பாகம் 5
பெரிய வெள்ளம் வந்தபோது கடவுள் சொன்னதை யார் கேட்டார்கள்?
நோவா காலத்தில் இருந்த நிறைய பேர் கெட்டதுதான் செய்தார்கள். ஆதியாகமம் 6:5
ஆதாம்-ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். பூமியில் மக்களின் எண்ணிக்கை அதிகமானது. காலப்போக்கில், சில தேவதூதர்கள் சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டார்கள்.
பெண்களைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக அவர்கள் மனித உருவத்தில் பூமிக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த பையன்கள் ரொம்ப உயரமாக, பலசாலிகளாக இருந்தார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள்.
பூமியிலிருந்த நிறைய பேர் கெட்டவர்களாக இருந்தார்கள். ‘மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டார்கள், அவர்களுடைய எண்ணங்கள் எப்போதும் மோசமாக இருந்தது’ என்று பைபிள் சொல்கிறது.
கடவுள் சொன்னதைக் கேட்டு நோவா ஒரு பேழையைக் கட்டினார். ஆதியாகமம் 6:13, 14, 18, 19, 22
நோவா ரொம்ப நல்லவர். யெகோவா அவரிடம், ‘பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்து, கெட்டவர்கள் எல்லாரையும் அழிக்கப்போகிறேன்’ என்று சொன்னார்.
ஒரு பெரிய கப்பலை, அதாவது பேழையை, நோவாவிடம் கட்டச் சொன்னார். அதற்குள்ளே அவருடைய குடும்பத்தாரையும் எல்லா வகையான மிருகங்களையும் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்.
பெரிய வெள்ளம் வரப்போகிறது என்று எல்லாரிடமும் நோவா சொன்னார். ஆனால், அவர் சொன்னதை யாருமே கேட்கவில்லை. அவரைக் கேலி செய்தார்கள், திட்டினார்கள்.
அந்தப் பேழையைக் கட்டி முடித்ததும், மிருகங்களை நோவா உள்ளே கொண்டுபோனார்.