“நோவாவின் காலத்தைப்” போன்ற காலம்
“பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது . . . அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின் மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.”—ஆதியாகமம் 6:11, 12.
1, 2. (எ) என்ன விதமான வன்முறைகளோடு யெகோவாவின் ஜனங்கள் இன்று போராட வேண்டும்? (பி) என்ன சூழ்நிலைமைகளில் கடவுளுடைய ஜனங்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையினால் ஆறுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்?
வன்முறை! நோவாவின் காலத்திலிருந்தது போலவே இன்று வன்முறை, வீட்டு வழக்கு மொழியில் வந்து விட்ட சொல்லாகிவிட்டது. நோவாவைப் போலவே, மெய்க் கடவுளோடு சஞ்சரிக்கும் ஆட்களும்கூட வன்முறைக்கு எதிராக பாதுகாப்பளிக்கப்ட்டவர்களாக இல்லை. கடந்த வருடம் ஜூலை 21 அன்று ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் வெடி குண்டு ஒன்றினால் இடிந்து விழுந்தபோது, மனதில் பதிகின்ற வகையில் உலகத்தின் கவனத்துக்கு இது கொண்டுவரப்பட்டது. அந்த சமயம், கடவுளுக்கும் குடும்பத்துக்கும் உண்மையுள்ளவர்களாய் இருப்பதைப் பற்றிய ஒரு பொது பேச்சு நடந்து கொண்டிருந்தது. ஒரு சாட்சி கொல்லப்பட்டார். 40-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டார்கள். ஆனால் இந்த பயங்கரமான குற்றச் செயலின் விளைவாக, சிலருக்கு மறையாத தழும்புகள் இன்னும் இருக்கின்றன. காவல்துறை துப்பறிபவர் ஒருவர், “அங்கே 110 பேர் இருந்தார்கள். 110 பேர் உயிரிழக்காமல் இருந்தது ஒரு அற்புதமாகவே இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
2 வடக்கு ஜயர்லாந்து, லெபனான் மற்றும் எல்சால்வடார் போன்ற பூமியின் மற்ற பகுதிகளில்—எப்போதுமே வன்முறையான சூழ்நிலைமைகள் இருந்துவரும் பகுதிகளில் யெகோவாவின் சாட்சிகள் “நற்செய்தி”யை அறிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சிலர் ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேக தேசங்களில் விபத்துக்கள் மற்றும் பூமியதிர்ச்சிகள் போன்ற எதிர்பாராத சம்பவங்களும் அநேக உயிர்களை பலிவாங்கியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பங்களில் யெகோவாவின் ஜனங்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையினால் ஆறுதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.—பிரசங்கி 9:11; 1 தெசலோனிக்கேயர் 4:13, 14.
3. (எ) சமீப கால சம்பவங்களிலும், லூக்கா 21:26.லும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி யெகோவாவின் ஜனங்களில் சிலருக்கு என்ன சம்பவிக்கக்கூடும்? (பி) “மிகுந்த உபத்திரவத்தின்” சமயத்தில் கடவுளுடைய பாதுகாப்பைப் பற்றிய என்ன நம்பிக்கை நமக்கு இருக்கிறது?
3 சமீபத்தில் உயிரிழந்த 5,000 பேரில், சாட்சிகளும் அவர்களோடு கூட்டுறவு கொள்பவர்களும் 23 பேர் இருந்தார்கள். போர்டோ ரிக்கோவில் வெள்ளத்தினாலும் நிலச்சரிவினாலும் உயிரிழந்த 300 பேரில் ஏழு சாட்சிகள் இருந்தார்கள். யெகோவா அவர்களுடைய ஊழியர்களில் சிலருக்கு பாதுகாப்பை அளிக்கத் தவறினார் என்பதை அது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. விபத்துக்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் நாம் விலக்கப்பட்டவர்கள் இல்லை. துன்புறுத்தலைக் குறித்து இயேசு தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு முன் எச்சரித்திருந்தார்: “உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள்.” நம்முடைய சகோதரர்களில் நூற்றுக்கணக்கானோர் ஹிட்லரின் கொடுமையினால் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் யெகோவா உயிர்த்தெழுதலில் நினைவுகூருவார். ஆனால் முன்னறிவிக்கப்பட்ட “மிகுந்த உபத்திரவம்” பூமியை சுத்தம் செய்யும்போது, யெகோவா, தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களை நோவாவின் நாளில் செய்ததுபோலவே, தம்மால் பாதுகாக்க முடியும் என்பதை காண்பிப்பார்.—லூக்கா 21:16-19; மத்தேயு 24:14, 21, 22, 37-39; ஏசாயா 26:20, 21; யோவேல் 2:32; ரோமர் 10:13.
