நீங்கள் ஏன் அக்கறைக் காட்டவேண்டும்?
எதில் அக்கறைக் காட்ட வேண்டும்? மனிதவர்க்கத்தின் சரித்திரத்திலேயே ஏற்பட இருக்கும் ஒரு பிரம்மாண்டமான மாற்றத்தில்! பூமிக்குரிய காட்சியின் பேரில் கடவுளாலான ஒரு புதிய அரசாங்கம் ஆதிக்கம் எடுத்துக்கொள்ளப்போகிறது. (தானியேல் 2:44) இந்த மாற்றம் பூமியின் மேலுள்ள ஒவ்வொரு ஆண், பெண், பிள்ளை யாவரையும்—அவர்களுடைய நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பாதிக்கும். மத்தேயு 24:34-ல் சொல்லப்பட்ட சந்ததிக்குள் இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றம் நடைபெற இருக்கிறது. இப்படியிருக்க, இந்த மாற்றத்தைப் பற்றிய செய்தியில் எல்லா மக்களும் உண்மை மனதோடும் ஊக்கத்தோடும் அக்கறை காட்ட வேண்டும். உண்மையில் ‘எனக்கு அக்கறை இல்லை’ என்று சொல்லுவது தவறாகும்.
ஏன் அநேகர் அக்கறை காட்டவில்லை
இப்பேர்ப்பட்ட செய்தி நம்முடைய நவீன காலத்தில் முதல் முறையாக அறிவிக்கப்படவில்லை. அதைக் கேட்கும்படி அழைக்கப்படுகிறவர்களின் அக்கறையைத் தூண்டியிருக்க வேண்டிய ஒரு முக்கியமான மற்றும் அவசரமான செய்தி முற்காலத்திலும் அறிவிக்கப்பட்டது. அப்பேர்ப்பட்ட ஒரு சமயம் நோவாவின் நாட்களிலாகும். அக்காலத்தில் மனிதரின் துன்மார்க்க, ஒழுக்கங்கெட்ட, மற்றும் மூர்க்கமான சுபாவத்தின் காரணமாக, மனிதவர்க்கத்தை ஒரு பூகோள ஜலப்பிரளயத்தால் அழித்துப்போட கடவுள் நோக்கங்கொண்டார். (ஆதியாகமம் 6:5-7, 13) ஆகிலும், தெய்வ பயமற்றவர்களை அழிக்க அவர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, வரப்போகும் ஜலப்பிரளயத்தைப்பற்றி அவர்களுக்கு எச்சரிப்பு கொடுத்து, உயிருடன் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அவர்கள் என்ன போக்கைத் தொடரவேண்டும் என்றும் அவர்களுக்குச் சொன்னார். அந்தச் செய்தி எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும், அதைப்பற்றி கேள்விப்பட்ட விரும்பாமல் பொதுமக்கள் “உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:39; லூக்கா 17:26, 27; 2 பேதுரு 2:5) அவர்கள் அசட்டையாக, அலட்சியமாக—வெறுமென அக்கறையற்றவர்களாக இருந்தார்கள்! இதன் காரணமாக, அவர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள்.
ஒழுக்கங்கெட்ட நடத்தைக்குப் பெயர்பெற்றிருந்த பட்டணங்களாகிய சோதோம், கொமோராவின் குடிமக்களின் காலத்தின்போதும் இதேப் போன்ற நிலைமை இருந்தது. வரப்போகும் அழிவைப்பற்றி அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்ட போதிலும், அவர்களுடைய பயங்கர கெட்ட நடத்தையின் காரணமாக, அவர்கள் செவிகொடுக்கவில்லை. தங்களுடைய அன்றாடக வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக்கூடிய எவரிலும் அவர்கள் அக்கறையுள்ளவர்களாய் இல்லை. லோத்து என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டுமே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவனாய் இருந்தான்.—ஆதியாகமம் 18:20-30; 19:1-29; லூக்கா 17:28-30.
ஆகையால், இந்தப் பட்டணங்களின் மக்கள் மத்தியில் கடவுளுடைய செய்தியானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இல்லை. அக்கறை காட்டினால் அயலார் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றி ஒருவேளை அவர்கள் அதிக கவலையுள்ளவர்களாய் இருந்திருக்கக்கூடும். அல்லது தங்கள் வாழ்க்கையில் தாங்கள் செய்ய விரும்பாத மாற்றங்களை அவர்கள் செய்யவேண்டியதாய் இருக்கும் என்று அவர்கள் பயந்திருக்கலாம். தங்களுடைய தற்போதைய கட்டுப்பாடில்லாத வாழ்க்கைபாணியை அவர்கள் அனுபவித்துக் கழித்தார்கள் என்பது தெளிவாக இருந்தது. (யூதா 7) ஆகையால் அழிவு வரும் நாள் வரைக்கும், அவர்கள் எதுவும் நேரிடும் என்று சந்தேகப்படவில்லை, என்ன நடக்க இருந்தது என்பதன் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை.
இயேசுவின் நாளில் அக்கறை காட்டாதவர்கள்
கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் தம்மைப் பின்பற்றினவர்கள் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி அவர்களை அனுப்பினார். (மத்தேயு 10:7) உண்மையில், அவர் தம்முடைய சீஷர்கள் இந்த அசாதாரணமான மற்றும் முக்கிய செய்தியை எவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் அளிக்க வேண்டும், வீட்டுக்காரர் மெய்யான அக்கறை காட்ட தவறும்போது தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவர்களுக்குப் போதித்தார். தம்முடைய சீஷர்களை அவர் பயிற்றுவிக்க துவங்குகையில் அவர் சொல்வதைக் கேளுங்கள்: “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.”—மத்தேயு 10:12-14.
