விவாகமின்றி இருப்பது பலன்மிகுந்த ஒரு வாழ்க்கை முறை
“தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆகிலும். . .அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள்.”—1 கொரிந்தியர் 7:39, 40 தி.மொ.
தமக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் அனைவரின் முழு ஆத்துமாவோடுகூடிய வணக்கத்துக்கு யெகோவா தகுதிவாய்ந்தவர், விவாகமானவர்களாயிருந்தாலும் நாம் கடவுளை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் பெலத்தோடும் அன்புகூர வேண்டும். (மாற்கு 12:30) உண்மைதான், விவாகமானவர்களாயிருப்பவர்களைவிட விவாகமாகாத கிறிஸ்தவர்களுக்கு குறைந்த தொல்லைகள். ஆனால் விவாகமின்றி இருக்கும் யெகோவாவின் ஊழியம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கக்கூடுமா?
2. ஆம் இன்று பதிலளிக்கிறான் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு சமயத்தில் விவாகமானவர்களாயிருந்தும், ஆனால் சூழ்நிலைகள் மாறியிருப்பவர்கள் குறித்து அவன் பின்வருமாறு எழுதினான்: “மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறான்; தன் புருஷன் மரித்த பின்பு தனக்கு இஸ்டமானவனாயும் கர்த்தருக்குட்ப்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:39, 40
3. விவாகமாகாதிருக்கும் ஆட்களும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று பவுல் குறிப்பிடுவதால், ஒருசில காலப்பகுதிக்காவது விவாகமின்றி இருப்பதைக் குறித்து யார் நியாயமாகவே சிந்தனை செய்யக்கூடும்? விவாகமாகாத கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சிக்கு எது உதவுகிறது? ஆம், விவாகமின்றி இருப்பது எப்படிப் பலன் மிகுந்த ஒரு வாழ்க்கை முறையாக இருக்கக்கூடும்?
விவாகமின்றி இருப்பதன் பலன்மிகுந்த வருடங்கள்
4. அரசனாகிய சாலொமோன் ஞானி பின்வருமாறு துரிதப்படுத்தினான்: “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; [முதுமையின்] தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும். . . அவரை உன் வாபிபப் பிராயத்திலே நினை.” பிரசங்கி ஒப்பிடப்படுகையில் வாலிபப் பருவம் பெலமும் நல்ல ஆரோக்கியமும் கொண்ட ஒரு பருவம் இந்தக் காரியங்களை மனதை அலையவிடாமல் யெகோவாவின் சேவையில் பயன்படுத்துவது எவ்வளவு பொருத்தமானது! மேலும் இந்த ஆரம்ப ஆண்டுகள் வாழ்க்கையில் அனுபவம் பெறவும் நிலையான தன்மையை விருத்திசெய்துகொள்வதற்கும் காலமாக இருக்கின்றன. ஆனால் உலகத்திலுள்ள இளைஞர்கள் மோகம் கொள்வதில் இந்தக் காலத்தை செலவழிக்கின்றனர். உதாரணமாக 18 முதல் 24 வயதிலிருந்த ஆட்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வின் பலன்களைப் பாருங்கள் அவர்களில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு “காதல் அனுபவங்களைக்” கொண்டிருந்தனர். மற்றும் தங்களுடைய தற்போதைய அனுபவம்தான் உண்மையான காதல், மோகம் அல்ல என்றார்கள்.
