போப்பும் திருவெளிப்பாடும்
போப்பின் சமீப காலத்திய அரசியலைப்பற்றிய தங்களுடைய 1984-ம் ஆண்டு புத்தகத்திற்கு இரண்டு நிருபர்கள் ‘அர்மகெதோனைத் தவிர்த்தல்’ என்று தலைப்பு கொடுத்தனர். கார்டன் தாமஸ் மற்றும் மாக்ஸ் மார்கன்-விட்ஸ் என்பவர்கள் போப்பாட்சியைப் பற்றி 17 வருடங்களாக அறிக்கைச் செய்து கொண்டிருக்கின்றனர். திருவெளிப்பாடைப் பற்றிய கத்தோலிக்க சர்ச்சின் அதிகார ஸ்தானங்களில் உள்ள கருத்துக்களிலிருந்து நாம் என்ன உட்பார்வையைச் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருக்கிறோம்?
இந்த நிருபர்களின் பிரகாரம், போப் ஜான் பால் II-ன் தனிப்பட்ட காரியதரிசியான மான்சினர் எமரி கபாங்கோ சொல்லுகிறார்: “வல்லரசுகளை பிரித்து வைக்கவும், அணு அர்மகெதோனைத் தவிர்க்கவும் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிற போப், ஆவிக்குரிய ஹெர்க்குலிஸைப் போன்று இருக்கிறார்.”
மனித விவகாரங்களிலே கடவுள் குறிப்பாக தலையிடுகிறதை—பைபிள் முன்னறிவிக்கும் திருவெளிப்பாட்டைக் குறித்து அக்கறையுள்ளவர்களாய் இல்லாமல், மனித செயல்களின் மூலமாக வரும் உலக அழிவைப் பற்றியே சர்ச் தலைவர்கள் விசேஷமாகக் கருத்துள்ளவர்களாக இருப்பதாகத் தோன்றுகிறது. இவ்விதமாக “அர்மகெதோனைத் தவிர்த்தல்” சொல்லுகிறது: “கபாங்கோவோடு ஈடுபாடு கொண்டவர்களில், தாங்கள் கணித்திருக்கும் முடிவை நிறுத்துவதற்கான முயற்சிகளில் எந்த வெளிப்படையான சிரமத்திற்கான அடையாளமும் இல்லை . . . ஆனால் சர்வசாதாரண இந்நிலைக்குப் பின்னால், சர்வதேச குருமார் குழுவினிடமிருந்து நேரடியாக வந்துள்ள ஒரு அழுத்த நிலை இருக்கிறது. அது தன் பேச்சுக்களை முடிவு காலத்திய உணர்வோடு முடித்திருக்கிறது; யுத்தத்தைப் போன்ற ஆக்கிரமிப்புத் தன்மை, வன்முறை, பயங்கரவாதம், சாதாரண ஆயுதங்களையும் மற்றும் விசேஷமாக அணுபோராயுதங்களையும் அடுக்கிக் கொண்டே போவதும், எல்லா யுத்த தளவாடங்களிலுமுள்ள இழிவான வியாபாரத்தைப் பற்றியும்’ குறைகூறியது. போப்புங்கூட இதில் உட்பட்டிருக்கிறார். தாமஸும், மார்கன்-விட்ஸும் போப்பின் படிப்பு அறையில் உள்ள புத்தக அலமாரிகளில் சர்வதேசத் தற்காப்புக்கான விமரிசனம், இராணுவ ஆயத்த நிலைப் பிரச்னைகள், திடீர் தாக்குதல்: தற்காப்பு திட்டத்துக்கான பாடங்கள், போன்ற புத்தகங்கள் உள்ளன என்று அறிக்கைச் செய்கின்றனர். மேலுமாக அவர்கள் பின்வருமாறு சொல்லுகிறார்கள்:
“போப்பின் கடிதங்களுக்கு நெருங்கிய விதமாக இருக்கும் புத்தகங்கள் போப்பின் கவனத்தை இழுக்கும் ஒரு பொருளைப் பற்றியது: எஸ்கடாலஜி (eschatology), அதாவது ஒரு சகாப்தம் முடிவுரச் செய்வதற்காக தொடர்ந்து செல்லும் சில சம்பவங்களை ஆரம்பித்து வைப்பதன் மூலம் கடவுள் இந்தப் பூமியில் தன் ராஜ்யத்தைத் துவக்கிடுவார் என்று வாதாடுகிற பைபிள் போதனைகளின் பேரில் சார்ந்த ஆராய்ச்சி. கூடுமானால் இந்த நூற்றாண்டு முடிவதற்கு முன்பாகவே உலக முழுவதிலுமாக ‘தீர்மானமான’ ஏதோ ஒன்று நடக்கக்கூடும் என்று ஜான் பால் விறுவிறுப்பான நம்பிக்கையை உடையவராக இருக்கிறார். அது ஒரு கொள்ளை நோயாக அல்லது இரண்டாவது கருப்பு மரணமாக இருக்கக்கூடுமா? அல்லது வறட்சியோ பஞ்சமோ கற்பனை செய்ய முடியாத அளவில் இருக்கக்கூடுமா? அல்லது அணு யுத்தமாக இருக்கக்கூடுமா? கடைசியாக குறிப்பிடப்பட்டதைப் பற்றித்தான் பயப்படுகிறார்; ஒரு அணு பேராபத்து நிரந்தரமான அழிவைக் கொண்டு வரக்கூடிய கடைசிப் பத்தாண்டில், சர்ச்சின் தலைவராக ஒரு பாகத்தை வகிக்கும் ஸ்தானத்தில் தான் வைக்கப்பட்டிருப்பதைப்பற்றி ஒருவேளை அவர் மிகவும் யோசனைச் செய்கிறார் போலும்.”
‘அர்மகெதோனைத் தவிர்த்தல்’ அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஏடு அடையாளமாகக் காட்டும் அழிவு நாள் கடிகாரத்திற்குக் கவனத்தை இழுக்கிறது. இந்தக் கடிகாரம் முதலாவது 1947-ல் பிரசுரிக்கப்பட்டபோது, “உலகமானது அணு அர்மகெதோனுக்கு எவ்வளவு அருகாமையிலிருக்கிறது” என்பதைக் கணிப்பதற்காக நடுஇரவுக்கு முன் ஏழு நிமிடங்கள் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. 1972-ன் போராயுதங்களின் கட்டுப்பாட்டு உடன்படிக்கைக்குப் (SALT) பின்பு கடிகாரத்தின் முட்கள் நடுஇரவுக்கு முன் 12 நிமிடங்கள் திருப்பி வைக்கப்பட்டது. 1984-ல் தாமஸ் மற்றும் மார்கன்-விட்ஸ் எழுதியதாவது: “கடிகாரமானது இப்பொழுது நடுஇரவுக்கு முன் மூன்று நிமிடங்களிலே இருக்கக் காண்கிறோம். முப்பது வருடங்களிலே அழிவின் நாளுக்கு வெகு அருகாமையில் இருந்தது இப்பொழுதுதான்.”
அணு அர்மகெதோனைத் தவிர்ப்பதற்கான போப்பின் நவம்பர் 1985-ன் முயற்சிகளின் மத்தியிலும் கடிகாரத்தின் முட்கள் இன்னும் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருப்பதாகக் காட்டின. என்றபோதிலும், தேசங்கள் மனிதவர்க்கத்தை அழித்துவிடுமோ என்ற அக்கறையால் நாம் திசை திரும்பாமல் இருப்போமாக. முடிவைத் தவிர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, முடிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான கடவுளுடைய வழியைத் தேடுவது ஞானமான காரியம், ஏனென்றால் இது, ‘குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் வருவது’ நிச்சயம்.—வெளிப்படுத்துதல் 3:10. (w86 2/15)