தெய்வீக ஞானத்தின் ஒரு புதிய பரிமாணம்
“அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.” (யாத்திராகமம் 3:14) யெகோவா மோசேயிடம், இதற்கு முன்பாக, அவருடைய ஊழியர்களும்கூட அவருடைய பெயரின் முழு முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பதாக விளக்கினார். அவர் நோக்கமுள்ள கடவுளாக இருக்கிறார், எப்பொழுதும் அவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். சூழ்நிலை தேவைப்படுத்துமானால் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிட தம்முடைய செயல்முறையை அவரால் மாற்றிட முடியும். அவர் அத்தனை ஞானமுள்ளவராக இருக்கிறார்!
கடவுளுடைய பெயர் குறிப்பாக சுட்டிக் காண்பிக்கும் பொருளை சாத்தான் மதித்துணரவில்லை. ஏதேன் தோட்டத்தின் ஜீவ விருட்சத்தைப் பற்றி அவன் அறியாதிருந்தான். ஆதாமையும் ஏவாளையும் அதனிடமாக அவன் அழைத்துச் சென்றிருப்பானேயானால், அது யெகோவாவை ஒரு இரண்டக நிலையில் வைப்பதுபோல இருந்திருக்கும்: பாவம் அவர்களுக்கு மரணத்தை அர்த்தப்படுத்தும் என்ற தம்முடைய வார்த்தையை காப்பதா அல்லது ஜீவ விருட்சத்தின் சம்பந்தமாக தம்முடைய வார்த்தையை காப்பதா என்ற நிலை ஏற்பட்டிருக்கும். (ஆதியாகமம் 2:9; 3:1-6) எப்படியிருந்தாலும் சாத்தான் ஏமாற்றமடையவே இருந்தான்.
கடவுள் இப்பொழுது அவருடைய ஆவி புத்திரர்களால் எதிர்பார்க்கப்படாததும், முன்னால் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிராததுமான ஞானத்தைக் காண்பிக்க ஆரம்பித்தார். (எபேசியர் 3:10 ஒப்பிடவும்.) பரதீஸில் என்றுமாக வாழக்கூடிய மகிழ்ச்சியுள்ள, உண்மையுள்ள மனிதர்களால் பூமி நிறைந்திருக்க வேண்டும் என்ற அவருடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நீண்டதொரு காலப்பகுதியினூடே, அவருடைய ஞானத்தையும் அவருடைய திறமையையும் மகத்தான வகையில் வெளிப்படுத்தக்கூடிய அறிவிப்புகளையும் சம்பவங்களையும் வரிசையாக தொடங்கி வைக்க ஆரம்பித்தார். (ஆதியாகமம் 1:27, 28) மறுபடியும் மறுபடியுமாக இடையே புகுந்து தடங்கல் செய்வதற்குச் சாத்தான் எடுக்கும் முயற்சிகளைக் கடவுள் குலைத்து விடுவார்.
பரிசுத்த இரகசியம் படிப்படியாக வெளியாகிறது
முதல் கலகம் ஏற்பட்டப்பின் உடனடியாகவே கடவுள் செயல்பட்டார். குற்றஞ் செய்துவிட்ட தம்பதிகளை வழக்கு மன்றத்துக்குக் கூட்டி கீழ்ப்படியாமைக்கு அவர் வழங்கியிருந்த மரணத்தீர்ப்பை உறுதி செய்தார். ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சத்திலிருந்து சாப்பிடுவதைப்பற்றி என்ன? “பின்பு தேவனாகிய யெகோவா: ‘இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும்’ என்று, தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.”—ஆதியாகமம் 3:17-23.
இந்தச் சமயத்தில் கடவுள் சுவிசேஷகன் அல்லது நற்செய்தியை அறிவிப்பவனுடைய வேலையையும்கூட எடுத்துக்கொண்டார். அவர் தம்முடைய முதல் தீர்க்கதரிசனத்தை உரைத்தார்: “அப்பொழுது தேவனாகிய யெகோவா சர்ப்பத்தைப் பார்த்து: . . . ‘உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.’” (ஆதியாகமம் 3:14, 15) பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக விளக்கினான்: “நம்பிக்கையோடே (நம்பிக்கையின் ஆதாரத்தில், NW) அந்தச் சிருஷ்டியானது [மனிதன்] சுய இஷ்டத்தினாலே அல்ல கீழ்ப்படித்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.”—ரோமர் 8:20.