5. விவாகப் பிரிவு, விவாகரத்து மற்றும் பல காரணங்களுக்காக முறிவுற்ற குடும்பங்கள் குறித்த புள்ளி விவரங்கள் மிக சீக்கிரமாக செய்யப்படும் விவாகங்களை சிபாரிசு செய்வதாயில்லை. காதல் சந்திப்புகள் மற்றும் ஈடுபாடுகளுக்கும் விவாகம் செய்வதற்கும் விரைவதைவிட, இளம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆரம்ப வருடங்களையாவது யெகோவாவுக்குச் செய்யும் கவலையற்ற சேவையில் எப்படி செலவிடலாம் என்பது குறித்து நம்பிக்கையான மனநிலையுடன் சிந்தித்துப் பார்ப்பது ஞானமான காரியம். ஓர் இளம் நபராக உங்களுடைய சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, பின்வருவன போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்வது நல்லது: “நான் இப்பொழுது உணர்ச்சியளவில் முதிர்ச்சிபெற்ற விவாகத்தைக் குறித்து ஆழ்ந்து யோசிக்கத் தயாராக இருக்கிறேனா? ஒரு நல்ல விவாக துணையாக இருப்பதற்கு வேண்டிய அனுபவம் எனக்கு இருக்கிறதா? விவாகம் மற்றும் பிள்ளைகளையுடைய ஒரு குடும்பத்தின் உத்தரவாதங்களை நான் சரியாக நிறைவேற்ற முடியுமா? நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்க, விவாகத்துடன் சம்பந்தப்பட்ட கவலைகளின்றி இளைமையின் சக்தியையும் பெலத்தையும் அவருக்காகக் கொடுக்க வேண்டாமா?
விவாகமின்றி கற்புள்ளவர்களாயிருப்பதன் மிகுந்த பலன்கள்
6. விவாகமாகாத கிறிஸ்தவர்கள் கவனம் சிதறாத நிலையை அனுபவிக்கிறார்கள், மேலும் “கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகம் இருக்கிறது” என்பதையும் காண்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:32-34; 15:58) எதிர் பாலரில் ஒருவரிடமாகக் கவனம் செலுத்துவதற்கு மாறாக சபையில் அன்பான உதவி தேவைப்படுகிற முதியோர் போன்ற மற்றவர்கள் உட்பட பலரிடமாகக் கிறிஸ்தவ அன்பைக் காண்பிக்க விவாகமாகாதிருப்பவர்களுக்குக் கூடுதலான வாய்ப்புகள் உண்டு. (சங்கீதம் 41:1) பொதுவாக விவாகமின்றி இருப்பவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் கூடுதலான நேரம் இருக்கிறது. (நீதிமொழிகள் 15:28) யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவும், அவரில் அதிகமாக சார்ந்திருக்கவும் அவருடைய வழிநடத்துதலை நாடுவதற்கும் அதிகமான வாய்ப்பும் இருக்கிறது. (சங்கீதம் 37:5; பிலிப்பியர் 4:6, 7; யாக்கோபு 4:8) ஆப்பிரிக்காவில் பல வருடங்களாக மிஷினரியாகப் பணியாற்றிய ஒரு விவாகமாகாத மனிதன் சொன்னதாவது:
7. “ஆப்பிரிக்க கிராமங்களில் கடந்த ஆண்டுகளின் வாழ்க்கை எளியதாக இருக்கிறது. நவீன நாகரிகத்தினால் திசை திருப்பப்படாததாக இருந்திருக்கிறது. இந்த மாற்றங்களின்றி நான் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவும் தியானிக்கவும் எனக்கு நல்ல வாய்புகளிருந்தது. இது என்னை பலமாக வைத்திருக்கிறது. ஆம், மிஷினரி வாழ்க்கை உண்மையிலேயே ஆசீர்வாதமான ஒன்றாகவும் பொருளாசைக்கு எதிராக ஒரு பாதுகாப்பாகவும் இருந்து வந்திருக்கிறது. கோடைக்கால மாலைப் பொழுதுகளில் யெகோவாவின் சிருஷ்டிப்புகளை எண்ணி தியானிக்கவும் அவரிடம் நெருங்கி வரவும் எனக்குப் போதுமான நேரம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மாலைப் பொழுதும் என்னுடைய விழிப்பாய் இருந்து, நான் தனிமையாக இருக்கையில் நட்சத்திரக் கூட்டங்கள் மிகுந்த வானின் கீழ் நடந்துகொண்டும் யெகோவாவுடன் பேசிக்கொண்டும் இருப்பதில்தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இது என்னை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்திருக்கிறது.”
