உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rk பாகம் 6 பக். 15-17
  • இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?
  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • இதே தகவல்
  • மனிதன் பரதீஸில் வாழ்க்கையை அனுபவிப்பது கடவுளுடைய நோக்கம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • பைபிள் குறிப்பிடுகிற பரதீஸ் எங்கே உள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ஏதேன் தோட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
    காவற்கோபுரம்: ஏதேன் தோட்டம்—நிஜமா கதையா?
மேலும் பார்க்க
உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
rk பாகம் 6 பக். 15-17

பாகம் 5

இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?

மனிதன் குடியிருப்பதற்காகவே இறைவன் இந்தச் சிங்கார பூமியைச் சிருஷ்டித்தார். ‘வானங்கள் யெகோவாவுடையவை; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்’ என்று வேதம் சொல்கிறது.—சங்கீதம் 115:16.

முதல் மனிதன் ஆதாமைப் படைப்பதற்கு முன்பு, இறைவன் இந்தப் பூமியில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, ஏதேன் என்ற ஓர் அழகிய தோட்டத்தை உருவாக்கினார். யூப்ரடீஸ் (ஐபிராத்து), டைகிரீஸ் (இதெக்கேல்) என்ற நதிகள் அந்த ஏதேன் தோட்டத்திலிருந்து பிறந்ததாக வேதவசனங்கள் சொல்கின்றன.a ஏதேன் தோட்டம் இன்றைய கிழக்கு துருக்கியில் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆம், ஏதேன் தோட்டம் இந்தப் பூமியில் உண்மையிலேயே இருந்தது!

இறைவன்... ஆதாமைப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அவன் “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” செய்தார். (ஆதியாகமம் 2:15) பிறகு, ஆதாமுக்குத் துணைவியாக ஹவ்வா என்ற ஒரு பெண்ணைப் படைத்தார். அந்தத் தம்பதியரிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28, ERV) ஆகவே, இறைவன் இந்த ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்தார்’ என்பது தெளிவாகத் தெரிகிறது.—ஏசாயா 45:18.

ஆனால், ஆதாமும் ஹவ்வாவும் வேண்டுமென்றே இறைவனின் சட்டத்தை மீறி அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அதனால், இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்; இன்பவனம் கைவிட்டுப் போனது. ஆதாம் செய்த பாவத்தினால் வந்த விளைவுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. வேதவசனம் சொல்கிறபடி, “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 5:12.

யெகோவா தமது ஆதி நோக்கத்தைக் கைவிட்டுவிட்டாரா, அதாவது பூமியை இன்பவனமாக்க வேண்டும்... அதில் சந்தோஷமுள்ள மக்கள் வாழ வேண்டும்... என்ற நோக்கத்தைக் கைவிட்டுவிட்டாரா? இல்லை! இறைவன் சொல்கிறார்: ‘என் வாயைவிட்டு வரும் வார்த்தைகள் எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது. எனது வார்த்தைகள் எதைச் செய்ய வேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அதை . . . வெற்றிகரமாய்ச் செய்யும்!’ (ஏசாயா 55:11, ERV) ஆம், பூமி மீண்டும் இன்பவனமாக மாறும்!

சரி, இன்பவனத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? பரிசுத்த வேதம் தரும் வாக்குறுதிகளைப் பற்றி அடுத்த இரண்டு பக்கங்களில் கவனியுங்கள்.

a ஆதியாகமம் 2:10-14 சொல்கிறது: ‘தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், . . . இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், . . . மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் [டைகிரீஸ்] என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடுகிறது; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து [யூப்ரடீஸ்] என்று பேர்.’ முதல் இரண்டு ஆறுகள் இன்றைக்கு எங்கு பாய்கின்றன, என்ன பெயரில் அழைக்கப்படுகின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரியாது.

உங்கள் பதில்?

  • இறைவன் என்ன நோக்கத்தோடு பூமியையும் மனிதனையும் படைத்தார்?

  • இறைவன் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

பூஞ்சோலை பூமியில் மக்கள்

பூமி இன்பவனமாய் மாறும்போது...

இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்: “கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29.

வயோதிபமோ ஊனமோ மரணமோ இருக்காது: ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்.’ (ஏசாயா 33:24) ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் இறைவன் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.’—வெளிப்படுத்துதல் 21:4.

அமோக விளைச்சல் இருக்கும்: ‘பூமி தன் பலனைத் தரும், இறைவன், நம் இறைவன், நம்மை ஆசீர்வதிப்பார்.’—சங்கீதம் 67:6, NW.

அழகிய வீடுகள், திருப்தியான வேலை: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.

போரோ குற்றச்செயலோ வன்முறையோ இருக்காது: யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9) ‘துன்மார்க்கர் பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.’—நீதிமொழிகள் 2:22.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்