4. ஆதியாகமம் 6:11, 12-ல் விவரிக்கப்பட்டுள்ளதோடு இன்றைய நாளைய சம்பவங்கள் எவ்விதமாக ஒத்திருக்கின்றன?
4 1914 முதற்கொண்டு வன்முறை அனைத்துலகையும் பாதித்து வருகிறது. நூறாயிரக்கணக்கான மனிதர்கள் இந்த நூற்றாண்டின் யுத்தங்களிலும் பெருஞ்சேதங்களிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனிதவர்க்கம், விமான மற்றும் கப்பல் கடத்தல்களாலும் பயங்கரவாதிகளின் வெடிகுண்டுகளாலும், படுகொலைகளாலும், இன வெறுப்பிகளாலும் அலைக்கழிக்கப்பட்டும், அணு ஆயுதங்களின் பெருக்கத்தினால் அச்சுறுத்தப்பட்டும் வருகிறது. உண்மையில் இவை, “கொடிய காலங்களாகவும்” பூமியின் மேலுள்ள “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணுமான” காலங்களாகவும் இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5, 13; லூக்கா 21:25) ஆனால் அநேகமாக வன்முறையோடு சம்பந்தப்படுத்தப்பட்டாலும், வன்முறையைவிட அதிக அபாயமாக இருக்கும் கொள்ளை நோயின் மத்தியில் இன்று யெகோவாவின் ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அது நோவாவின் காலத்துக்கு, 4,300 வருடங்களுக்கும் பின்னால் செல்லுகிறது. அது என்ன?
ஒழுக்க சீர்கேட்டின் மத்தியில் நோவாவின் விசுவாசம்
5, 6. (எ) சாத்தான் எவ்விதமாக மனிதவர்க்கத்தை கறைப்படுத்த ஆரம்பித்தான்? (பி) நோவாவும் அவனுடைய குடும்பமும் என்ன விதங்களில் அந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருந்ததை தெளிவாக காட்டினார்கள்?
5 ஏதேனில் கலகம் ஆரம்பமானது முதற்கொண்டு, பிசாசாகிய சாத்தான் “உலகமனைத்தையும் மோசம் போக்குகிறதிலேயே” முனைப்பாக இருக்கிறான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:9) விவாக ஏற்பாட்டினுள், கடவுளால் கொடுக்கப்பட்ட இனவிருத்தி சக்தியை கனமுள்ளதாக உபயோகித்து, அவர்களுடைய இனத்தால், பூமியை நிரப்பும்படியாக மனுஷனுக்கும் மனுஷிக்கும் யெகோவா கட்டளையிட்டிருந்தார். (ஆதியாகமம் 1:28; எபிரெயர் 13:4) ஆனால் பிசாசு, இயற்கைக்கு மாறான பாலுணர்ச்சிகளால் மனித இனத்தை கறைப்படுத்தினான். எவ்விதமாக? கடவுளுடைய ஆவியின் புத்திரர்கள் கலகத்தில் சாத்தானை சேர்த்துக் கொண்டார்கள். இவைகள் பிசாசுகளாகவும் சாத்தான் அவர்களுடைய தலைவனாகவும் ஆனான். (லூக்கா 11:15) அப்போது பேய்களின் கிரியைகள் என்னவாக இருந்தன? அவர்கள் கீழே பூமிக்கு வந்து, மனித சரீரங்களை எடுத்துக் கொண்டு செளந்தரியமுள்ள மனுஷ குமாரத்திகளோடே வாசஞ் செய்தார்கள். விளைவு அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது!