ஆம், மனிதன் நம்பிக்கையற்றவனாய், ஆதாமிலிருந்து சுதந்தரித்துக்கொண்ட மரணத்தில் கட்டுண்டவனாய் இருந்திருப்பான். ஆனால் ஆதாமின் சந்ததியில் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருப்பவர்களை விடுவிக்க தாம் நோக்கங் கொண்டிருப்பதை கடவுள் தெரிவித்தார். ஆனால், “நம்பிக்கையின் ஆதாரம்” என்னவாக இருந்தது? அவர் எவ்விதமாக மனிதர்களை விடுவித்து அதே சமயத்தில் பாவத்துக்காக மரணத்தீர்ப்பை அளிப்பதிலும் உறுதியாக இருக்கமுடியும்? இதுவே கடவுளின் இரகசியமான ஞானமாக இருந்தது; அது “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்த பரிசுத்த இரகசியமாக” இருந்தது. (கொலோசெயர் 1:25; 1 கொரிந்தியர் 2:7, 8) பூர்வ காலங்களிலிருந்த உண்மையுள்ளவர்கள் இரகசியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாக இருந்தபோதிலும், கடவுள் எவ்விதத்திலாவது தங்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஏன், தேவ தூதர்களும்கூட யெகோவா அவருடைய நோக்கத்தை எவ்விதமாக நிறைவேற்றுவார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள்! (1 பேதுரு 1:10-12) இந்தப் பரிசுத்த இரகசியம் உங்களுக்குப் புரிகிறதா?
மீட்கும் பொருளால் மீட்டுக்கொள்ளப்படுதல்
படிப்படியாக நூற்றாண்டுகளினூடே யெகோவா தம்முடைய ஆதிநோக்கத்தோடு தகவல்களை இணைத்தார். உண்மையுள்ளவனாயிருந்த ஆபிரகாமிடம், அவனுடைய வித்தின் மூலமாக கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதாக வாக்களித்தார். (ஆதியாகமம் 22:15-18) யாக்கோபின் மூலமாக, அந்த வித்து யூதா கோத்திரத்திலிருந்து வரும் ராஜாவாக இருப்பார் என்று வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 49:10) இந்தச் சமயத்துக்குள், தேவபக்தியுள்ள மனிதர்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் இது எவ்விதமாக இருக்கக்கூடும் என்பதை முழுமையாக அவர்கள் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே இருந்தார்கள். (யோபு 14:14, 15; எபிரெயர் 11:19) கடைசியாக வர இருக்கும் ராஜா அல்லது மேசியா தாவீதின் வம்சத்தில் வருவார் என்றும் அவர் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார் என்றும் தாவீதுக்குக் கடவுள் வாக்களித்தார்.—2 சாமுவேல் 7:16.
எல்லா தீர்க்கதரிசனங்களும் இந்தப் பரிசுத்த இரகசியத்தோடு சிறுசிறு விளக்கங்களை இணைத்தார்கள். ஆனால் மனிதர்களால் அந்த முழு காட்சியையும் காணமுடியவில்லை. கடைசியாக மேசியா தோன்றுவதற்குரிய சமயம் வந்தது. பின்னர் இறுதியாக, வெகுவாக விசாலமாக இருந்த இந்தக் கடவுளின் ஞானம் அதிகமாக தெளிவாக ஆனது. அது இயேசு கிறிஸ்துவையும் மனிதவர்க்கத்துக்கு [ஈடான] மீட்கும் பொருளாக அவருடைய பரிபூரண மனித ஜீவனின் ஏற்பாட்டையும் மையமாக கொண்டிருந்தது. அதை ஆதாரமாகக் கொண்டு ராஜ்யத்தின் மூலமாக யெகோவாவின் மீதமுள்ள மகத்துவமான நோக்கம் நிறைவேறிடும். மீட்கும் பொருளை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா?