8. உவாட்ச்டவர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் விவாகமாகாத சகோதரியின் பின்வரும் கூற்றும் குறிப்பிடத்தக்கது: “யெகோவாவுக்குச் செய்யும் என் சேவையில் விவாகமின்றி இருக்கும் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். நான் எப்பொழுதாவது தனிமையாகிவிடுகிறேனா? இல்லவே இல்லை. உண்மையில் நான் தனிமையாக இருக்கும் சமயங்கள்தான் விலைமதிக்கமுடியாத சமயங்களாயிருக்கின்றன. நான் யெகோவாவுடன் ஜெபத்தில் தொடர்புகொள்ள முடிகிறது. எவ்வித கவன மாற்றமும் இல்லாமல் தியானிக்கவும் என்னுடைய தனிப்பட்ட படிப்பை செய்யவும் முடிகிறது. எவ்வித கவன மாற்றமும் இல்லாமல் தியானிக்கவும் என்னுடைய தனிப்பட்ட படிப்பை செய்யவும் முடிகிறது. . . .விவாகமின்றி இருப்பது அளவில்லா மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கிறது.”
9. குடும்ப பொறுப்புடையவர்களுக்கு இல்லாத ஊழிய சிலாக்கியங்களையும் விவாகமாகாத தனிநபர்கள் ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் ஒரு பிராந்தியத்தில் ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கக்கூடும். அல்லது விவாகமாகாத இளம் ஆட்கள் உவாட்ச்டவர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது கிளைக்காரியாலயத்தில் பெத்தேல் குடும்ப அங்கத்தினனாக பணிபுரியும் ஒரு வாய்ப்பைப் பெறக்கூடும். விவாகமின்றி இருக்கும் ஓர் இளம் பெண் விவாகமின்றியிருக்கும் வயதில் பெரிய ஒரு சகோதரியுடன் தங்களுடைய சபையில் அல்லது ஊழியம் செய்யமுடியும். இது குறித்து உங்களுடைய வட்டார கண்காணியுடன் நீங்கள் ஏன் கலந்து பேசக்கூடாது? விவாகமின்றி இருக்கும் ஒரு நபராக, யெகோவாவுக்குத் துதியுண்டாக்கும் கூடுதலான சேவைசெய்ய முன்வாருங்கள், அவர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.—கலாத்தியர் 3:10.
கடந்த கால முன்மாதிரிகள்
10. யெகோவாவின் விவாகமாகாத ஊழியருக்கு முக்கிய முன்மாதிரி இயேசு கிறிஸ்து. அவர் கடவுளுடைய சித்தத்தை செய்வதில் முழுமையான ஈடுபாடுகொண்டார், “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) இயேசு மக்களில் உண்மையான அக்கறை உடையவராயிருந்தார், ஆண்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் மத்தியிலிருப்பதில் மகிழ்ச்சி கண்டார். ஆம், அவருடைய ஊழியத்தில் அவர் பயணம் செய்தார், சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் அவரை ஊழியத்தில் பின்தொடர்ந்தார்கள். (லூக்கா 8:1-3) ஆனால் அவரோடுகூட ஒரு மனைவியும் சிறு பிள்ளைகளும் தொடர்ந்து செல்வது என்பது அந்த வேலையை எவ்வளவு கடினமாகியிருக்கும்! இயேசுவின் காரியத்தில் அவர் விவாகமின்றி இருந்தது அவருக்கு நல்லதாகவே இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. இன்றும்கூட விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவன் அதுபோன்ற நன்மைகளை அனுபவிக்கக்கூடும், விசேஷமாக தொலைதூர அல்லது ஆபத்தான பகுதிகளில் ராஜ்ய செய்தியை பிரசங்கிக்க அழைக்கப்படும்போது அது உண்மையாக இருக்கக்கூடும்.
