கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பூமியின் பிரகாசமான எதிர்காலம்
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” என்பதாக பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:1) முந்தையக் கட்டுரையில் நாம் பார்த்தவிதமாகவே, கிறிஸ்து பிறப்பதற்கு 500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுள், தானியேலின் நாள் முதல் நம்முடைய நாள்வரையாக உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய ஒரு தீர்க்கதரிசன முன்காட்சியை தானியேல் புத்தகத்தில் எழுதப்படும்படியாகச் செய்தார். இந்தத் தீர்க்கதரிசனங்களின் திருத்தமானத் தன்மை, தானியேல் தீர்க்கதரிசனத்தில் மீதமுள்ளவையும்கூட நிறைவேறும் என்பதற்கும் வெகு சீக்கிரத்தில் மனித அரசாங்கங்களுக்குப் பதிலாக கிறிஸ்து இயேசுவின் கீழ் கடவுளுடைய ராஜ்யம் வரும் என்பதற்கும் நமக்கு உறுதியளித்து, விசுவாசத்துக்குப் பலமான காரணத்தைக் கொடுக்கிறது.
மனிதவர்க்கத்துக்கு அது எப்பேர்ப்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிப்பதாக இருக்கும்! அந்தக் காலத்தை எதிர்நோக்கியவராய் கடவுள் தாமே சொல்வதாவது: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” (வெளிப்படுத்துதல் 21:5) அந்த மகிழ்ச்சியான காலத்தைப் பற்றிய ஒரு காட்சியை நமக்கு வார்த்தைகளில் வருணித்துக் காட்டும் தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்களில் சிலவற்றைச் சிந்திப்பது, காரியங்கள் எவ்வளவு “புதிதாக” இருக்கும் என்பதையும் இன்று மனித ஆட்சியின் கீழ் நாம் பார்ப்பதிலிருந்து எவ்வளவு முழுமையாக வித்தியாசமாக இருக்கும் என்பதையும் காண நமக்கு உதவி செய்யும். ஆம், நம்முடைய பூமியின் எதிர்காலத்தையும் அதன் மீது வாழ்க்கையைப் பற்றியும் பைபிள் சொல்லும் காரியம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கின்றது. இதைச் சிந்தியுங்கள்:
வன்முறையும் குற்றச் செயலும் முடிவுக்கு வரும். “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், . . . அப்போது துன்மார்க்கன் இரான்.” அப்போது உயிர்வாழ்பவர்கள் “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் [NW] வாய் இதைச் சொல்லிற்று.”—சங்கீதம் 37:9, 10; மீகா 4:4.
இன சம்பந்தமான மற்றும் தேசீய பிரிவினைகளும் அவைத் தூண்டும் போர்களும் மறைந்துவிட்டிருக்கும். “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
குடியிருப்பு வசதிப் பற்றாக்குறைகள், வீடு இழந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த கால காரியங்களாகிவிடும். ஏசாயா முன்னறிவித்தான்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். . . . நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.
ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளை சமீபத்தில் வேதனைக்குட்படுத்தியிருக்கும் பயங்கரமான பஞ்சங்களுக்குப் பதிலாக அனைவருக்கும் ஏராளமான உணவிருக்கும். “பூமியில் மலையின் உச்சியிலும் திரள் தானியமிருக்கும்.” “பூமி தன் பலனைத் தந்தது; கடவுளாகிய எங்கள் கடவுளே எங்களை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 72:16; 67:6, 7.
மேலுமாக, இந்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு அங்கே உடல் ஆரோக்கியமும் ஜீவனுமிருக்கும். இயேசுவினுடைய பூமிக்குரிய ஊழியக் காலத்தின் போதுகூட “குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள்” என்பது உண்மையாகவே சொல்லப்பட்டது. என்றபோதிலும், இன்னும் மிகப் பெரிய வாக்குத்தத்தம் பொருந்துவதாக இருக்கும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—லூக்கா 7:22; வெளிப்படுத்துதல் 21:4.
என்னே மகத்தான ஒரு மாற்றம்! துயரத்திலிருக்கும் மனிதவர்க்கத்துக்கு இவை அனைத்தும் என்னே ஒரு நிம்மதியைக் கொண்டவரும்! உலக ஆட்சியில் இந்த;G புத்தூழித் தொடக்கத்தின் மாற்றத்திலிருந்து வரும் நன்மைகளை நீங்களும்கூட அறுவடைச் செய்யும் பொருட்டு இப்பொழுதே கடவுளுடைய ராஜ்யத்துக்கு உங்களை கீழ்ப்படுத்தும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். (w88 6⁄15)
[பக்கம் 11-ன் படம்]
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மகத்தான ஆசீர்வாதங்களை எதிர்நோக்கியிருக்கலாம்—போர், குற்றச்செயல், வறுமை, வியாதி, மரணமும்கூட முடிவுக்கு வரும். இப்படிப்பட்ட ஓர் எதிர்காலத்தை நீங்கள் அனுபவித்துக் களிப்பீர்களா?