மதமும் அரசியலும் நேர் எதிராக மோதிக்கொள்ளுமா?
மத-அரசியல் அதிகாரங்கள் இரண்டையும் ஒரே மனிதனுக்குக் கீழே கொண்டுவரும் திட்டம் எட்டாவது ஹென்றியுடன் ஆரம்பிக்கவில்லை. அவனுடைய காலத்தில் அது ஏற்கெனவே நன்றாக சோதிக்கப்பட்டு தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு அரசியல் ஏற்பாடாக திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தது.
உதாரணமாக, பண்டைய எகிப்து சாம்ராஜ்யம் அநேக கடவுட்களைக் கொண்டிருந்தது. பார்வோன் தாமே கடவுட்களில் ஒருவனாக இருந்தான். தன் குடிமக்களின் வாழ்க்கையில் மத்திப ஸ்தானத்தை வகிப்பவனாக இருந்தான்” என்று தி நியூ பைபிள் அகராதி சொல்லுகிறது. அதேவிதமாக ரோம சாம்ராஜ்யமும் சக்ரவர்த்திகளை உட்பட அநேகமாயிர தேவர்களைக் கொண்டிருந்தது. ஒரு சரித்திராசிரியன் சக்ரவர்த்தியின் வணக்கத்தை “ரோம உலகத்தின் மதத்திலே மிக முக்கிய சக்தி”யாக இருந்தது என்று விவரிக்கிறான்.
சர்ச்-அரசாங்க கூட்டுறவு அநேக நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. என்றபோதிலும் அரசியலுக்குள்ளே கிறிஸ்தவ மண்டலத்தின் தற்காலத்திய பயணங்கள் அவள்தானே காதலிக்கிற அவர்களுக்கெதிராகவே மோதும் பாதையில் தன்னை வைப்பதாக உள்ளது. ஏன் அப்படி? இக்கேள்விக்கு உத்தரவு அளிக்க முதன்முறையாக கிறிஸ்தவ மண்டலம் அரசியலில் எப்படி ஈடுபட்டது என்பதை சற்று கவனித்துப் பார்க்கலாம்.
உண்மையான கிறிஸ்தவம்—எதிர்மாறான ஒன்று
கிறிஸ்தவத்தை ஸ்தாபித்த இயேசு கிறிஸ்து எல்லா அரசியல் அதிகாரத்தையும் மறுத்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய அற்புதங்களால் உற்சாகமடைந்த மக்கள் அவரை வலுக்கட்டாயமாக ராஜாவாக்க முயற்சித்தனர், ஆனால் அவர் “மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.” (யோவான் 6:15) அவர் ஒரு ராஜாவா என்று ரோம கவர்னர் கேட்டபோது இயேசு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே.”—யோவான் 18:36.
தன் சீஷர்களிடம் கிறிஸ்து மேலும் சொன்னார்: “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:19) ஆகவே, ஆதி கிறிஸ்தவர்கள் சமூக அல்லது அரசியல் பிரச்னைகளினால் தங்களுடைய பாதையைவிட்டு விலகினர். உதாரணமாக, அடிமைத்தனம், அந்தக் காலத்தில் ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது, ஆனால் அதை நீக்கிப்போடும்படியாக கிறிஸ்தவர்கள் அதற்காக உழைக்கவில்லை. மாறாக, கிறிஸ்தவ அடிமைகள் தங்கள் எஜமானருக்கு கீழ்ப்படிந்திருக்கும்படி கட்டளையிடப்பட்டனர்.—கொலோசெயர் 3:22.
அரசியலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டில்லாதபடி, இந்த ஆதி கிறிஸ்தவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து” பிரசங்கம் பண்ணும் வேலையை செய்து முடிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். (அப்போஸ்தலர் 28:23) ஒரு சில பத்தாண்டுகளுக்குள் அவர்களுடைய செய்தியானது அன்றைக்கு அறியப்பட்டிருந்த உலகத்தின் எல்லைவரைக்கும் சென்றடைந்தது. (கொலோசெயர் 1:23) என்ன விளைவுகளோடு? அநேகர் இணங்கினவர்களாய் ஆவிக்குரிய “சகோதரரும், சகோதரி”களுமானார்கள். (மத்தேயு 23:8, 9) யூதர்களும் புறஜாதியாரும் கிறிஸ்தவர்களானபோது தங்களுடைய பகைமையை ஒழித்தார்கள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கிடையேயும் இருந்த பெரிய வித்தியாசங்கள் மறைந்தன. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு” உடையவர்களாக இருந்தனர்.—1 பேதுரு 4:8.