11. ஆனால் விவாகமின்றி இருப்பதை மற்றவர்களுங்கூட நடைமுறையானதாகவும் பலன்மிகுந்ததாகவும் இருப்பதைக் கண்டிருக்கின்றனர். விவாகத்துக்கும் பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்துவந்த ஒரு சமுதாயத்தில் யெப்தாவின் மகள் விவாகமின்றி இருப்பதன் மூலம் தன் தகப்பனின் பொருத்தனையை மனமுவந்து நிறைவேற்றினாள். யெகோவாவின் சேவையில் அவள் சந்தோஷத்தைக் கண்டாள், மற்றவர்களும் அவளைத் தவறாமல் உற்சாகப்படுத்தினது குறிப்பிடத்தக்கது. ஏன், “இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் நாலுநாள் கிலேயத்தியனான யெப்தாவின் குமாரத்தியைப் பாடிக்கொண்டாடுவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.”! (நியாயாதிபதிகள் 11:34-40, தி. மொ.) அது போல விவாகமான கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் தைரியத்துடன் யெகோவாவை சேவிக்கும் விவாகமாகாத பெண்களைப் போற்றிட வேண்டும்.
12. பிலிப்பின் நான்கு கன்னிப் பெண்பிள்ளைகளும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.’ (அப்போஸ்தலர் 21:8,9) விவாகமாகாத இந்தப் பெண்கள் யெகோவாவுக்குத் துதியுண்டாக்கும் சுறுசுறுப்பான சேவையில் அதிக திருப்தியடைந்திருக்க வேண்டும். இதற்கு ஒப்பாக, விவாகமாகாதிருக்கும் அநேக பெண்கள் பயனியர்களாக, அல்லது முழுநேர ராஜ்ய பிரசங்கிகளாக சேவை செய்யும் பலன் மிகுந்த சிலாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். நிச்சயமாகவே, நற்செய்தியை அறிவிக்கும் பெண்களின் திரளான சேனையின்’ பாகமாக இருக்கும் அவர்கள் போற்றுதலுக்குப் பாத்திரமானவர்கள்.—சங்கீதம் 68:11, NW.
13. விவாகமின்றி இருப்பது நன்மையாக இருப்பதைப் பவுல் கண்டான். தன்னுடைய ஊழியத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தான், மிகுந்த கஷ்டங்களையும் பல ஆபத்தான சூழ்நிலைகளையும், தூக்கமில்லாத இரவுகளையும், பட்டினியாயிருக்க வேண்டிய நிலைமையையும் எதிர்பட்டான். (2 கொரிந்தியர் 11:23-27) பவுல் விவாகமாகியிருந்தால் இவையனைத்தும் அதிகக் கடினமாகவும் சோர்வை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவன் ஒரு குடும்பத்தையுடையவனாய் இருந்திருப்பானானால், “புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாய்” இருந்திருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்க முடியாது. (ரோமர் 11:13) அவன் சோதனைகளை ஏதிர்பட்ட போதிலும், விவாகமின்றி இருப்பது பலன்மிகுந்த ஒரு வாழ்க்கை முறையாக இருக்கமுடியும் என்பதற்குப் பவுல் நேரடியான அத்தாட்சியைக் கொண்டிருந்தான்.
