பகுதி 1
‘பிரமிக்க வைக்கிற பலம்’
இந்தப் பகுதியில், படைப்பதற்கும் அழிப்பதற்கும் காப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் யெகோவாவிற்கு இருக்கும் வல்லமைக்கு அத்தாட்சியளிக்கும் பைபிள் பதிவுகளை சிந்திப்போம். ‘பிரமிக்க வைக்கிற பலம்படைத்த’ யெகோவா தேவன் எவ்வாறு தமது ‘அபாரமான ஆற்றலை’ பயன்படுத்துகிறார் என்பதை புரிந்துகொள்கையில் நம் இருதயம் பயபக்தியாலும் பிரமிப்பாலும் பொங்கி வழியும்.—ஏசாயா 40:26.