உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • gf பாடம் 10 பக். 16-17
  • உண்மை மதத்தை கண்டுபிடிப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மை மதத்தை கண்டுபிடிப்பது எப்படி?
  • கடவுளுடைய நண்பர்
  • இதே தகவல்
  • கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பொய் மதத்தை விட்டுவிலகுங்கள்!
    கடவுளுடைய நண்பர்
  • உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
கடவுளுடைய நண்பர்
gf பாடம் 10 பக். 16-17

பாடம் 10

உண்மை மதத்தை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் கடவுளுடைய நண்பராக விரும்பினால், கடவுள் ஏற்றுக்கொள்ளும் மதத்தைப் பின்பற்ற வேண்டும். ‘உண்மை வணக்கத்தார்’ கடவுளை ‘சத்தியத்தோடு’ வழிபடுவார்கள் என இயேசு சொன்னார். (யோவான் 4:23, 24, NW) கடவுளை வழிபடுவதற்கு ஒரேவொரு சரியான வழியே இருக்கிறது. (எபேசியர் 4:4-6) உண்மை மதம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது, பொய் மதமோ அழிவுக்கு வழிநடத்துகிறது.​—⁠மத்தேயு 7:13, 14.

உண்மை மதத்தை கண்டுகொள்ள அதைப் பின்பற்றுகிறவர்களை கூர்ந்து கவனியுங்கள். யெகோவா நல்லவர், எனவே உண்மை வணக்கத்தாரும் நல்ல ஜனங்களாக இருக்க வேண்டும். நல்ல ஆரஞ்சு மரம் நல்ல ஆரஞ்சு பழங்களை தருகிறது, அதுபோல உண்மையான மதம் நல்ல ஜனங்களை உருவாக்குகிறது.​—⁠மத்தேயு 7:15-20.

யெகோவாவின் நண்பர்கள் பைபிள் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். கடவுள் கொடுத்த புத்தகமே பைபிள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். வாழ்க்கையை நடத்துவதற்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் பைபிள் அறிவுரைகளை தருகிறது, அவற்றை யெகோவாவின் நண்பர்கள் பின்பற்றுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) தாங்கள் பிரசங்கிப்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

யெகோவாவின் நண்பர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். இயேசு மற்றவர்களுக்கு கடவுளைப் பற்றி போதித்தார், நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்தினார், இவ்வாறு மக்களிடம் அன்பு காட்டினார். உண்மை மதத்தை பின்பற்றுவோரும் பிறரிடம் அன்பு காட்டுகிறார்கள். இயேசுவைப் போலவே, இவர்களும் ஏழைகளையோ மற்ற இனத்தவர்களையோ தாழ்வாக கருதுவதில்லை. ஒருவருக்கொருவர் காட்டும் அன்பை வைத்து தம்முடைய சீஷர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் என இயேசு சொன்னார்.​—⁠யோவான் 13:⁠35.

கடவுளுடைய நண்பர்கள் யெகோவா என்ற அவருடைய பெயரை கனம் பண்ணுகிறார்கள். யாராவது உங்களுடைய பெயரை பயன்படுத்த மறுத்தால், அவர் உங்களுடைய நெருங்கிய நண்பராக இருப்பாரா? இல்லை! நமக்கு நண்பர் இருந்தால், நாம் அவருடைய பெயரை பயன்படுத்துவோம், அந்த நண்பரை பற்றிய நல்ல விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வோம். ஆகவே, கடவுளுடைய நண்பராக இருக்க விரும்புகிறவர்கள் அவருடைய பெயரை பயன்படுத்த வேண்டும், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டும். நாம் அப்படி செய்யவே யெகோவா விரும்புகிறார்.​—⁠மத்தேயு 6:9; ரோமர் 10:13, 14.

இயேசுவை போலவே, கடவுளுடைய நண்பர்களும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மக்களுக்கு கற்பிக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யம் என்பது பரலோக அரசாங்கம், இது பூமியை பரதீஸாக மாற்றும். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை கடவுளுடைய நண்பர்கள் மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.​—⁠மத்தேயு 24:⁠14.

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய நண்பராக இருப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பைபிளை மதிக்கிறார்கள், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள், கனம் பண்ணுகிறார்கள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கிறார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகள் உண்மை மதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்