என்றபோதிலும் கிறிஸ்தவ அன்பானது, அவர்களுடைய விரோதிகளிடத்திலும் வந்தெட்டக்கூடியதாயிருந்தது. (மத்தேயு 5:44) ஆகவே அவர்கள் ராயனின் சேனைகளில் சேர மறுத்தனர். ஒருவேளை சிலர் சொல்லலாம் ‘ஆனால் “ராயனுடையதை ராயனுக்கு . . . கொடுங்கள்,” என்பதாக இயேசு சொல்லவில்லையா?’ உண்மைதான். என்றாலும் ராணுவ சேவையை பற்றியா இயேசு பேசிக்கொண்டிருந்தார்? இல்லை, அவர் வெறுமனே ‘ராயனுக்கு வரி கொடுக்கிறது’ நியாயமோ அல்லவோ என்ற பிரச்னையின் பேரில்தான் பேசிக்கொண்டிருந்தார். (மத்தேயு 22:15-21) ஆகவே, கிறிஸ்தவர்கள் தாங்கள் வரிகளை செலுத்தினார்கள். ஆனால் தங்களுடைய ஜீவன்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதாக கருதினர் மற்றும், தங்கள் அயலகத்தாருக்கு கெடுதிகளை விளைவிக்கவும் மறுத்தனர்.
ஒருவன் உலகத்துக்கு சிநேகிதனாக ஆவது
“இன்று கிறிஸ்தவ மண்டலத்தைப் பாருங்கள்” என்று சிலர் சொல்லலாம். “ஒரு நம்பிக்கையும் இல்லாதபடி பிரிந்திருக்கிறது. அதன் அங்கத்தினர் ஒருவரை ஒருவர் கொலை செய்கிறார்கள், அதன் குருமார் அரசியலிரே உழன்று கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவத்துக்கு என்ன நேர்ந்தது?” பொய் கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் நடுவே “விதைத்து”விடப்படுவார்கள் என்று இயேசு எச்சரித்தார். (மத்தேயு 13:24-30) அதே விதமாகப் பவுலும் தீர்க்கதரிசனம் சொன்னான்: “மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:29, 30.
முதல் நூற்றாண்டின்போதே இந்த போக்கு ஆரம்பித்தது. சீஷனாகிய யாக்போபு இந்த அழுத்தமான வார்த்தைகளை எழுதுவது அவசியம் என்று கண்டான்: “நீங்கள் வேசித்தன மனைவிகளைப்போன்று உண்மையில்லாதவர்களாய் இருக்கிறீர்கள்; உலகத்தை உங்கள் சிநேகிதனாக வைத்துக் கொள்ளும்போது கடவுளை உங்கள் எதிரியாக வைக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?” (யாக்போபு 4:4, தி எருசலேம் பைபிள், சாய்வெழுத்துகள் எங்களுடையது.) இந்த தெய்வீக ஆலோசனையை மதிக்காமல் இருக்க அநேகர் தெரிந்து கொண்டனர்—இதன் விளைவாக நான்காவது நூற்றாண்டின்போது ஒரு ஓநாய் ஆட்டுத் தோலின் உடையிலே, கான்ஸ்டன்டைன் சக்ரவர்த்தி கறைநிறைந்த “கிறிஸ்தவ”த்தை ரோம சாம்ராஜ்யத்தின் அதிகாரபூர்வமான மதமாக ஆக்கி ஒத்துப்போகும்படி செய்யக்கூடியவனாக இருந்தான். ஆனால் உலகத்தின் “சிநேகிதனாக” ஆனதில் கிறிஸ்தவ மண்டலம் கடவுளுடைய எதிரியாயிற்று. கடைசியாக ஒரு மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது-
பதிமூன்றாவது நூற்றாண்டுக்குள்ளாக சர்ச், “போப்” அல்லது “தந்தை”யால் (father) அரசாளப்பட்டதாய் “அதனுடைய வல்லமையின் உச்சநிலையை” அடைந்து சர்ச்சும் அரசாங்கமும் இன்னும் நெருங்கிய விவாகத்தில் ஈடுபடும்படியான நிலையை அமைத்து வைத்தது. போப் இன்னொஸன்ட் III “கர்த்தர் பேதுருவுக்கு சர்வலோக சர்ச்சின் மீது மட்டும் ஆளுகையை கொடுக்காதபடி முழு உலகத்தின் மீதும் ஆளுகையைக் கொடுத்தார்” என்று நம்பிக்கை கொண்டார். சரித்திரப் பேராசிரியர் T.F. டெளட் “தி எம்பயர் அண்டு தி பேப்பசி” என்ற ஆங்கல புத்தகத்தில் “இன்னொஸன்டின் வேலை மதம் சார்ந்த இராஜ தந்திரியின் வேலையாக இருந்தது, . . . தன் சித்தப்படி அரசர்களையும் சர்ரவர்த்திகளையும் ஆக்குவதும், நீக்குவதுமாகும்.” அதே எழுத்தாளர் மேலும் இவ்வாறு சொல்லுகிறார்: “போப்பின் அதிகாரம் அரசியலாக அதிகம் மாற மாற, சட்டம், ஒழுக்கம், மதம் இவைகளின் ஊற்றுமூலமாக இருப்பதன் அந்தஸ்த்தை உயர்த்தி காத்துக் கொள்வதில் கஷ்டம் நிறைந்தது.”