6 இவ்விதமாக இன கலப்பு பிள்ளைகள் பிறந்தன. பாதி பேயாகவும் பாதி மனிதனாகவும் இருந்த இவர்கள், மாம்சபிரகாரமாக இயல்பு மீறிய உயரமுள்ளவர்களாக இருந்தார்கள். பதிவு காண்பிக்கிறபடியே இவர்கள் இராட்சதர்களாக மனித வர்க்கத்தை கொடுமையாக “விழச் செய்கிறவர்களாக” இருந்தார்கள். “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.” வன்முறையும் ஒழுக்க சீர்கேடும் அத்தனை பரவலாக இருந்ததினால் நோவாவைப் பற்றி மாத்திரமே பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.” அனைத்து மனிதவர்க்கத்திலும் அவனுடைய மனைவியும், அவனுடைய குமாரர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் மட்டுமே விசுவாசத்தையும் தெய்வீக பயத்தையும் காண்பித்தார்கள். நோவாவின் குடும்பம் அவனுடைய நாளிலிருந்த ஒழுக்க சீர்கேட்டில் கறைப்படாதிருந்தது.—ஆதியாகமம் 6:4, 9-12; Ref. Bi. கீழ்க்குறிப்பு.
7. நோவாவின் நாளில் காட்டப்பட்டது போலவே யெகோவா எவ்விதமாக துன்மார்க்கரையும் நீதிமான்களையும் நியாயந்தீர்க்கிறார்? (மத்தேயு 25:40, 45, 46-ஜ ஒப்பிடவும்)
7 யெகோவா அந்த வன்முறையான, பாலின வெறிகொண்ட பேய்த்தனமான உலகத்தை துடைத்து அழித்தார். பெரும் பிரளயத்தை அனுப்பி, கெட்டவை அனைத்தையும் அழித்து தூய்மைப்படுத்தினார். இனக்கலப்பால் பிறந்த இராட்சதர்களும் ஒழுக்கங்கெட்ட மனிதர்களும் அழிக்கப்பட்டார்கள். முன்னொரு காலத்தில் கடவுளுடைய குமாரர்களாக இருந்த பேய்கள் ஆவிக்குரிய பிரதேசத்துக்கு தப்பிச் சென்றுவிட்டன—கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு அவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தப்பிப் பிழைத்தவர்கள் இருந்தார்கள்! நோவாவும் அவனுடைய சொந்த குடும்பமும் அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள். ஏன்? அவர்களுடைய விசுவாசமும், பேழையைக் கட்டுவதனாலும் நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்ட அந்த உலகத்துக்கு நீதியை பிரசங்கிப்பதனால் அதை கிரியையில் காட்டியதுமே இதற்கு காரணமாக இருந்தது.—2 பேதுரு 2:4, 5.
நவீன காலத்தவரே, எச்சரிக்கையாயிருங்கள்!
8. என்ன விதங்களில் நோவாவின் காலம் நம்முடைய காலத்துக்கு படமாக இருந்தது?
8 நோவாவின் நாள் நம்முடைய நாளுக்கு படமாக இருந்தது. இது நமக்கு எப்படித் தெரியும்? ஆம், “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தின் ஓரத்தில் நாம் நிற்பதை காட்டும் “அடையாளத்தின்” பாகமாக, இயேசு அதே போன்ற வன்முறையையும் அக்கிரமம் மிகுதியாவதையும் அன்பில்லாமையையும் முன்னறிவித்தார். “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்,” என்பதாகவும்கூட சொன்னார். பின்னர், “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில் ஜலப் பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:3-21, 36-39.
9. “உணராதிருப்பவர்களுக்கு” வரும் முடிவை நாம் எவ்விதமாக தவிர்க்கிறோம்?
9 ஆம், அவர்கள் உணராதிருந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைப் போல இருக்க வேண்டியதில்லை. “தேவனை அறியாதவர்களையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களையும் நித்தியமாக அழிப்பதன் மூலம் கடவுளுடைய ஆக்கினையை செலுத்துவதற்கு கர்த்தராகிய இயேசு வானத்திலிருந்து வெளிப்படும்போது நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். (2 தெசலோனிக்கேயர் 1:7, 8) கடவுளைப் பற்றியே நினைக்காமல் தங்களை மகிழ்வித்துக் கொள்வதையும், கெளரவமான வேலையை அல்லது பொருள் செல்வத்தை நாடுவதையுமே வாழ்க்கையில் தங்களுடைய முக்கிய அக்கறையாக கொண்டுள்ள உலகப்பிரகாரமான ஆட்களைப் போல நீங்கள் இருக்க வேண்டியதில்லை. உண்மையாகவே “அவர்களுடைய தேவன் வயிறு.”—பிலிப்பியர் 3:19.
