உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 55 பக். 134-பக். 135 பாரா. 2
  • இயேசுவின் போதனையால் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவின் போதனையால் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள்
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து சீஷரில் பலர் விலகிச்சென்றார்கள்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து சீஷரில் பலர் விலகிச்சென்றார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “ஜீவ அப்பம்” அனைவருக்கும் கிடைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • முடிவில்லாத வாழ்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 55 பக். 134-பக். 135 பாரா. 2
இயேசு தன்னுடைய 12 அப்போஸ்தலர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யூதாஸ் சந்தேகத்தோடு வேறு எங்கோ பார்க்கிறான். மற்ற சீஷர்கள் முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்புகிறார்கள்

அதிகாரம் 55

இயேசுவின் போதனையால் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள்

யோவான் 6:48-71

  • அவருடைய சதையைச் சாப்பிட்டு, இரத்தத்தைக் குடிக்க வேண்டும்

  • நிறைய பேர் அதிர்ச்சி அடைந்து, அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிடுகிறார்கள்

கலிலேயா கடலின் கிழக்குக் கரையில், இயேசு அற்புதமாகக் கொடுத்த ரொட்டியையும் மீனையும் சாப்பிட்டவர்கள் அவரைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்கள். அப்போது, தான்தான் பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவு என்று இயேசு அந்த மக்களிடம் சொல்லியிருந்தார். இப்போது, அதைப் பற்றிய கூடுதல் விளக்கங்களை கப்பர்நகூமில் இருக்கிற ஒரு ஜெபக்கூடத்தில் கற்பிக்கும்போது இயேசு சொல்கிறார்.

“உங்களுடைய முன்னோர்கள் வனாந்தரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்கள், ஆனால் இறந்துபோனார்கள். பரலோகத்திலிருந்து வந்திருக்கும் இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் சாகவே மாட்டார். பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உயிருள்ள உணவு நான்தான்; இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் என்றென்றும் உயிர் வாழ்வார். சொல்லப்போனால், நான் கொடுக்கப்போகிற உணவு, உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதைதான்” என்று சொல்கிறார்.—யோவான் 6:48-51.

கி.பி. 30-ஆம் வருஷம் பஸ்கா பண்டிகை சமயத்தில் நிக்கொதேமுவிடம் பேசியபோது, கடவுள் இந்த உலகத்தின் மேல் ரொம்ப அன்பு வைத்திருந்ததால், தன் மகனை ஒரு மீட்பராக அனுப்பினார் என்று இயேசு சொல்லியிருந்தார். இப்போது ஜெபக்கூடத்தில் கூடியிருக்கிற மக்களிடம், தான் கொடுக்கப்போகிற பலியின் மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் தன்னுடைய சதையைச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார். அப்படிச் செய்கிறவர்கள்தான் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள் என்றும் சொல்கிறார்.

இயேசு சொன்னதைக் கேட்டு மக்கள் கோபப்படுகிறார்கள். “இவன் எப்படித் தன்னுடைய சதையை நமக்குச் சாப்பிடக் கொடுக்க முடியும்?” என்று பேசிக்கொள்கிறார்கள். (யோவான் 6:52) தான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது, அதில் புதைந்திருக்கும் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். அதனால், கூடுதலான சில விஷயங்களைச் சொல்கிறார்.

“மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள். என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், . . . என் சதைதான் உண்மையான உணவு, என் இரத்தம்தான் உண்மையான பானம். என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறான்” என்று சொல்கிறார்.—யோவான் 6:53-56.

அதைக் கேட்டதும் யூதர்களுக்குப் பயங்கர கோபம் வருகிறது. காட்டுமிராண்டிகளைப் போல மனித சதையைச் சாப்பிடச் சொல்கிறாரே... திருச்சட்டத்தை மீறி இரத்தத்தைக் குடிக்கச் சொல்கிறாரே... என்றெல்லாம் அவர்கள் நினைத்திருக்கலாம். (ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 17:10, 11) நிஜமாகவே தன் சதையைச் சாப்பிட்டு, தன் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்புகிறவர்கள் தன்னுடைய பலியின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொல்கிறார். ஏனென்றால், அவர் சீக்கிரத்தில் தன்னுடைய பரிபூரண மனித உடலைப் பலியாகக் கொடுத்து, தன்னுடைய இரத்தத்தைச் சிந்தப்போகிறார். அவருடைய சீஷர்களில் நிறைய பேருக்குக்கூட இந்த விஷயம் புரியவில்லை. அதனால், “இவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள்.—யோவான் 6:60.

தன்னுடைய சீஷர்களில் சிலர் இதைப் பற்றி முணுமுணுப்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், “நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? அப்படியென்றால், மனிதகுமாரன் தான் முன்பிருந்த இடத்துக்கு ஏறிப்போவதை நீங்கள் பார்த்தால் இன்னும் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கும்? . . . நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகள் கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டவை, வாழ்வு தருபவை. ஆனாலும், உங்களில் சிலர் இதை நம்புவதில்லை” என்று சொல்கிறார். அதைக் கேட்டு, சீஷர்களில் பலர் அங்கிருந்து போய்விடுகிறார்கள்; இயேசுவைப் பின்பற்றுவதையும் நிறுத்திவிடுகிறார்கள்.—யோவான் 6:61-64.

அதனால் இயேசு தன்னுடைய 12 அப்போஸ்தலர்களைப் பார்த்து, “நீங்களும் என்னைவிட்டுப் போகப் போகிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன. நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்” என்று சொல்கிறார். (யோவான் 6:67-69) இதயத்தைத் தொடும் இந்த வார்த்தைகள் அவர்களுடைய உண்மைத்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஏனென்றால், இயேசு சொன்னது பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் முழுமையாகப் புரியாவிட்டாலும்கூட அவர்கள் இயேசுவை விட்டுப் போகவில்லை.

பேதுரு சொன்னதைக் கேட்டு இயேசு சந்தோஷப்படுகிறார். இருந்தாலும், “பன்னிரண்டு பேரான உங்களை நான் தேர்ந்தெடுத்தேன், இல்லையா? ஆனாலும், உங்களில் ஒருவன் அவதூறு பேசுகிறவனாக இருக்கிறான்” என்று சொல்கிறார். (யோவான் 6:70) யூதாஸ் இஸ்காரியோத்தை மனதில் வைத்துதான் இயேசு இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, யூதாஸ் தவறான வழியில் போக ஆரம்பித்துவிட்டான் என்பதை இயேசு இந்தச் சமயத்தில் கண்டுபிடித்திருக்கலாம்.

ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தன்னைத் தொடர்ந்து பின்பற்றுவதையும், தான் செய்கிற உயிர் காக்கிற வேலையில் பங்குகொள்வதையும் பார்த்து இயேசு சந்தோஷப்படுகிறார்.

  • இயேசு எப்படி மக்களுக்காகத் தன் சதையைக் கொடுக்கிறார்? ஒருவரால் இயேசுவின் ‘சதையை எப்படிச் சாப்பிட’ முடியும்?

  • தன்னுடைய சதையையும் இரத்தத்தையும் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு மக்கள் ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள்? ஆனால், எந்த அர்த்தத்தில் இயேசு அதைச் சொன்னார்?

  • நிறைய பேர் இயேசுவைப் பின்பற்றுவதை நிறுத்திய சமயத்தில், பேதுரு என்ன சொல்கிறார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்