மதமும் யுத்தமும்
அரசியல் அதிக வன்முறையான கட்டத்தை எட்டும்போது அது யுத்தம் எனப்படுகிறது. என்றபோதிலும் போப் இன்னொசென்ட் III தனிப்பட்ட விதமாக தென் பிரான்சின் ஆல்பிஜென்சுகளுக்கு (மதகொள்கையில் வேறுபட்ட புராட்டஸ்டான்டினர்) விரோதமாக ஒரு ராணுவ படையெடுப்பை அமைத்தான். இது 1209-ல் பீஜியர்ஸில் ஆயிரக்கணக்கானோரின் படுகொலைக்கு வழிநடத்தினது; மற்றும் அநேகர் புனித நீதிமன்றத்தின் பலியாட்களாக மொத்தமாக சுட்டெரிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பாலஸ்தினாவுக்கு எதிராக கொண்டுசெல்ல நினைக்கப்பட்ட சிலுவைப்போர், பிற்பாடு அரசியல் தந்திரத்தால் கான்ஸ்டான்டிநோப்பிளையும் உட்சேர்க்கும்படி திருப்பப்பட்டது. அங்கே “கிறிஸ்தவ” போர்வீரர்கள் “பயங்கர மூன்று நாளைய கொள்ளை, கொலை, காமம், திருவழிபடி இவைகளிலே ஈடுபட்டார்கள். யார் மீது? உடன் “கிறிஸ்தவர்கள்” மீது! ஒரு சரித்திராசிரியர் சொல்லுகிறான்: “சர்ச்சுகள் தாமே இரக்கமற்ற விதமாக கொள்ளையடிக்கப்பட்டன.”
சர்ச்சின் கிறிஸ்தவமல்லாத வழிமுறைகள் எல்லாம் கடைசியில் மார்டின் லூத்தர் 1517-ல் விட்டன்பர்க் சர்ச்சின் கதவிலே தன்னுடைய சவாலான வாக்கியங்களை ஆணி அடிப்பதற்கு வழிநடத்தியது—ஆக சீர்திருத்த இயக்கம் ஆரம்பித்தது. ஜரோப்பாவின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் H.A.L. ஃபிஷர் எழுதுகிறார்: “இந்த புதிய மத நடவடிக்கையானது . . . பிரபுக்களின் பேரிலும் அரசாங்கத்தின் பேரிலும் நெருங்கிய விதமாக சார்ந்திருந்தது.” ஜெர்மனி அரசியல்-மதத்தின் பிரகாரம் பிரிக்கப்பட்டது. பிரான்சில் கால்வினை ஆதரித்தவர்கள் அதேவிதமாக அரசியல் தலைவர்களோடு கலந்தார்கள். ஆகவே பிற்பாடு வந்த மதப் போர்கள், மத சுயாதீனத்துக்காக மட்டும் போராடாதபடி “புராட்டஸ்டாண்டு, ரோமன் கத்தோலிக்க பிரபுக்கள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கத்தைக் கொள்ள அவர்களுக்கிடையே உள்ள “போட்டி”யின் காரணமாகவுங்கூட போராடப்பட்டது. ஆக ஜரோப்பாவில் மத சரித்திரமானது இரத்தத்தினால் எழுதப்பட்டுள்ளது!