“தீமையை வெறுத்திடுங்கள்”
10, 11. (எ) கடவுளுடைய அங்கீகராத்தைப் பெற்றுக்கொள்ள என்ன துர்குணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்? (பி) என்ன ஆயுதத்தை நாம் தரித்துக் கொள்ள வேண்டும்? ஏன்?
10 இந்தக் கடைசி நாட்களில் அநேகருடைய வாழ்க்கை, விவாக சலுகைகளின் பாதுபாப்பில் அல்லது அது இல்லாமல், பாலுணர்ச்சிகளைச் சுற்றியே வருகிறது. விவாகம் செய்து கொண்டுள்ள மற்ற அநேகருக்கு விவாகரத்து அல்லது விலக்கி வைப்பது சாதாரணமாகிவிட்டது. இயேசுவின் சீஷர்களுடைய திட்டவட்டமான எச்சரிப்புக்களை அவமதிக்கிறவர்களாக கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ஏற்கெனவே இவர்களில் சிலர் ஏய்ட்ஸ் (AIDS) மற்றும் பாலுறவுகளினால் கடத்தப்படும் மற்ற நோய்களின் வடிவில், “தகுதியான பலனைத் தங்களுக்குள்” அடைந்து வருகிறார்கள். ஆனால் இத்தகைய ஆட்களும்கூட இரட்சிப்பின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடும். இயேசு, தம்முடைய நாளிலிருந்த மேட்டிமையான மனந்திரும்பாத மதத்தலைவர்களுக்கு நேர் எதிர்மாறாக, தங்களுடைய வாழ்க்கையை சுத்திகரித்துக் கொண்டு அவரில் விசுவாசம் வைத்த வேசிகளுக்கு சாதகமாக பேசினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.—ரோமர் 1:26, 27; 2 பேதுரு 2:9, 10; யூதா 6, 7; மத்தேயு 21: 31, 32.
11 யெகோவாவின் ஜனங்களில் எவரேனும் ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்களில் கறைப்பட்டவர்களாக அல்லது அதில் ஈடுபடும் சோதனைக்குட்படுத்தப்படுவார்களேயானால், அவர்கள் விழித்துக் கொண்டு கடவுள் கொடுக்கும் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டும்! (எபேசியர் 6:11-18) இந்த காலம் உண்மையில் “நோவாவின் காலத்தைப்” போலவே இருக்கிறது. “கெர்ச்சிக்கிற சிங்கமாகிய அந்த பிசாசும் அவனுடைய ஒழுக்கங்கெட்ட பேய்களும், கடவுளுடைய ஊழியர்களை தனியாக பிரித்து அவர்களை சிக்கவைக்க இரவும் பகலும் பாடுபடுகிறார்கள். அந்த சத்துருக்களை நாம் எதிர்த்து நின்று விசுவாசத்தில் உறுதியாயிருக்க வேண்டும்.—1 பேதுரு 5:8, 9.
12. சங்கீதம் 97:10-ன் புத்திமதியை பின்பற்றுவது ஏன் முக்கியமாக இருக்கிறது?
12 யெகோவாவின் அமைப்பில் முக்கியமானவர்களாக இருந்த சிலரும்கூட, ஓரினபுணர்ச்சி, மனைவியை மாற்றிக் கொள்வது, சிறு பிள்ளைப் புணர்ச்சி (சிறு பிள்ளைகளை தகாத முறையில் பாலுணர்ச்சியோடு அணுகுவது) போன்றவை உட்பட, ஒழுக்கயீனமான பழக்கவழக்கங்களுக்கு அடிபணிந்து விட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த வருடத்தில் 36,638 பேர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. ஒழுக்கங்கெட்ட நடத்தைக்காகவே இவர்களில் அநேகர் சபை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். யெகோவாவின் அமைப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும்! (1 கொரிந்தியர் 5:9-13) சபை மூப்பர்களும் உதவி ஊழியர்களும், ஆம் நம்முடைய எல்லா சகோதர சகோதரிகளுமே ஒழுக்கயீனமான நடத்தைக்கு வழிநடத்தக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் தவிர்ப்பதற்குரிய காலமாக இது இருக்கிறது. சங்கீதம் 97:10 சொல்லுகிறவிதமாகவே: “யெகோவாவின் தராதரங்களுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்கள் அதற்குரிய பலனைப் பெற்றுக் கொள்வார்கள்: “யெகோவாவில் அன்பு கூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.”
