்றி சொல்கின்றனர்.
தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும்
பெற்ற இரட்சிப்புக்கும்.
3. திரளான சகோதரர்
—பிரசங்கிக் கின்றனர்.
“நித்தியநற்செய்தி” சொல்வர்.
பிறர் கேட்கச்செய்வர்.
எதிர்ப்புகள் கண்டனர்,
ஊழியம் தொடர்ந்தனர்.
புல்லுள்ள இடத்தில் மேய்ப்பார்,
கிறிஸ்து ஓய்வளிப்பார்.