தென் ஆப்ரிக்காவில் பிரிட்டனும் போயரும் போராடுவதோடு 20-வது நூற்றாண்டு விடிந்தது. இரண்டு பக்கங்களிலுமுள்ள குருமார்கள் “பிரசங்க பீடத்திலிருந்து உற்சாகமான பேச்சுக்களை” கொண்டு நெருப்பை வளர்த்தார்கள். R. க்ரூகர் என்ற சரித்திராசிரியன்: “இரு தரப்பினரும் யுத்தத்தின்போது பரலோகத்தண்டை எழுப்பிய வேண்டுகோளின் சப்தமானது சபைகளின் வித்தியாசமான உற்சாக ஏவுதல்களினால் மட்டுமே ஈடுசெய்யக்கூடியதாய் இருந்தது.” கடவுளிடத்தில் தாங்கள் செய்வதற்காக உதவித் தேடி கேட்கும்போது வெள்ளை “கிறிஸ்தவர்கள்” ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருந்தனர்!
இம்மாதிரி 1914-ம் வருடம் ஜெர்மன் துருப்புகள் பெல்ஜியத்திற்குள் “காட் மிட் அன்ஸ்” (கடவுள் நம்மோடு இருக்கிறார்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கச்சைகளை அணிந்துகொண்டு நுழைந்தபோது அதே காரியம் மீண்டும் நிகழ்ந்தது. இரு பக்கங்களிலுமே வெற்றிக்காக வளமிக்க ஜெபங்களையும், எதிரியைத் திட்டுவதில் கடுங் கண்டனத்தையும் பொழிந்தார்கள்.
முதல் உலக மகா யுத்தத்தில் மதம் வகித்த பாகத்தைக் கண்டு அநேகர் குழப்பநிலைக்குள்ளானார்கள். மதம் “மக்களின் போதை வஸ்து” என்று குறிப்பிட்ட நாத்திகரும் கம்யூனிஸ்டுகளும் அதிகரித்து வந்தனர். என்றபோதிலும் குருமார்கள் தொடர்ந்து தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, முஸோலினி, பிராங்கோ போன்ற பாஸிய சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். 1933-ல் ரோமன் கத்தோலிக்க சர்ச் நாஸிகளுடனே ஒரு உடன்படிக்கையையும் செய்துகொண்டனர். கார்டினல் ஃபால்ஹேபர் ஹிட்லருக்கு இவ்விதமாக எழுதினார்: “போப் ஆட்சியுடன் இந்தக் கைகுலுக்கல் . . . அளவிடமுடியா ஆசீர்வாதத்தின் ஓர் அம்சம் . . . கடவுள் ரீச் சான்சலரை [ஹிட்லரை] காத்துக்கொள்வராக.”
இன்னொரு யுத்தம் ஏற்படக்கூடும் என்ற சாத்தியம் இருந்தபோதிலும்,இது குருமாரை அரசியலிலிருந்து விலகிடச் செய்யவில்லை. சமீப காலத்திய ஒரு போக்கு, சில சர்ச்சுகள் இடது சாரி அரசியல் நிலையினிடமாக வளைந்து செல்வதாகும். ஒரு எழுத்தாளன் எழுதுகிறான்: “லத்தீன் அமெரிக்காவிருந்து வந்துள்ள இப்போதைய வேத சாஸ்திரிகளின் சந்ததி . . . மார்க்ஸிஸம் என்பதாக அறிவுறுத்துகிறது.” ஆனால் பைபிள் எச்சரிக்கிறது: “அவர்கள் காற்றை விதைத்து சூறைக்காற்றை அறுப்பார்கள்.”—ஓசியா 8:7.
சூறைக்காற்றை அறுத்தல்
ஆம், பைபிள் ஆழமான ஓர் எச்சரிக்கையை விடுக்கிறது: அரசியலுக்கும் மதத்துக்கும் இடையே பயங்கர மோதல் வந்துகொண்டிருக்கிறது. பைபிள் வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்திலே இரத்தத்தினால் கறைபட்டிருக்கிற பொய் மத உலகப் பேரரசை “திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற வேசி “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்று பெயரிடப்பட்டு “பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் . . . வெறிகொண்டு” இருக்கிறதாகப் படிக்கிறோம். (வசனங்கள் 5, 6) “பாபிலோன்” ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டுள்ள பொய் மதத்துக்கு சரியான பெயராக இருக்கிறது. ஏனென்றால் அவளுடைய மூலாதராக் கொள்கைகள் பண்டைய பாபிலோன் நகரத்திலிருந்து வரலாயின.a உண்மையான கிறிஸ்தவர்களை நூற்றாண்டுகளுக்கூடாக துன்புறுத்தும் கொலைக்கார பெயரை சம்பாதித்துள்ளாள்.