13. அப்போஸ்தலர்களாகிய புலும் பேதுருவும் என்ன நல்ல புத்திமதியை கொடுத்திருக்கிறார்கள்?
13 “மிகுந்த உபத்திரவம்” “அருவருப்பானவர்கள்” அனைவரையும் ஒழித்துவிடும். உலகத்தின் ஒழுக்கச் சீர்கேட்டை வெறுத்திட, ஆம், அருவருத்து தவிர்த்திட நாம் எவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் “வேசித்தனத்திற்கு விலகியோட” வேண்டும். (வெளிப்படுத்தின விசேஷம் 21:8; 1 கொரிந்தியர் 6:9, 10, 18) அப்போஸ்தலனாகிய பேதுரு, சந்தேகத்தை விதைக்கும் விசுவாச துரோகிகளைப் பற்றியும் “யெகோவாவின் நாள்” மெய்யானது என்பதைப் பற்றியும் எச்சரித்தப் பின்பு “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கும்”படியாக நமக்கு அறிவுரை கூறுகிறான். மேலுமாக, “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால் பிரியமானவர்களே, இவைகள் வரக்காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்திதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.” கடவுள் சகலத்தையும் புதிதாக்கும் அந்த “புதிய பூமிக்கு” போவது எத்தனை சந்தோஷமாக இருக்கும்!—2 பேதுரு 3:3-7, 10-14; வெளிப்படுத்தின விசேஷம் 21:1, 4, 5.
கூடுதலான ‘எச்சரிப்புண்டாக்கும் திருஷ்டாந்தங்களுக்கு’ கவனம் செலுத்துங்கள்
14. பிரளயத்தினால் சுத்தம் செய்யப்பட்டது ஏன் தற்காலிகமாக மட்டுமே இருந்தது?
14 பிரளயம் எல்லா பேய்த்தன மற்றும் மனித அசுத்தங்களை பூமியிலிருந்து நீக்கிய பின்பு ஆதாமுக்கு அவர் ஆரம்பத்தில் கொடுத்த கட்டளையை மீண்டும் கொடுத்தார். நோவாவிடமும் அவனுடைய குமாரர்களிடமும் “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்” என்றார். (ஆதியாகமம் 9:1) அடையாளமாக இதை அவர்கள் செய்தார்கள். அதியாகமம் 10-ம் அதிகாரத்தில் அடையாளமான பரிபூரண எண்ணிக்கையான 70 “குடும்பங்களின்” பட்டியல் காணப்படுகிறது. ஆனால் மனிதவர்க்கம் ஆதாமிலிருந்து சுதந்தரித்துக் கொண்ட பாவத்தின் விளைவுகளினால் இன்னும் துன்பமனுபவித்து வந்தது. பேய்களின் செல்வாக்கு மனிதர்களை மறுபடியுமாக ஒழுக்க சீர்கேட்டினுள் அமிழ்ந்துவிடச் செய்தது.
15. சோதோமின் மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
15 காலப்போக்கில், யெகோவாவின் “சிநேகிதனான” ஆபிரகாமும், அபிரகாமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தும் கானானில் குடியேறினார்கள். லோத்து, யோர்தானுக்கு அருகே “யெகோவாவுடைய தோட்டத்தைப் போல” இருந்த இடத்தை தெரிந்து கொண்டான். ஆனால் ஒழுக்கத்தில் அது அவ்விதமாக இருந்ததா? நிச்சயமாக இல்லை! லோத்து குடியேறிய சோதோமிலும் அதன் அருகாமையிலிருந்த கொமோராவிலும் மக்கள் ஓரினப்புணர்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். அங்கு பத்து நீதிமான்களும்கூட காணப்படவில்லை. அந்த காரணத்துக்காக யெகோவா, அந்த பட்டணங்களின் மீது “நித்திய அக்கினியின் ஆக்கினை”யைக் கொண்டு வந்தார். சீர்கெட்ட அந்த பட்டணங்கள் ஒருபோதும் பழைய நிலைக்கு கொண்டுவரப்படவில்லை! நாம் எச்சரிப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகையில், சோதோமின் மீது கடவுளின் தீர்ப்பை “நோவாவின் காலத்தில்” சம்பவித்ததோடுகூட இயேசு எடுத்துரைத்தார்.—ஆதியாகமம் 13:10; 18:32; யூதா 7; லூக்கா 17:26-30.
