உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rk பாகம் 13 பக். 30-31
  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இறைநம்பிக்கையில் தொடர்ந்து வளருங்கள்
  • உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?
    உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • ஒரு பரதீஸ் பூமியில்என்றுமாக வாழுங்கள்
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சி
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
மேலும் பார்க்க
உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
rk பாகம் 13 பக். 30-31

பாகம் 13

உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!

“நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என்று பரிசுத்த வேதம் சொல்கிறது. (ரோமர் 1:17, பொ.மொ.) அற்புதமான இந்த வாக்குறுதியில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். எப்படி?

மேசியாவாகிய இயேசு பூமியில் தமது வேலையை முடித்தபின், இறைவனுடன் இருப்பதற்காக சுவர்க்கத்திற்குச் சென்றார். அவரது சீடர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, “மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்; ஒரு மேகம் அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்தது.” (அப்போஸ்தலர் 1:9) சுவர்க்கத்தில், இறைவன் அவரை வலிமைமிக்க ஓர் அரசராக முடிசூட்டினார். வெகு விரைவில், ‘மனிதகுமாரன் [இயேசு] தம்முடைய மகிமையில் எல்லாத் தூதர்களோடும் வருவார்;’ அப்போது, “தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார்.” (மத்தேயு 25:31, 32) இது எப்போது நடக்கும்?

இந்த உலகம் கொந்தளிப்புமிக்க ஒரு காலத்தை எதிர்ப்படும் என்று பரிசுத்த வேதம் முன்னரே சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தைப் பார்க்கும்போது தேசங்களுக்கு மேசியா நியாயத்தீர்ப்பு வழங்கும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் கொந்தளிப்புமிக்க காலத்தைக் கண்டுகொள்வதற்கு இயேசு சில அடையாளங்களைக் கொடுத்தார். “தேசத்திற்கு விரோதமாக தேசமும், அரசாங்கத்திற்கு விரோதமாக அரசாங்கமும் எழும்பும்; பயங்கர பூகம்பங்கள் ஏற்படும்; அடுத்தடுத்து பல இடங்களில் கொள்ளைநோய்களும் பஞ்சங்களும் உண்டாகும். திகிலுண்டாக்கும் காட்சிகள் தெரியும்” என்று சொன்னார்.—லூக்கா 21:7, 10, 11.

இன்று குற்றச்செயல், நோய், போர், வன்முறை, பஞ்சம் போன்ற பிரச்சினைகளைப் பார்க்கிறோம்

மேசியா விரைவில் தேசங்களை நியாயந்தீர்ப்பார் என்பதை இன்றைய உலக நிலைமை சுட்டிக்காட்டுகிறது

இயேசுவின் வார்த்தைகள் நம் கண்முன்னால் நிறைவேறுவதை இன்றைக்கு நாம் தெள்ளத்தெளிவாகக் காணலாம். சீக்கிரத்தில், கெட்டவர்களை அழிக்க இயேசு வருவார். கடைசியில், சைத்தானும் அழிக்கப்படுவான்! இந்த முழு பூமியும் இன்பவனமாய் மாறும். எல்லாரும் சமாதானமாய் வாழ்வார்கள்; ஏன், மிருகங்களும்கூட மனிதருடன் கொஞ்சிக் குலவும். ‘அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான். . . . தீங்கு செய்பவர்களோ கேடு செய்பவர்களோ அங்கு இருக்க மாட்டார்கள்.’ (ஏசாயா 11:6, 9) ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்; . . . அப்பொழுது குருடரின் கண்களும் செவிடரின் செவிகளும் திறக்கப்படும்.’ (ஏசாயா 33:24; 35:5) இறந்தவர்களும்கூட உயிர்பெற்று வருவர். ‘யெகோவா எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’ “இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.” (ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:4) இறைவன் இந்தப் பூமியை என்ன நோக்கத்திற்காக படைத்தாரோ அந்த நோக்கம் அப்போது நிறைவேறும். எவ்வளவு அற்புதமான எதிர்காலம்!

இறைநம்பிக்கையில் தொடர்ந்து வளருங்கள்

எப்படிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இன்பவனத்தில் இறைவன் வாழ்வளிப்பார்? இறைநம்பிக்கையுள்ள மக்களுக்கே, ஆம் உண்மையான இறைநம்பிக்கையுள்ள மக்களுக்கே, அதில் வாழ்வளிப்பார்!

நினைவில் வையுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை என்பது இறைவனுடைய வார்த்தையில் உள்ள திருத்தமான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆகவே, இறைவனையும் இயேசுவையும் பற்றி இன்னும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள்!

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்

இறைநம்பிக்கையுள்ள மக்கள் இன்பவனத்தில் என்றென்றும் வாழ்வார்கள்!

உண்மையான இறைநம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது, நீதியான செயல்களைச் செய்வதும் அவசியம். ‘செயல்கள் இல்லாத இறைநம்பிக்கை செத்தது’ என இறை வார்த்தை சொல்கிறது. (யாக்கோபு 2:26, பொ.மொ.) அப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்யும்போது... இறைவனுடைய அற்புதமான பண்புகளை, ஆம் வல்லமை, நீதி, ஞானம், அன்பு போன்ற பண்புகளை, நீங்கள் காட்டுவீர்கள். இப்படிப்பட்ட இறைப்பண்புகளை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!

உண்மையான இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு அளவிலா ஆசீர்வாதங்களை அள்ளித்தரும். சொல்லப்போனால், அதுவே சந்தோஷமான வாழ்வுக்கு உங்களை வழிநடத்திச் செல்லும்—இன்றும் என்றும்!

உங்கள் பதில்?

  • இப்போது இயேசு எங்கே இருக்கிறார்?

  • தேசங்களை நியாயந்தீர்க்க இயேசு விரைவில் வருவார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

  • இயேசு வரும்போது என்ன செய்வார்?

  • இறைநம்பிக்கையில் நீங்கள் எப்படித் தொடர்ந்து வளரலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்