உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 7 பக். 16-17
  • இயேசு யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு யார்?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • பாகம் 7
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இயேசு கிறிஸ்து யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இயேசு கிறிஸ்து—கடவுளால் அனுப்பப்பட்டாரா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 7 பக். 16-17

பாகம் 7

இயேசு யார்?

இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பினார். 1 யோவான் 4:9

பரலோகத்தில் கடவுளுடைய வலது பக்கத்தில் இயேசு இருக்கிறார்

யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்றால் முக்கியமான இன்னொருவர் சொல்வதையும் நாம் கேட்க வேண்டும். ஆதாமைப் படைப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே, யெகோவா அவரை மிகவும் சக்தியுள்ள ஒரு தேவதூதராகப் படைத்தார்.

மரியாள் கர்ப்பமாக இருந்தபோதும், இயேசு பிறந்த பிறகும்

ரொம்ப காலம் கழித்து, அவரை மரியாள் என்ற கன்னிப்பெண்ணுக்கு மகனாகப் பிறக்க வைத்தார். அவர் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு இயேசு என்ற பெயர் வைக்கப்பட்டது. —யோவான் 6:38.

யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்கு இயேசு சொல்லிக்கொடுக்கிறார்

இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, கடவுளுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டினார். எல்லாரிடமும் அன்பாக நடந்துகொண்டார், நன்றாகப் பழகினார். அதனால், எல்லாரும் தயங்காமல் அவரிடம் வந்தார்கள். எல்லாருக்கும் யெகோவாவைப் பற்றி தைரியமாகச் சொல்லிக் கொடுத்தார்.

இயேசு நல்லது செய்தார், ஆனால் சிலருக்கு அவரைப் பிடிக்கவில்லை. 1 பேதுரு 2:21-24

இறந்தபோன சிறுமியை இயேசு உயிரோடு எழுப்புகிறார், நோயாளியைக் குணமாக்குகிறார்

நோயாளிகளை இயேசு குணமாக்கினார், இறந்துபோன சிலருக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தார்.

மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்த பொய்யான விஷயங்களையும், அவர்கள் செய்த அநியாயத்தையும் இயேசு வெட்டவெளிச்சமாக்கினார். அதனால், மதத் தலைவர்கள் இயேசுவை வெறுத்தார்கள்.

இயேசு அடிக்கப்படுகிறார், பிறகு கொல்லப்படுகிறார்

ரோம அதிகாரிகளிடம் இயேசுவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மதத் தலைவர்கள் சொன்னார்கள்; அதை நம்பி அந்த அதிகாரிகள் இயேசுவை அடித்தார்கள், கொலை செய்தார்கள்.

  • இயேசுவைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? —யோவான் 17:3.

  • பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் இயேசு என்ன செய்தார்?—கொலோசெயர் 1:15-17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்