இந்தப் பொய் மத உலகப் பேரரசு மேலுமாக “ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் [பத்து கொம்புகளும் “பத்து ராஜாக்களாம்”] . . . கொண்ட மிருகத்தின் மீது சவாரி செய்வதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. (வசனங்கள் 3, 12) இந்தப் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் கட்டுரைகள் இந்த “மிருகத்தை” உலக சமாதானத்தைக் காப்பதற்காக உத்தரவாதமுள்ள கருவியாக, அதாவது ஜ.நா. சபையாக அடையாளங்காட்டியிருக்கிறது. சர்ச்சுகள் இந்த அமைப்புக்கு ஆதரிவு கொடுத்துக் கொண்டிருப்பதாக பதிவுகள் காண்பிக்கிறது. 1965-ம் வருடம் அக்டோபர் மாதம் போப் பால் VI ஜ.நா.-வை “உடன்படிக்கைக்கும் சமாதானத்துக்கும் கடைசி நம்பிக்கை” என்று விவரித்தார். 1979-ல் போப் ஜான் பால் II ஜ.நா.-வின் பொது மாநாட்டில் சொற்பொழிவு ஆற்றினார். கிறிஸ்துவையோ அல்லது அவருடைய ராஜ்யத்தையோ பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல், ஜ.நா. “சமாதானத்துக்கும் நீதிக்குமான ஒரு உன்னத கருத்தரங்கு” என்று கூறினார்.
ஆனால் மதமும் ஜ.நா-வும் இவ்விதமாக இளைந்திருப்பது ஏன் ஆபத்து? ஏனென்றால், “மிருகத்தின்மேல் கண்ட பத்து கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி . . . அவளை நெருப்பினால் சுடடெரித்துப் போடுவார்கள்.” (வசனம் 16) ஆக, மதம் அரசியலுக்கு நேர் எதிராக பயங்கரமான மோதலின் பாதையில் செல்லுகிறது. அவள் நிர்வாணமாக்கப்பட்டு, அதிலுள்ளவர்களின் அசுத்தம் வெளியாக்கப்பட்டு, அவள் முற்றிலுமாக அழிக்கப்படுவாள்.
இயேசு கிறிஸ்து சொன்ன “மிகுந்த உபத்திரவத்”தை இது துவக்குவதாய் அர்மகெதோனில் முடிவடையும். மேற்கொள்ளமுடியாத பரலோக சேனைகளின் ஆதரவோடு சாத்தானுடைய உலக ஒழுங்குமுறை “நொறுக்கி நிர்மூலமாகும். பூமியை சுத்தரிக்க சாந்த குணமுள்ளவர்கள் மட்டுமே விடப்படுவார்கள். இவர்கள்தான் மற்ற காரியங்கள் உட்பட பிரிவினை கொண்ட அரசியலிலிருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் உண்மையான கிறிஸ்தவர்களாவர்.—மத்தேயு 24:21; தானியேல் 2:44; சங்கீதம் 37:10, 11; மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 6:2; 16:14-16.
பொய் மதம் கடவுளுடைய நாமத்தின்மீது ஏற்படுத்தியிருக்கிற கெடுதியையும் நிந்தையையும் கண்டு துயரப்படுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களானால், இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “என் ஜனங்களே, அவளுடைய [பொய்மதம்] பாவங்களுக்கு உடன்படாமல் . . . இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்,” என்று பைபிள் கட்டளையிடுகிறது. (வெளிப்படுத்துதல் 18:4) இந்தக் கட்டளைக்கு செவிகொடுக்க யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே மக்களை உற்சாகப்படுத்துகின்றனர். அவர்கள் ஆதி கிறிஸ்தவர்களைப் போன்று யுத்தம் மற்றும் அரசியலிலிருந்து விலகியிருக்கின்றனர். ஆகவே, மதம் அரசியலோடு மோதும்போது இவர்கள் அழிக்கப்படும் ஆட்களாக இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களை சந்தியுங்கள். அவர்கள் அழிவுக்குப் போகிற வாசலை அல்ல, ஆனால் ஜீவனுக்குப் போகிற “இடுக்கமான வாசலை” எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களுக்குக் காண்பிப்பதில் மகிழ்ச்சியடைவார்கள்.—மத்தேயு 7:13, 14; யோவான் 17:3. (w85 8/1)
a விளக்கத்திற்கு உவட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆப் நியு யார்க் இன்க். பிரசுரித்த “Babylon the Great Has Fallen! God’s Kingdom Rules!” என்ற ஆங்கில புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் படம்]
1914-ல் புனித பவுல் ஆலயத்தின் படிகளில் அமைக்கப்பட்ட மேள பீடத்திலிருந்து லண்டன் பேராயர் பிரிட்டிஷ் இராணுவ துருப்புக்களில் தேச பக்தியைத் தூண்டிவிட்டார்