தற்கால முன்மாதிரிகள்
14. பவுலைப் போலவும் விவாகமின்றி இருந்த மற்ற பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவும், ‘கோல்போர்ட்டர்’ என்றழைக்கப்பட்ட முழுநேர வேலையில் (1881 முதல்) பங்குகொண்ட கடவுளுடைய மக்களின் பலர் குடும்பச் சார்பற்ற விவாகமின்றி இருந்த தனியாட்களாக இருந்தனர். தங்களுக்குப் பழக்கமாயிராத மாநகர, நகரப் பகுதிகளுக்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் மனமுவந்து சென்று, நல்ல இருதயமுள்ள ஆட்களைத் தேடி அவர்களுக்குப் பிரசுரங்களை அளித்து வந்தனர், ரயில் சைக்கிள், குதிரை வண்டி அல்லது மோட்டார் வாகனங்களில் பயணம் செய்தனர். பெரும்பாலும் அவர்கள் வீடுவீடாக நடந்துசெல்வதில் மகிழ்ச்சி கண்டனர். (அப்போஸ்தலர் 20:20, 21) “சில சமயங்களில் அவர்கள் பண்ணைப் பொருட்களுக்காக கோழிக்குஞ்சுகளுக்காக, சோப் மற்றும் பல பொருட்களுக்காக தங்கள் பண்டங்களை [பைபிள் பிரசுரங்களை) மாற்றி, அந்தப் பொருட்களை தாங்கள் பயன்படுத்தினார்கள் அல்லது மற்றவர்களுக்கு விற்றனர்,” என்பது ஒரு யெகோவாவின் சாட்சியின் பழைய நினைவுகள். அவர் தொடர்ந்து சொல்லுகிறார்: “சில சமயங்களில் மக்கள் அதிகமாக இல்லாத பகுதிகளில் அவர்கள் விவசாயிகளுடனும், பண்ணையாளர்களுடனும் இரவு தங்கினர். சில சமயங்களில் வைக்கோல் போரிலும் படுத்து தூங்கினர். .. .இந்த உண்மையுள்ள ஆட்கள் [இவர்களில் பலர் விவாகமாகாதவர்கள்] பல வருடங்களாக மூப்பு அவர்கள் மேற்கொள்ளும்வரை ஊழியத்தைத் தொடர்ந்தனர்.” அந்த நாளைய ’கோல்போர்ட்டர்’ என்றழைக்கப்பட்ட முழுநேர ஊழியர்கள் சார்பில் பின்வருமாறு எழுதினாள்: “நாங்கள் யெகோவாவின் சேவையில் இளைஞராகவும் சந்தோஷமாகவும், யெகோவாவை சேவிப்பதில் எங்கள் பெலனை உபயோகிக்க மகிழ்ச்சியாயிருந்தோம்.”
15. பிற்காலத்திலும் அநேக பயனியர்கள், அல்லது முழுநேர ஊழியர்களுங்கூட விவாகமின்றி இருந்தனர். அவர்கள் அநேக சயமங்களில் தனிப் பிராந்தியங்களில் சாட்சி கொடுத்தனர், புதிய சபைகளை நிறுவிட உதவினர், மற்றும் யெகோவாவின் சேவையில் மற்ற ஆசீர்வாதங்களையும் அனுபவித்தனர். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருக்கையில் 1943 முதல் கிலியட் உவாட்ச் டவர் பைபிள் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. அவர்களில் சிலருக்கு கூடுதலான சேவைக்கு வழிநடத்திய கிளர்ச்சி மிகுந்த கதவு திறவுண்டது. (1 கொரிந்தியர் 16:9) விவாகமாகாத அந்தப் பயனியர்களில் பலர் இந்த கிலியட் பள்ளியில் மிஷினரி பயிற்சி பெற்றனர். விரைவில் அவர்கள் ராஜ்ய செய்தியைப் புதிய பிராந்தியங்களில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தனர். விவாக உத்தரவாதங்களின் இடையூறு இல்லாதவர்களாக யெகோவாவின் சேவைக்குத் தங்களை அற்பணித்தார்கள் அந்த ஆரம்ப கிலியட் பயிற்சி பெற்றவர்களில் சிலர் இன்னும் விவாகம் செய்துகொள்ளாமல் மிஷினரி ஊழியத்தில் அல்லது முழுநேர ஊழியத்தின் மற்ற சில பகுதிகளில் சுறுசுறுப்பாயிருக்கின்றனர்.
16. விவாகமாகாத கிறிஸ்தவர்களில் பலர் உவாட்ச்டவர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது உலகின் மற்ற பாகங்களிலுள்ள அதன் கிளைக்காரியாலயங்களிலுள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களாக சேவித்து வந்திருக்கின்றனர். விவாகமின்றி இருப்பதை அவர்கள் பலன் மிகுந்த வாழ்க்கை முறையாகக் கண்டிருக்கிறார்களா? ஆம், நிச்சயமாகவே புரூக்ளின் பெத்தேலில் பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கும் ஒரு விவாகமாகாத ஒரு சகோதரர் சொன்னார்: “கடவுளுடைய வார்த்தையின் செய்தியைத் தாங்கிய இலட்சக்கணக்கான பத்திரிகைகள் பூமியின் கடைமுனை மட்டும் செல்லுவதைக் காணும் மகிழ்ச்சிதானே மகத்தான பலனாக இருந்திருக்கிறது.” ஏறக்குறைய 45 ஆண்டுகள் பெத்தேலில் பணிபுரிந்த விவாகமாகாத இன்னொரு சகோதரர் சொன்னார்: “அவருடைய பரிசுத்த சித்தத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதற்காக என்னை ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு வேண்டிய உதவிக்கும் ஞானத்துக்கும் என்னுடைய அன்புள்ள பரம தகப்பனை நான் தினந்தோறும் ஜெபத்தில் கேட்பேன். . . .நான் உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான, பலன் மிகுந்த மற்றும் ஆசீர்வாதமான வாழ்க்கை முறையை அனுபவித்து வந்திருக்கிறேன்.”