16. பேய்களின் என்ன செயல்கள் விசுவாசத்துக்காக கடினமாக போராடுவதை தேவைப்படுத்துகிறது?
16 ஒரு காரியம் நிச்சயம்! சாத்தானும் அவனுடைய பேய்களும் இன்னும் கோபாவேசத்துடன் அங்குமிங்கும் அலைத்து கொண்டிருக்கின்றன! அவைகள் அடையாளமான “அந்தகாரத்தினுள்” தள்ளப்பட்டு மாம்ச உருவெடுத்து வர முடியாமல் தடைசெய்யப்பட்டுவிட்ட போதிலும் அந்த ஒழுக்கங்கெட்ட ஆவிகள் மனிதர்களை விசேஷமாக யெகோவாவின் ஊழியர்களை கறைப்படுத்த விடாது முயற்சி செய்து வருகின்றன. (2 பேதுரு 2:4-6) கானானை அவனுடைய பாட்டனாகிய நோவாவிடமாக ஒழுக்கயீனமாக நடந்துக்கொள்ள தூண்டியது பேய்களே என்பதில் சந்தேகமும் இல்லை. (ஆதியாகமம் 9:22-25) நிச்சயமாகவே, “கானான் தேசத்தார்களுடைய முறைமை”களாக மாறிய முறைத்தகாப் புணர்ச்சிகளுக்கு இவைதானே காரணமாக இருந்திருக்க வேண்டும். இதுவே தேசம் அதனுடைய குடிகளை கக்கிப்போட காரணமாக இருந்தது. (லேவியராகமம் 18:3-25) அதே விதமாகவே, இன்று இத்தனை அநேக சமுதாயங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு மாறான பாலுறவு பழக்கங்களை பேய்கள் பேணி வளர்க்கின்றன. விசுவாசத்துக்காக கடினமாக போராடுகையில், ‘விபசாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தை தொடரும்படியாக’ மனிதர்களைத் தூண்டும் வீழ்ந்துபோன தூதர்களின் தாக்குதல்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.—யூதா 3, 6, 7.
பாதுகாப்புக்காக கட்டுதல்
17. நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும்போல உலகத்தின் பாகமாக நாம் இல்லாதிருப்பதை எவ்விதமாக காண்பிக்கலாம்?
17 நம்முடைய காலங்களின் முக்கியத்துவத்தை முன்னிட்டுப் பார்க்கையில், பாதுகாக்கப்படுவதற்காக வழியை நாம் எவ்விதமாக கண்டடையலாம்? சரி, நோவாவும் அவனுடைய குடும்பமும் எவ்விதமாக தப்பிப் பிழைத்தார்கள்? “விசுவாசத்தினாலே, நோவா . . . உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்தான்.” (எபிரெயர் 11:7) அதேப்போலவே, இன்று யெகோவாவின் சாட்சிகள் பொல்லாத உலகின் பாகமாக இருப்பதில்லை. மேலுமாக இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகும் பொருட்டு, நாம் நம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீரில் முழுக்காட்டப்படுவதன் மூலம் நாம் நம்முடைய விசுவாசத்தை காண்பித்திருக்கிறோம்.—யோவான் 17:14, 16; மத்தேயு 28:19.
18. பேழையின் கட்டுமான வேலையினால் மாதிரியாக காட்டப்படுவது என்ன?
18 மேலுமாக இந்த காலத்துக்குரிய யெகோவாவின் வேலையில் நாம் பங்குகொள்கிறோம். இது பெரிய நோவாவாகிய இயேசு கிறிஸ்துவால் வழிநடத்தப்படும் ஆவிக்குரிய ஒரு கட்டும் வேலையாக இருக்கிறது. பாதுகாப்புக்கும் தப்பிப் பிழைத்தலுக்கும் ஒரு இடமாக, பேழை, 1919 முதற்கொண்டு யெகோவாவின் வணக்கத்தாரின் மத்தியில் அவர் கட்டிக் கொண்டு வரும் ஆவிக்குரிய பரதீஸை பிரதிநிதித்துவம் செய்கிறது. அது கடவுளோடு திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு சமாதானமான உறவு நிலையாக இருக்கிறது. “மிகுந்த உபத்திரவத்தி”னூடே பெரிய நோவாவின் மாதிரிப்படிவ குடும்பத்தை பாதுகாக்க இது அவருடைய ஏற்பாடாக இருக்கிறது.—மத்தேயு 24:21; 1 கொரிந்தியர் 3:9-11; 2 கொரிந்தியர் 12:3, 4; வெளிப்படுத்தின விசேஷம் 7:13, 14.