யெகோவாவின் ராஜ்யத்தில் அக்கறை காட்டாத ஒரு வீட்டை அல்லது பட்டணத்தை விட்டுச் செல்லும்போது தம்முடைய சீஷர் “தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடும்”படி இயேசு சொன்னதை கவனியுங்கள். இந்தப் புத்திமதியின் மூலம் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுவதானது, வீட்டுக்காரர் கடவுளுடைய செய்தியில் காண்பிக்கும் அக்கறையின்மையின் விளைவுகளுக்குத் தாங்கள் உத்தரவாதமுள்ளவர்கள் அல்ல என்பதை எடுத்துரைப்பதாக இருக்கிறது. இயேசுவின் சீஷர் சமாதானத்துடன் விட்டுச் செல்கிறார்கள் என்றும், கடவுளிடமிருந்து வரக்கூடிய முடிவான விளைவுகளை அந்த வீட்டார் அல்லது பட்டணத்தார் அனுபவிக்கும்படி விட்டு புறப்பட்டு போகிறார்கள் என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
அக்கறை காட்டுங்கள்—அது உங்களுடைய உயிரைக் குறிக்கிறது!
நம்முடைய நாட்களில் காணப்படும் பிரதிபலிப்பை நோவாவின் நாட்களிலும் மற்றும் சோதோம், கொமோரா நாட்களிலும் ஆட்களின் பிரதிபலிப்புடன் இயேசு ஒப்பிட்டது அக்கறைத் தூண்டுவதாக இருக்கிறது. (மத்தேயு 24:37-39; லூக்கா 17:26-30) நோவாவின் நாட்களிலும் லோத்துவின் நாட்களிலும் ஒழுக்கக்கேடும் வன்முறையும் பிரபலமாக இருந்தது. சோதோம், கோமோரா பட்டணத்தார் அக்கிரமத்திலும் ஒழுக்கமற்ற நடத்தையிலும் ஈடுபட்டதைக் கண்டு லோத்து மிகவும் வதைக்கப்பட்டு கவலைப்பட்டான்.—2 பேதுரு 2:6-8.
ஆகிலும், இயேசு நோவாவின் நாட்களையும் லோத்துவின் நாட்களையும் குறிப்பிடுகையில், அந்நாட்களின் ஒழுக்கக்கேட்டுக்கும் வன்முறைக்கும் நம்முடைய கவனத்தைத் திருப்பவில்லை. அதற்கு எதிர்மாறாக, அவர்களுடைய அன்றாடக கவலைகளின் பேரில்—சாப்பிடுவது, குடிப்பது, விவாகம் செய்வது, கொடுத்தல், வாங்கல், கட்டுதல், நடுதல்—ஆகியவற்றிற்கு நம்முடைய கவனத்தைத் திருப்புகிறார். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திக்கு அநேகர் செவிகொடுக்கமாட்டார்கள், ஆனால் தங்களுடைய அன்றாடக வாழ்க்கை அலுவலங்களில் அவர்கள் ஆழ்ந்திருப்பார்கள் இதன் காரணமாக யெகோவா என்ன செய்ய நோக்கங் கொண்டிருக்கிறார் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். செய்தியானது உயிர் அல்லது மரணத்தைக் குறிக்கும் முக்கியத்துவம் உடைய ஒன்றாக இருக்கிறது. கவனியாமல் இருப்பது அல்லது அக்கறை காட்டாமலிருப்பது ஒரு வினைமையான பாவம்.—மத்தேயு 6:31, 32-ஐ ஒப்பிடவும்.
எவ்வளவு வினைமையானது? இயேசு தொடர்ந்து விளக்குகிறார். செவிகொடுக்காத அல்லது அக்கறை காட்டாத “அந்தப் பட்டணத்தாருக்குக் காட்டும் இரக்கத்தைப் பார்க்கிலும் சோதோம், கொமோரா பட்டணத்தாருக்கு அதிக இரக்கத்தை நியாயத்தீர்ப்பு நாளிலே கடவுள் காட்டுவார்.” (மத்தேயு 10:15, Today’s English Version) ஒருவன் அக்கறை காட்டி, செய்தியை நம்பினால், தான் ஒழுக்கங்கொட்டவனாகவும் மூர்க்க குணமுள்ளவனாகவும் இருந்தாலுங்கூட, கொரிந்துவிலுள்ள பூர்வீக கிறிஸ்தவர்கள் செய்ததுபோல, தன்னுடைய சுபாவத்தன்மையை மாற்றிக்கொண்டு கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜையாக இருக்க தகுதிபெற கடவுளுடைய கண்களில் இரக்கத்தைப் பெறக்கூடும்.—1 கொரிந்தியர் 6:
9-11.
தம்முடைய சீஷர்களோடு இயேசு கொண்டிருந்த தம்முடைய எல்லா உரையாடல்களிலும், இயேசு அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய முக்கியமான செய்திக்குச் செவிகொடுக்கும்படி, கவனித்து கேட்கும்படி, அக்கறை காட்டும்படி உற்சாகப்படுத்தினார். அவர்களுடைய கவனத்தைத் தூண்டுவதற்காக அவர் பின்வருமாறு புத்திகூறினார்: “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்.” “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” “நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.” “நீங்கள் கேட்டு உணருங்கள்.”—லூக்கா 8:18; மாற்கு 4:9; 7:14; மத்தேயு 15:10.
ஆகையால், அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டைச் சந்திக்கையில், “உள்ளே வாருங்கள், எனக்கு இதில் அக்கறை உண்டு” என்று சொல்வது உங்களுக்கு நன்மையில் விளையக்கூடும். (w88 2⁄1)