உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 5/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • இதே தகவல்
  • ஒத்துப்பாருங்கள், உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • யெகோவாவின் சாட்சிகள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • அந்திக்கிறிஸ்து அம்பலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • கிறிஸ்தவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குகிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 5/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

◼ கடவுள் பேரிலும் பைபிளிலும் இயேசு கிறிஸ்துவிலும் தொடர்ந்து விசுவாசம் கொண்டிருக்கும் சிலரை ஏன் யெகோவாவின் சாட்சிகள் விசுவாச துரோகத்திற்காக சபை நீக்கம் செய்திருக்கின்றனர்?

இப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கிறவர்கள், கிறிஸ்தவர்கள் எண்ணப்பட்ட அநேக மத அமைப்புகள் வித்தியாசமான கருத்துக்களை அனுமதிக்கின்றன என்று குறிப்பிடுகின்றனர். சில குருமார்கள்கூட தங்கள் சர்ச்சின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியிருந்தும் அவர்கள் நல்ல நிலைநிற்கையில் இருக்கின்றனர். வேத வாக்கியங்கள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டவை என்ற காரியத்தின்பேரில் வெகுவாக ஒத்துப்போகாத நவீன கொள்கையினரும் சொல்லர்த்தவாதிகளும் கிறிஸ்தவ மண்டலத்தின் எல்லா பிரிவிலுமே காணப்படுகின்றனர்.

என்றபோதிலும் நாமும் அதையே செய்யவேண்டும் என்பதற்கு அப்படிப்பட்ட மாதிரிகள் அடிப்படையாக இல்லை. ஏன் இல்லை. தங்களுடைய குருவர்க்கத்தினர் மற்றும் பாமரர் மத்தியில் இப்படிப்பட்ட வித்தியாசமான கருத்துக்களை அனுமதிப்பதற்குக் காரணம், பைபிள் சத்தியம் எது என்று தாங்கள் நிச்சயமாயில்லாததே என்பது பெரும்பான்மையான மதப் பிரிவுகளின் எண்ணம். அவர்கள் இயேசுவின் நாளிலிருந்த பரிசேயர் சதுசேயர் போன்றிருக்கின்றனர். அவர்கள் இயேசுவைப் போல அதிகாரத்தோடு பேச முடியாதவர்களாயிருந்தனர். (மத்தேயு 7:29) மேலும் மதங்கள் கலப்பு விசுவாசத்தை நம்பிவரும்போது, வித்தியாசமான நம்பிக்கைகளை அதிக வினைமையாக நோக்குவதில்லை.

ஆனால் காரியங்களின்பேரில் அப்படிப்பட்ட நோக்குநிலைகளைக் கொள்வதற்கு வேதப்பூர்வமான ஆதாரம் இல்லை. யூத மதத்தின் எந்தப் பிரிவினருடனும் இயேசு பொதுத் தொடர்பைக் கொள்ளவில்லை. அந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிருஷ்டிப்பின் கடவுளையும் எபிரேய வேதாகமத்தையும், விசேஷமாக மோசேயின் நியாயப்பிரமானத்தையும் நம்புவதாக உரிமைப் பாராட்டினர். என்றபோதிலும் “பரிசேயர் சதுசேயர் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்,” என்று இயேசு தமது சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 16:11, 12; 23:15) அப்போஸ்தலனாகிய பவுலுங்கூட இந்த விஷயத்தைக் குறித்து எவ்வளவு கண்டிப்பாக எழுதுகிறான் என்பதைக் கவனியுங்கள்: ‘நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்.” அதே கூற்றைப் பவுல் மறுபடியும் அழுத்திக் காண்பித்தான்.—கலாத்தியர் 1:8, 9.

மாறுபட்ட கருத்துக்களைப் போதித்தல் உண்மைக் கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத காரியம். இதைப் பவுல் 1 கொரிந்தியர் 1:10-ல் தெளிவுபடுத்துகிறான்: “சகோதரரே, நீங்கள் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும், வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” மேலும் எபேசியர் 4:3, 4-ல் அவர் கூடுதலாகக் குறிப்பிட்டதாவது: “சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு முழு பிரயாசை எடுங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல், ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.”

ஒவ்வொருவரும் வேதவசனங்களைத் தனித்தனியாக ஆராய்வதாலும், தங்களுடைய சொந்த முடிவுக்கு வருவதாலும், அவற்றைப் போதிப்பதாலும் இந்த ஐக்கியத்தைப் பெற்றுக்கொண்டு அதைக் காத்துக்கொள்ளக்கூடுமா? இல்லவே இல்லை! இந்த நோக்கத்திற்காகவே யெகோவா தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக “நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியில் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும் . . . அவர் சிலரை அப்போஸ்தலராகவும் . . . சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.” ஆம், இப்படிப்பட்ட ஊழியர்களின் உதவிகொண்டு சபையின் ஐக்கியம்—போதனையிலும் செயல்களிலும்—கூடிய காரியமாகும்.—எபேசியர் 4:11-13.

தெளிவாகவே, யெகோவாவின் சாட்சிகளோடு அங்கீரிக்கப்பட்ட ஒரு உறவைக் கொண்டிருப்பதற்கான அடிப்படை, ஒருவர் கடவுள் பேரிலும், பைபிளிலும், இயேசு கிறிஸ்துவிலும் நம்பிக்கை வைத்திருப்பதில் மட்டுமே இல்லை. ரோமன் கத்தோலிக்க போப்பும், ஆங்லிக்கன் ஆர்ச்பிஷப்பும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளையுடையவர்கள். என்றபோதிலும் அவர்களுடைய சர்ச் அங்கத்தினர் தனித்தனியாகவே இருந்தனர். இதுபோன்று அப்படிப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாக உரிமைப்பாராட்டுவதுதானே அவரை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக்கிவிடாது.

