பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்?
நீங்கள் என்ன சொல்வீர்கள் . . .
மனிதர்கள் எழுதிய புத்தகமா?
கட்டுக்கதைகளும் புராணக்கதைகளும் நிறைந்த புத்தகமா?
கடவுள் கொடுத்த புத்தகமா?
கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16, புதிய உலக மொழிபெயர்ப்பு.
இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்.—நீதிமொழிகள் 2:1-5.
அன்றாட வாழ்க்கைக்கு நம்பகமான ஆலோசனை கிடைக்கும்.—சங்கீதம் 119:105.
எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்ற நம்பிக்கை கிடைக்கும்.—ரோமர் 15:4.
கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?
நிச்சயம் நம்பலாம். மூன்று காரணங்களுக்காக:
முரண்பாடில்லாத புத்தகம். சுமார் 1,600 வருட காலப்பகுதியில் ஏறக்குறைய 40 மனிதர்கள் பைபிளை எழுதினார்கள். அவர்களில் நிறைய பேர் ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லை. என்றாலும், பைபிள் புத்தகங்கள் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன; ஒரே கருத்தை மையமாக வைத்து முழு பைபிளும் எழுதப்பட்டிருக்கிறது!
நேர்மையான எழுத்தாளர்கள். உலகச் சரித்திராசிரியர்கள் தங்கள் நாட்டு மக்களின் தோல்விகளைக் குறிப்பிடாமல் மறைத்துவிடுவார்கள். ஆனால், பைபிள் எழுத்தாளர்கள் தாங்கள் செய்த தவறுகளையும் தங்கள் நாட்டு மக்கள் செய்த தவறுகளையும் மறைக்காமல் பதிவு செய்திருக்கிறார்கள்.—2 நாளாகமம் 36:15, 16; சங்கீதம் 51:1-4.
நம்பகமான தீர்க்கதரிசனங்கள். பூர்வ பாபிலோன் நகரத்தின் அழிவைப் பற்றி சுமார் 200 வருடங்களுக்கு முன்பே பைபிள் முன்னறிவித்தது. (ஏசாயா 13:17-22) பாபிலோன் எந்த விதத்தில் கைப்பற்றப்படும் என்று மட்டுமல்ல, அதை யார் கைப்பற்றுவார் என்றும்கூட சொன்னது! —ஏசாயா 45:1-3.
பைபிளில் இன்னும் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. அதில் சொல்லப்பட்ட நுணுக்கமான விவரங்கள்கூட நிறைவேறின. கடவுள் கொடுத்த புத்தகம் இப்படித் துல்லியமாக இருக்க வேண்டும் என்றுதானே நாம் எதிர்பார்ப்போம்?—2 பேதுரு 1:21.
சிந்தித்துப் பாருங்கள்
கடவுள் தந்த புத்தகமான பைபிள் உங்கள் வாழ்க்கையை எப்படிச் சிறப்பாக்கும்?
பைபிளின் பதில்: ஏசாயா 48:17, 18; 2 தீமோத்தேயு 3:16, 17.