விவாகமின்றி கற்பைக் காத்துக்கொள்ளுதல்
17. விவாகமின்றி இருக்கும் ஒரு வாழ்க்கை பலன் மிகுந்ததாயிருக்க முடியும் என்பது பைபிள் கால முன்மாதிரிகளிலிருந்தும் தற்கால முன்மாதிரிகளிலிருந்தும் புலப்படுகிறது. உண்மைதான், உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு காலக்கட்டத்தில் நீங்கள் விவாகமில்லாத நிலையில் இருந்தாலும் நீங்கள் ‘உங்கள் இருதயத்தில் உறுதியுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:37) ஆனால் விவாகமின்றி இருக்கையில் உங்கள் கற்பைக் காத்துக்கொள்ள உங்களுக்கு எது உதவியாக இருக்கும்? உதவிக்கு மிகச் சிறந்த ஊற்றுமூலர் “ஜெபத்தைக் கேட்கிறவராகிய” யெகோவா தேவன். (சங்கீதம் 65:2) எனவே அவரிடம் உதவிக்கு ஜெபிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருந்து,” சமாதானம் மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை உட்படுத்தும் கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிப்படுத்திட அவருடைய ஆவியின் உதவிக்கு ஜெபியுங்கள். (ரோமர் 12:12; லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) பின்பு, ஜெப சிந்தயோடு கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனைகளைத் தவறாமல் சிந்திப்பவர்களாயும், அவற்றைப் பொருத்தி பிரயோகிப்பவர்களாயும் இருங்கள்.
18. விவாகமின்றி கற்பைக் காத்துக்கொள்வதற்கு உதவும் மற்றொரு காரியம், காம் இச்சையைத் தூண்டிடும் எதையும் தவிர்ப்பதாகும். பொருத்தமாகவே அது ஆபாசமான படங்களையும் இலக்கியங்களையும் ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்குகளையும் உட்படுத்தும். பவுல் பின்வருமாறு சொன்னான்: “துர்க் குணத்திலே குழந்தைகளாயும் புத்தியிலே தேறினவர்களாயுமிருங்கள்.” (1 கொரிந்தியர் 14:20) துர்க்காரியங்களை அறிந்துகொள்ளவோ அல்லது அனுபவிக்கவோ முற்படாதீர்கள், ஆனால் கடவுளுடைய உதவியுடன் இந்தக் காரியத்தில் குழந்தையைப்போல் அனுபவமற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் இருங்கள். அதே சமயத்தில், பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடும் தவறான நடத்தையும் யெகோவாவின் பார்வையில் சரியல்ல.
19. விவாகமாகாத ஒருவராக உங்கள் கூட்டுறவைக் குறித்து கவனமாயிருப்பதன் மூலமும் நீங்கள் கற்புள்ளவர்களாயிருக்க உதவப்படுவீர்கள். (1 கொரிந்தியர் 15:33) பாலுறவு மற்றும் விவாகம் ஆகியவற்றை தங்களுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய அம்சங்களாகக்கொள்ளுகிறவர்களின் மற்றும் அவற்றைப் தங்களுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய அம்சங்களாகக் கொள்ளுகிறவர்களின் மற்றும் அவற்றைப் பற்றியே பேசுகிறவர்களின் கூட்டுறவைத் தவிருங்கள், எல்லாவிதத்திலும் அசுத்தமான பரியாசங்களைத் தவிருங்கள்! பவுல் பின்வருமாறு புத்திசொல்லுகிறான்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும் புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்: ஸ்தோத்திரஞ் செய்தலே தகும்.”—எபேசியர் 5:3, 4.