19. நோவா, அவனுடைய குடும்ப அங்கத்தினர்கள், அவர்களுடைய வேலை, எதற்கு முன்நிழலாக இருந்தன?
19 “நோவாவுக்கோ யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.” தம்முடைய சொந்த இஷ்டப்படி எதையும் செய்யாமல் இங்கு பூமியிலிருக்கையில் கடவுளோடு மனத்தாழ்மையோடு சஞ்சரித்த இயேசு கிறிஸ்துவுக்கு அவன் எத்தனை சிறந்த ஒரு படமாக இருக்கிறான். (ஆதியாகமம் 6:8; மத்தேயு 7:1, 5; யோவான் 8:28) இருவருமே நீதியின் பிரசங்கிகளாக—யெகோவாவின் எல்லா சாட்சிகளுக்கும் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். பூமியில் இன்று மீந்திருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு முன்நிழலாக இருக்கும் நோவாவின் மனைவி, கீழ்ப்படிதலுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்தாள். (2 பேதுரு 2:5; லூக்கா 4:14-19; எபேசியர் 5:21-24) பாதுகாப்பின் பேழையைக் கட்டும் வேலை எவ்வளவு பிரமாண்டமாக இருந்தது என்பதை நாம் சிந்திக்கும்போது தன்னுடைய மூன்று திடகாத்திரமான குமாரர்களையும் அவர்களுடைய மனைவிகளையும் உதவிக்கு கொண்டிருப்பதில் வயதான நோவா எத்தனை மகிழ்ச்சியுள்ளவனாக இருந்திருக்க வேண்டும்! இவர்கள், மாதிரிப்படிவ பிரளயம் வர கண நேரம் மட்டுமே இருக்கும்போது, ஆவிக்குரிய கட்டுமான வேலையின் பெரும் பகுதியைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், இன்றைய நாளின் “திரள் கூட்டத்தாருக்கு” பொருத்தமாகவே படமாக இருக்கிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 15.
20, 21. (எ) சுத்திகரிக்கப்பட்ட பூமியில் யெகோவாவின் வணக்கத்தாருக்கு என்ன பிரகாசமான எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன? (பி) இப்பொழுதேயும்கூட என்ன சந்தோஷம் அனுபவிக்கப்படலாம்?
20 இந்தப் பூமி சுத்திகரிக்கப்பட்டு, சொல்லர்த்தமான பரதீஸாக மாற்றப்படுவதற்கு தயாராக இருக்கையில், நோவாவின் குமாரர்களாலும் மறுமக்களாலும் படமாக காட்டப்படுகிறவர்கள் குறிப்பிட்ட ஒரு காலம் வரையாக, நீதியில் பிள்ளைகளை பிறப்பிக்கிறவர்களாக இருக்கக்கூடும். பின்பு உயிர்த்தெழுதலின் அற்புதத்தினால் பூமி மனிதர்களால் நிரப்பப்படும். இயேசுவின் “வேறே ஆடு”களாக ஆகும் சிலாக்கியத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் பரிபூரணமான நிலைக்கு கொண்டுவரப்படுவார்கள். ராஜ்யத்தை கிறிஸ்து பிதாவினிடத்தில் ஒப்படைத்தப் பிறகு, கடைசி பரீட்சையை தப்பி வருபவர்கள் நித்திய ஜீவனுக்காக நீதிமான்களென அறிவிக்கப்படுவார்கள்.—யோவான் 5:28, 29; 10:16; 1 கொரிந்தியர் 15:24-26; சங்கீதம் 37:29; வெளிப்படுத்தின விசேஷம் 20:7, 8.
21 யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு என்ன சந்தோஷங்கள் முன்னால் இருக்கின்றன! ஆனால் தப்பிப் பிழைத்தலுக்காக நவீன நாளைய பேழையைக் கட்டுவதில் முழு இருதயத்தோடு பங்குகொள்வதன் மூலம் இப்போழுதேயும்கூட அதிகமான சந்தோஷத்தைக் கண்டடையலாம். அந்த வேலை எவ்விதமாக முன்னேறி வருகிறது? நமது அடுத்த படிப்பு அதற்கு விடையைக் கொடுக்கும். (w85 1/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ ஜலப்பிரளயத்துக்கு முன்னான சம்பவங்கள் நமக்கு எவ்விதமாக முன்னெச்சரிப்பு செய்ய வேண்டும்?