ரோமர் அதிகாரங்கள் 5 மற்றும் 6-ல் பவுல் சிறப்பான ஒரு விளக்கத்தை இதற்குக் கொடுக்கிறான். ரோமர் 5:12-ல் அவன் சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய பாவத்தையும் மரணத்தையும் பற்றி விளக்குகிறான். பரிபூரண ஆதாமின் ஒரே ஒரு பாவத்தின் பாதிப்பும், அவனுடைய சந்ததி ஜீவனின் உரிமையை இழந்துபோனதும் எவ்விதமாக மற்றொரு பரிபூரண மனித ஜீவனால் சரியீடு செய்யப்படக்கூடும் என்பதை அவன் தொடர்ந்து காண்பிக்கிறான். அது “இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடையதாக” இருந்தது. (வசனங்கள் 15-21; 1 தீமோத்தேயு 2:5, 6-ஐயும் பாருங்கள்.) இயேசு எவ்விதமாக இந்த மீட்கும் பொருளை கொடுக்க முடியும்? ஏனென்றால் அவர் கடவுளுடைய குமாரனாக இருந்தார். இயேசு “பரிசுத்தரும் குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரு”மாக இருந்தார். (எபிரெயர் 7:26; லூக்கா 1:32, 33) இயேசுவினுடைய பிறப்பின் மரபுவழி பண்பியல் விவரங்களை நாம் விளக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. காபிரியேல் தேவதூதன், கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதாக இயேசுவின் தாய் மரியாளுக்கும் நமக்கும் உறுதியளித்திருக்கிறான். (லூக்கா 1:37) ஆதாமின் சந்ததியில் வந்த ஒரு பெண்ணிலிருந்து இயேசு பிறந்தபோதிலும் அவர் தேவனுடைய குமாரனாக—உண்மையில் ஒரு பரிபூரண மனிதனாக இருந்தார். அவருடைய இரத்தம் அல்லது ஜீவன், எருசலேமிலிருந்த ஆலயத்தில் இஸ்ரவேலின் ஆரோனிய ஆசாரியர்கள் பலி செலுத்திய எண்ணற்ற மிருகங்களின் இரத்தத்தைக் காட்டிலும் மிக அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. அவர் “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக” இருந்தார்.—யோவான் 1:29; 3:16.
கடவுள், இயேசுவின் மூலமாக இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்டு இன்னும் நீதியுள்ளவராக இருக்கக்கூடுமா? கடவுள் தம்முடைய குமாரனை மூன்றாம் நாள் உயிர்த்தெழுப்பினாரென்றால் மீட்கும் பொருளுக்கு என்ன ஆயிற்று? கடவுள் நீதியுள்ளவராக இருக்கிறார் என்று பவுல் நமக்கு உறுதியளிக்கிறான். அவனுடைய விளக்கத்தை கவனித்துப் பாருங்கள்: “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். விசுவாசத்தின் மூலமாய் அனுகூலப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, ஒப்புரவாதலின் பலியாக அவர் மரிப்பதை தேவன் வெளியரங்கமாக காண்பித்தார். இது ஏனென்றால் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும் (ஏனென்றால் அவருடைய இரக்கத்தினால் தேவன் மனிதர்களின் முற்காலத்திய பாவங்களைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்.) இக்காலத்திலே “தமது நீதியை காண்பிக்கும் பொருட்டாகவும் தாம் நீதியுள்ளவரும் இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படியாகவுமே.” (ரோமர் 3:24-26, அமெரிக்கன் மொழியாக்கம்) இப்பொழுது இது எதை அர்த்தப்படுத்துகிறது? ஒரு பரிபூரண மாம்சத்தினாலும் இரத்தத்தினாலுமான சரீரத்தைக் கொண்ட மனிதனாகிய இயேசு உண்மையில் மரித்துவிட்டார். ஒரு மனிதனாக அவர் என்றென்றுமாக மரித்தவராகவே இருக்கிறார். அவர் “தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27) ஆகவே மீட்கும் பொருள் செல்லுபடியாகிறது இயேசு மாம்சத்திலே மரித்தார்; மூன்றாம் நாளிலே அவர் “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”—1 பேதுரு 3:18.
புதிய உடன்படிக்கையும் புதிய சிருஷ்டியும்
இப்பொழுது பரிசுத்த இரகசியத்தின் மிகச் சிறப்பான பகுதியை நாம் பார்க்கிறோம். மரண பரியந்தம் இயேசு உண்மையுள்ளவராயிருந்தது, யெகோவாவின் பிரதான ஆசாரியனாகவும் ராஜாவாகவும் இருப்பதற்கு அவரை தகுதியுள்ளவராகச் செய்கிறது. தம்முடைய சிந்தப்பட்ட இரத்தத்தினால் அவர் ஒரு புதிய உடன்படிக்கையை செல்லும்படியாகும்படி செய்தார். இந்தப் புதிய உடன்படிக்கை, இயேசுவோடு ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யவிருக்கும் பரலோக கூட்டாளிகளை உண்டுபண்ண வேண்டியதாக இருந்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 5:9, 10; 20:4, 6) அவர்கள் ஒரு புதிய ஜனத்தை, “புதிய சிருஷ்டியை உண்டுபண்ணுவார்கள். அது நிச்சயமாகவே மதிப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது!—கலாத்தியர் 6:15, 16.