பலன்மிகுந்த ஓர் எதிர்காலம்
20. விவாகமாகாத ஒரு கிறிஸ்தவனாக உங்களுடைய வாழ்க்கை வருடங்களை யெகோவாவின் சேவையில் மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவது உங்களுக்குத் தற்போது மனதிருப்தியையும் மனசமாதானத்தையும் தந்திடும். அப்படிச் செய்வது உங்களுடைய ஆவிக்குரிய முதிர்ச்சிக்கும் உறுதிக்கும் துணை நிற்கும். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவுவரை நீங்கள் ராஜ்யத்தினிமித்தம் விவாகமின்றி இருப்பீர்களானால், தம்முடைய பரிசுத்த சேவையில் சுயதியாகம் உட்பட்ட உங்கள் முயற்சிகளை யெகோவா மறக்க மாட்டார்.
21. விவாகமின்றி இருக்கும் ஓர் ஆணாக அல்லது பெண்ணாக நீங்கள் ராஜ்ய அக்கறைகளைத் தொடர்ந்து நாடுகிறவர்களாயிருந்தால், அநேக ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள். (நீதிமொழிகள் 10:22) வாழ்க்கையில் பின்னொரு சமயம் நீங்கள் விவாகத்திற்குள் பிரவேசிக்க நேர்ந்தால், கூடுதலான அனுபவமுடையவர்களாயும் விவாக பந்தத்தில் இணைகிறவர்களாயிருப்பீர்கள். மேலும், வேத வசனங்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன்மூலம், கடவுளை உண்மையோடு சேவிப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஒப்புக்கொடுத்த உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் துணைவரை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இதற்கிடையில், நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவாவின் சேவையில் விவாகமின்றி இருப்பது பலன்மிகுந்த ஒரு வாழ்க்கை முறையாக இருப்பதைக் காண்பீர்கள். (W87 11/5)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் ஊழியங்களின் மத்தியில், விவாகமின்றி கற்பைக் காத்துக்கொள்வதன் சில நற்பலன்கள் யாவை?
◻ விவாகமின்றி இருப்பது பலன் மிகுந்தது என்பதைக் காண்பிக்கும் வேதப்பூர்வமான முன்மாதிரிகள் யாவை?
◻ பலன் மிகுந்த விவாகமாகாமலிருக்கும் வாழ்க்கைக்குத் தற்காலத்தில் என்ன முன்மாதிரிகள் இருக்கின்றன?
◻ விவாகமாகாமலிருக்கும்போது ஒரு கிறிஸ்தவன் கற்புள்ளவனாக இருப்பதற்கு எது உதவும்?
[கேள்விகள்]
1. நாம் விவாகமாகாமல் இருந்தாலும் விவாகமானவர்களாய் இருந்தாலும் யெகோவாவுக்கு எதில் கடன்பட்டிருக்கிறோம்?
2, 3. (எ) ஒன்று கொரிந்தியர் 7:39, 40-ல் பவுல் சொல்லும் கருத்து என்ன? (பி) என்ன கேள்விகளைக் கவனிப்பது நல்லது?
4. வாலிபப் பிராயத்தைக் குறித்து எது உண்மையாயிருக்கிறது?
5. விசுவாசத்தைக் குறித்ததில், ஓர் இளம் நபர் என்ன தனிப்பட்ட கேள்விகளைச் சிந்திப்பது தகுந்ததாயிருக்கும்?
6, 7. (எ) விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவர்கள் பொதுவாய் என்ன நன்மைகளை அனுபவிக்கின்றனர்? (பி) இது சம்பந்தமாக, ஆப்பிரிக்காவிலுள்ள விவாகமாகாத ஒரு மிஷினரி என்ன சொன்னார்?
