உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 1 பக். 10-பக். 11 பாரா. 8
  • கடவுளிடமிருந்து வந்த இரண்டு செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளிடமிருந்து வந்த இரண்டு செய்திகள்
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • பரலோகத்திலிருந்து செய்திகள்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • அவர்கள் குற்றமற்றவர்களாய் நடந்ததற்காகப் பலனளிக்கப்பட்டார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • வழியைத் தயார்படுத்துகிறவர் பிறக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 1 பக். 10-பக். 11 பாரா. 8
சகரியா முன்னால் காபிரியேல் தோன்றுகிறார்; எலிசபெத் கர்ப்பமாக இருக்கிறாள்

அதிகாரம் 1

கடவுளிடமிருந்து வந்த இரண்டு செய்திகள்

லூக்கா 1:5-33

  • யோவான் ஸ்நானகர் பிறக்கப்போவதைப் பற்றி காபிரியேல் தூதர் சொல்கிறார்

  • இயேசு பிறக்கப்போகிறார் என்று மரியாளிடம் காபிரியேல் சொல்கிறார்

முழு பைபிளுமே கடவுளிடமிருந்து வந்த செய்திதான். நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நம்முடைய பரலோகத் தகப்பன் அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். 2,000 வருஷங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட இரண்டு முக்கியமான செய்திகளைப் பற்றி இப்போது படிக்கலாம். இந்தச் செய்திகளை ‘கடவுளுடைய முன்னிலையில் நிற்கிற’ காபிரியேல் என்ற தேவதூதர் சொல்கிறார். (லூக்கா 1:19) காபிரியேல் தூதர் எந்தச் சூழ்நிலையில் இந்த முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்?

இது கி.மு. 3-ஆம் வருஷம். முதல் செய்தியை சகரியா என்ற ஆலய குருவிடம் சொல்வதற்காக காபிரியேல் போகிறார். எருசலேமிலிருந்து கொஞ்சத் தூரத்தில் இருக்கிற யூதேயா மலைப்பகுதியில் சகரியா வாழ்கிறார். அவருக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் வயதாகிவிட்டது. ஆனால், அவர்களுக்குப் பிள்ளைகளே இல்லை. அவர் எருசலேமில் இருக்கிற ஆலயத்தில் குருவாகச் சேவை செய்ய வேண்டிய சமயம் வருகிறது. அப்படிச் சேவை செய்துகொண்டிருக்கும்போது, தூபபீடத்துக்குப் பக்கத்தில் திடீரென காபிரியேல் வந்து நிற்கிறார்.

அவரைப் பார்த்து சகரியா பயந்துபோகிறார். அப்போது காபிரியேல் தூதர், “சகரியாவே, பயப்படாதே; உன்னுடைய மன்றாட்டைக் கடவுள் கேட்டார்; உன் மனைவி எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான்; நீ அவனுக்கு யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்கிறார். அதோடு, ‘யெகோவாவின் பார்வையில் அவன் உயர்ந்தவனாக இருப்பான்’ என்றும், “யெகோவாவுக்கு ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துவான்” என்றும் சொல்கிறார்.—லூக்கா 1:13-17.

சகரியா சைகை செய்கிறார்

சகரியாவுக்கும் அவருடைய மனைவிக்கும் வயதாகிவிட்டதால் காபிரியேல் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. அதனால் காபிரியேல், “என் வார்த்தைகளை நீ நம்பாததால், இவையெல்லாம் நடக்கும் நாள்வரை பேச முடியாமல் ஊமையாக இருப்பாய்” என்று சொல்கிறார்.—லூக்கா 1:20.

இதற்கிடையே, ரொம்ப நேரமாகியும் சகரியா வெளியே வராததால் ஆலயத்துக்கு வெளியே நிற்கிற மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் வெளியே வருகிறபோது அவரால் பேச முடிவதில்லை, சைகை மட்டும்தான் செய்ய முடிகிறது. அதனால், ஆலயத்துக்குள் ஏதோவொரு அற்புதக் காட்சியை அவர் பார்த்திருக்க வேண்டும் என்று எல்லாரும் புரிந்துகொள்கிறார்கள்.

ஆலயத்தில் சேவை செய்து முடித்த பின்பு, சகரியா தன்னுடைய வீட்டுக்குப் போகிறார். சில நாட்களிலேயே, எலிசபெத் கர்ப்பமாகிறாள்! அதற்குப் பிறகு, ஐந்து மாதங்களுக்கு வெளியே போகாமல் வீட்டிலேயே இருக்கிறாள்.

மரியாள் முன்னால் காபிரியேல் தோன்றுகிறார்

இரண்டாவது செய்தியைச் சொல்வதற்காக மரியாள் என்ற கன்னிப் பெண்ணிடம் காபிரியேல் போகிறார். இந்த இளம் பெண், நாசரேத் என்ற நகரத்தில் வாழ்கிறாள். அது எருசலேமுக்கு வடக்கே கலிலேயா என்ற பகுதியில் இருக்கிறது. காபிரியேல் தூதர் மரியாளிடம், “நீ கடவுளுக்குப் பிரியமானவள்” என்று சொல்கிறார். அதோடு, “இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; . . . அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது” என்றும் சொல்கிறார்.—லூக்கா 1:30-33.

இந்த இரண்டு செய்திகளையும் சொன்னது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று காபிரியேல் நினைத்திருப்பார். யோவானையும் இயேசுவையும் பற்றிப் படிக்கப் படிக்க, கடவுளிடமிருந்து வந்த இந்தச் செய்திகள் எந்தளவு முக்கியமானவை என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

  • கடவுளிடமிருந்து வந்த முக்கியமான இரண்டு செய்திகளைச் சொல்கிறவர் யார்?

  • இந்தச் செய்திகளை காபிரியேல் யார் யாரிடம் சொல்கிறார்?

  • இந்தச் செய்திகளை நம்புவது ஏன் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்