யெகோவாவின் சாட்சிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவைக் கொண்டிருப்பது பைபிளின் முழு அளவான உண்மையான போதனைகளையும், யெகோவாவின் சாட்சிகளின் தனிச்சறிப்பு வாய்ந்த போதனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. அவை உட்படுத்தும் நம்பிக்கைகள் யாவை?

மனிதவர்க்கத்திற்கு முன்னாலிருக்கும் அந்தப் பெரும் விவாதம், சர்வலோகத்தின் அரசுரிமை யெகோவாவுக்கே உறியது, எனவேதான் அவர் இது காலம் மட்டும் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார் என்பது. (எசேக்கியேல் 25:17) இயேசு கிறிஸ்து மனிதனாக பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர், தமது பரம பிதாவுக்குக் கீழ்ப்பட்டவர் என்பது. (யோவான் 14:28) ‘இயேசுவின் பூமிக்குரிய அக்கறைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட’ “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பு ஒன்று இருக்கிறது என்பது, இந்த அடிமை வகுப்பு யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவுடன் இணைந்தது என்பது. (மத்தேயு 24:45-47) 1914 புறஜாதியாரின் காலங்கள் முடிவதையும், பரலோகங்களில் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் முன்னறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் வந்திருத்தலையும் குறித்தது என்பது (லூக்கா 21:7-24; வெளிப்படுத்துதல் 11:15-12:10) 1,44,000 பேர் மட்டுமே பரலோக ஈவைப் பெறுவார்கள் என்பது (வெளிப்படுத்துதல் 14:1, 3) சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடைபெறும் யுத்தத்தைக் குறிப்பிடும் அர்மகெதோன் சமீபத்திலிருக்கிறது என்பது (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-21) இதைத் தொடர்வதுதான் பூகோள அளவில் பரதீஸை திரும்ப நிலைநாட்டிடும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி. அதை முதலில் அனுபவிக்கப்போவது இன்று வாழும் இயேசுவின் “வேறே ஆடுகளின்” “திரள் “கூட்டம்.”—யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9-17; 21:3, 4.

இப்படிப்பட்ட ஒரு வைராக்கியமான நிலைநிற்கையை எடுப்பதற்கு நமக்கு வேதாகம எடுத்துக் காட்டுகள் உண்டா? ஆம், நிச்சயமாக! தன்னுடைய நாட்களில் வாழ்ந்த சிலரைக் குறித்துப் பவுல் பின்வருமாறு எழுதினான்: “அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள், அவர்கள் சத்தியத்தை விட்டுவிலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுகிறார்கள். (2 தீமோத்தேயு 2:17, 18; மத்தேயு 18:6-ஐயும் ஒப்பிடவும்.) இந்த மனிதர்கள் கடவுளில், பைபிளில் அல்லது இயேசுவின் பலியில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதைக் காட்ட எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. என்றபோதிலும், உயிர்த்தெழுதலின் காலத்தைக் குறித்து அவர்கள் போதித்துக்கொண்டிருந்த, இந்த ஒரு குறிப்பில் பவுல் அவர்களை விசுவாச துரோகிகளாகக் குறிப்பிட்டான். உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களோடு எந்த ஒரு கூட்டுறவையும் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதுபோல, இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதை விசுவாசியாதவர்களை அப்போஸ்தலனாகிய யோவான் அந்திக்கிறிஸ்துகள் என்று குறிப்பிட்டான். அவர்கள் கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கக்கூடும். எபிரேய வேதாகமத்திலும், இயேசுவைக் கடவுளுடைய குமாரன் என்றும் நம்பியிருக்கக்கூடும். ஆனால், இயேசு மாம்சத்தில் வந்தார் என்ற குறிப்பை அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் “அந்திக்கிறிஸ்து” என்று அழைக்கப்பட்டனர். இப்படிப்பட்ட வித்தியாசமான கருத்தைப் பற்றியிருந்தவர்களைக் குறித்து யோவான் தொடர்ந்து கூறுவதாவது: “ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.—2 யோவான் 7, 10, 11.

இப்படிப்பட்ட வேதப்பூர்வமான எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றும் விதத்தில், ஒரு கிறிஸ்தவன் (கடவுளிலும், பைபிளிலும் இயேசுவிலும் நம்பிக்கை வைப்பதாக உரிமைப்பாராட்டுபவன்) மனந்திரும்பாதவனாக பொய்ப் போதனைகளைப் பரப்புகிறவனாக இருப்பானானால், அவன் சபையிலிருந்து விலக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கக்கூடும். (தீத்து 3:10, 11) ஒருவனுக்குச் சந்தேகங்கள் இருந்தால், அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தில் அறிவூட்டப்படாதவனாயிருந்தால், தகுதிவாய்ந்த ஊழியர்கள் அவனுக்கு அன்பாக உதவி செய்வார்கள். இது பின்வரும் ஆலோசனைக்கு ஒத்திருக்கிறது: “சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சியுங்கள்.” (யூதா 22, 23) எனவே, உண்மையான கிறிஸ்தவ சபை கோட்பாட்டு விஷயத்தில் அதிகக் கடுமையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுவதற்கில்லை, ஆனால், கடவுளுடைய வார்த்தை ஊக்குவிக்கும் ஐக்கியத்தை அது வெகு உயர்வாக மதித்து அதை நிலைநாட்ட செயல்படுகிறது. (w86 4/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்