8. விவாகமின்றி இருப்பதைக் குறித்ததில், சங்கத்தின் தலைமைக் காரியாலயங்களில் பல ஆண்டுகளாக சேவை செய்துவந்த ஒரு சகோதரி என்ன சொன்னார்கள்?
9. விவாகமின்றி ஒரு கிறிஸ்தவன் என்ன ஊழிய சிலாக்கியங்களை அனுபவிக்கக்கூடும்?
10. யெகோவாவின் விவாகமாகாத ஊழியராக இருந்ததில் முக்கிய முன்மாதிரியாக இருப்பது யார்? அவர் விவாகம் செய்துகொள்ளாமலிருந்தது ஏன் நன்மையாக இருந்தது என்று கருதுகிறீர்கள்?
11, 12. இன்று யெகோவாவை சேவிக்கும் விவாகமாகாத பெண்களின் என்ன நல்ல முன்மாதிரிகள் இருக்கின்றன?
13. விவாகமின்றி இருப்பது பலன்மிகுந்த ஒரு வாழ்க்கை முறையாக இருக்கமுடியும் என்பதைப் பவுலின் வாழ்க்கை எப்படி விளக்குகிறது?
14. விவாகமின்றி இருந்த அநேக கோல்போர்ட்டர்களின் மகிழ்ச்சியான அனுபவங்கள் என்ன?
15. விவாகமாகாத அநேக பயனியர்களுக்கு ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக்கு வழிநடத்திய என்ன கதவு திறவுண்டது?
16. பெத்தேல் குடும்பத்தின் விவாகமாகாத அங்கத்தினர்கள் விவாகமின்றி இருப்பதை பலன்மிகுந்த வாழ்க்கையாகக் கண்டிருக்கின்றனர் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
17. விவாகமின்றி கற்பைக் காத்துக்கொள்வதற்கு உதவும் இரண்டு காரியங்கள் என்ன?
18. ஒன்று கொரிந்தியர் 14:20 எப்படி விவாகமாகாத நபராகக் கற்பைக் காத்துக்கொள்வதுடன் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது?
19. விவாகமாகாத நபராகக் கற்பைக் காத்துக்கொள்வதற்கு உதவும் மற்ற வழிகளைக் குறிப்பிடும் வசனங்கள் என்ன?
20 விவாகமாகாதிருக்கும் வாழ்க்கை வருடங்களை யெகோவாவின் சேவையில் மிகச் சிறந்தவிதத்தில் பயன்படுத்துவது எதில் விளைவடையும்?
21. கற்புள்ள மற்றும் பலன்மிகுந்த விவாகமற்ற வாழ்க்கையின் ஒரு காலப்பகுதிக்குப் பின்பு நீங்கள் விவாகம் செய்துகொள்ள நேர்ந்தால், என்ன காரியங்களுடன் விவாக பந்தத்துக்குள் பிரவேசிப்பவர்களாய் இருப்பீர்கள்?
[பக்கம் 19-ன் பெட்டி]
விவாகமின்றி கற்பைக் காத்துக்கொள்ள உதவும் காரியங்கள்
ஆவியின் கனிகளை வெளிப்படுத்திட கடவுளுடைய ஆவியின் உதவிக்குத் தவறாமல் ஜெபியுங்கள்
கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனையைத் தவறாமல் சிந்திப்பவர்களாயும், அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பவர்களாயும் இருங்கள்
ஆபாச படங்களையும் இலக்கியங்களையும் ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்குகளையும் தவிருங்கள்
உங்கள் கூட்டுறவைக் குறித்து கவனமாயிருங்கள்
அசுத்தமான பேச்சு மற்றும் பரியாசத்தை வெறுத்தொதுக்குங்கள்
[பக்கம் 10-ன் பெட்டி]
யெப்தாவின் மகள், அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் யெகோவாவின் மற்ற ஊழியர்கள் விவாகமின்றி இருப்பது பலன்மிகுந்த வாழ்க்கை முறையாக இருப்பதைக் கண்டனர். உங்களால் முடியுமா?