இதைச் சிந்தித்துப் பாருங்கள்: கடவுள், கிறிஸ்து இயேசுவின் மூலமாக, ஆண்களும் பெண்களுமாகிய மனிதவர்க்கத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களைத் தெரிந்துகொள்கிறார். சட்டப்படியாக அவர் அவர்களை நீதிமான்களாக்கி, ஆவியின் குமாரர்களென அவர்களை அழைக்கிறார். அவர்களுடைய மரணத்துக்குப் பின்பு கடவுளுடைய குறிப்பிட்ட காலத்தில் அவர் பரலோகத்துக்கு அவர்களை உயிர்த்தெழுப்பி இயேசுவுக்கு அவர் அளித்ததுபோலவே சாவாமையை அளிக்கிறார். (1 பேதுரு 1:3, 4) “புதிய சிருஷ்டி”யிலும் தம்மிடமாக அவர்களுடைய உத்தமத்தன்மையிலும் அவருக்கு என்னே நம்பிக்கை இருந்தது! யெகோவாவுக்கு முன்பாக பொய்யாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டியவனுக்கு என்னே ஒரு பதில்! (வெளிப்படுத்தின விசேஷம் 12:10) இயேசு கிறிஸ்துவோடுகூட சாவாமையுள்ளவர்களாய் இருந்தபோதிலும் அவர்கள் ஒருபோதும் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்க மாட்டார்கள்.
பரதீஸிய பூமி
கிறிஸ்து இயேசுவும் அவருடைய உடன் பரலோக ராஜாக்களும் ஆசாரியர்களும் அவருடைய ஆயிர வருட ஆட்சியின்போது மனிதன் மற்றும் பூமியின் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதைப் பார்த்துக்கொள்வார்கள். மீட்பின் நன்மைகளை பொருத்துகிறவராய், இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்பி அவர்களின் மத்தியில் உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்களையும், இந்தப் பொல்லாத ஒழுங்கின் முடிவை தப்பிப் பிழைக்கிறவர்களையும் மனித பரிபூரணத்துக்குக் கொண்டுவருவார். அதே சமயம் பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும். அவர்களைக் கெடுப்பதற்குச் சாத்தான் எடுக்கும் கடைசி முயற்சியை தள்ளிவிடுபவர்கள் அனைவருக்கும் பரிபூரண மனித ஜீவன் அளிக்கப்படும். சாத்தானும் அவனுடைய எல்லா பொல்லாத கும்பலும் என்றென்றுமாக அழிக்கப்படுவர். அமைதியும் ஒற்றுமையும் எல்லா சிருஷ்டிப்பிலும் காணப்படும். யெகோவாவின் அரசுரிமையையும் அன்பினால் அவர் செய்யும் ஆளுகையையும் இது முற்றிலுமாக சரி என்று காண்பிப்பதாக இருக்கும். தேவதூதர்களும் மனிதர்களும் தங்களுடைய சிருஷ்டிகருக்கும் கடவுளுக்கும் பற்றுமாறாத அன்பை நிரூபித்து காண்பித்திருப்பார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம், அதிகாரம் 20.
இப்பொழுது நம்மால் பரிசுத்த இரகசியத்தை நல்ல விதமாக புரிந்துகொள்ள முடிகிறது. இப்பொழுது நாம் தாவர மற்றும் மிருக உலகங்களில் அவருடைய படைப்பில் காணும் திட்ட அமைப்புகளையும்கூட மிஞ்சிவிடும் யெகோவாவின் ஞானத்தை நாம் காண்கிறோம். உணர்ச்சி பொங்க பின்வருமாறு சொல்ல நமக்கு நல்ல காரணமிருக்கிறது: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள் . . . சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.”—ரோமர் 11:33-36. (w87 4/15)
[பக்கம் 7-ன் படம்]
பரிபூரண ஆதாமின் ஒரே பாவத்தின் விளைவையும் ஜீவனை அவன் இழந்துவிட்டதையும் ஈடு செய்திட முடியும். எப்படி? மற்றொரு பரிபூரண மனித ஜீவனாகிய இயேசுவின் மூலமாக