◻ மத்தேயு 24:37-39-லிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
◻ “தீமையை வெறுப்பது” ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
◻ மாதிரிப்படிவ பேழையைக் கட்டுவதில் நாம் எவ்விதமாக பங்குகொள்ளலாம்?
[பக்கம் 17-ன் பெட்டி]
‘நோவாவின் காலத்தைப்’ போல—
“கல்லூரியில், சமய போதகர்களில் 40 சதவிகிதத்தினர் மட்டுமே . . . விவாகமாகாத ஆணும் பெண்ணும் பாலுறவில் ஈடுபடுவது ஒழுக்கமற்றது என்பதாக நம்புகிறார்கள்.”—Saturday Oklahoman & Times, டிசம்பர் 29, 1984
[பக்கம் 18-ன் பெட்டி]
பைபிள் நியமங்கள் முக்கியமானவையாக இருக்கின்றனவா?
மேற்றிராணியார் திருச்சபை குரு ஒருவர் யெகோவாவின் சாட்சிகள் ஒருவரால் நடத்தப்பட்ட சவ அடக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மத குருவின் அழைப்பின் பேரில், காவற்கோபுரம் சங்கத்திலிருந்து இரண்டு ஊழியர்கள், நியூ யார்க் நகரிலுள்ள ப்ரூக்ளின் ஹைட்ஸில், குருமார்களோடு ஒரு கலந்தாலோசிப்புக்காகச் சென்றிருந்தார்கள்.
ஓரினப் புணர்ச்சியைப் பற்றிய கேள்வி எழும்பியது. சாட்சிகள், பைபிள் இதை தடை செய்வதையும், எத்தகைய ஒழுக்கங்கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களையும் சாட்சிகள் சபைநீக்கம் செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். (ரோமர் 1:24-27; 1 கொரிந்தியர் 6:9, 10; யூதா 7) இந்த விஷயத்தின்பேரில் மத குருமார்களின் நிலைநிற்கையைப் பற்றி சாட்சிகள் கேட்டார்கள். பின்வரும் பதில்களை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்:
திருச்சபை ஊழியர்: “நம்முடைய சர்ச்சின் துணைவிதிகள் ஏதோ ஒன்றில் சபைநீக்கம் பற்றிய சட்டம் நமக்கு இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வாழ்நாள் முழுவதிலும், நாம் அந்த சட்டத்தை எக்காலத்திலும் நடைமுறைக்கு, கொண்டு வந்தது எனக்கு நினைவில்லை!”
மேற்றிராணியார் திருச்சபை குரு: “நாம் அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால், சபையில் எவரும் மீந்திருக்க மாட்டார்கள்.”
கத்தோலிக்க உயர் திருச்சபை பதவியாளர்: “அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் எந்த மதகுருவும் மீந்திருக்க மாட்டார்.”
இந்த மத குருமார்களின் கருத்துக்கள் காரியங்களை மிகைப்படுத்தி கூறுவதாக இருந்தாலும் சபையை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தங்களுடைய சொந்த உறுதியான நிலைநிற்கையைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் “உலகத்தின் பாகமாக” இல்லை.—யோவான் 15:19.
[பக்கம் 19-ன் பெட்டி]
‘நோவாவின் காலத்தைப்’ போல—
ஓரினப்புணர்ச்சிப் பழக்கமுள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக, ஒரு நியூ யார்க் நகர பெருமக்கள் பள்ளி, மன்ஹாட்டனில் திறக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய ஆசிரியர் இவ்விதமாகச் சொன்னார்: “ஓரின புணர்ச்சியில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பக்குவப்படாத பருவ வயதினரின் செயலக்கு உள்ளாக்கப்படாத ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்க விரும்பினோம்.”—The New York Times, ஜூன் 6, 1985
[பக்கம் 20-ன் பெட்டி]
‘நோவாவின் காலத்தைப்’ போல—
“ஓரினப்புணர்ச்சி உறவுகள், கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையின் பாகமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு கொள்கையை ரிவர்சைட் சர்ச் அங்கத்தினர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.”—The New York Post, ஜூன் 3, 1985