உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 4/1 பக். 21
  • மகத்தான ஓவியர் யெகோவா!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகத்தான ஓவியர் யெகோவா!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை
    விழித்தெழு!—2001
  • கலை என்றால் என்ன?
    விழித்தெழு!—1995
  • சிருஷ்டி யாவும் யெகோவாவைத் துதி!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இளம் பிள்ளைகளே, யெகோவாவைத் துதியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 4/1 பக். 21

மகத்தான ஓவியர் யெகோவா!

“ஓவியர்கள் சூரிய உதயங்களையும் சூரிய மறைவுகளையும் எண்ணமுடியாதளவுக்கு வரைந்து, வண்ணம் தீட்டி அவற்றை நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கும் விற்கின்றனர். என்றபோதிலும், மகத்தான ஓவியரும் சூரிய உதயத்திற்கும் மறைவுக்கும் ஊற்று மூலருமாகிய யெகோவா தேவன் நமக்கு ஒவ்வொரு நாளும் ஒன்றைத் தருகிறார்—இலவசமாக. அவை நகல்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படுகின்றன. அதுதானே அவரை சிருஷ்டிகராகப் போற்றுவதற்கு நமக்குக் காரணத்தை அளிக்கக்கூடாதா?” இப்படியாக ஹவாயில் யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணி ஒருவர் சபைகளுக்குக் கொடுக்கும் தன்னுடைய ஒரு பேச்சில் பிறரை நிதானிக்கச் செய்தார்.

ராஜ்ய மன்றத்துக்கு முதல் முறையாக வந்திருந்த ஒரு நாத்திகப் பெண் சபையாரில் ஒருத்தியாக அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த ஊழியரின் நியாய விவாதத்தைக் கவனத்திற் கொண்டாள், ஆனால் அவளுடைய மனதில் கடவுள் இருப்பதன் பேரில் சந்தேகம் இன்னமும் ஊசலாடியது. என்றபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவள் வேலையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டாள். இது அவளைக் குறிப்பாக கவர்ச்சித்த சூரிய மறைவைக் கவனிக்கச் செய்தது. அவளுடைய எண்ணங்கள் அந்தப் பயணக் கண்காணியின் பேச்சுக்குத் திரும்பியது.

அவள் கூறுவதாவது: “போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது குறித்து எரிச்சலடைவதற்குப் பதிலாக, நான் அந்த அழகிய சூரிய மறைவைக் கவனித்தேன். யெகோவா தேவனை ஓர் ஓவியராகவும் சிருஷ்டிகராகவும் போற்றுதல் குறித்து அந்தப் பேச்சாளர் கூறியது என் நினைவுக்கு வந்தது. ‘அவர் சொன்னது ஒருவேளை உண்மையாயிருக்கக்கூடும்; ஒருவேளை உண்மையிலேயே ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் போலும்,’ என்று அது என்னை யோசிக்கச் செய்தது. என்னுடைய வீட்டுக்குத் திரும்பும் பாதையெல்லாம் நான் அதைக்குறித்து யோசனை செய்தேன். அன்று இரவே நான் முதலில் என்னை ராஜ்ய மன்றத்துக்கு அழைத்துச் சென்ற என் சிநேகிதியின் வீட்டுக்குச் சென்றேன். பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன், இப்பொழுது யெகோவாவை என்னுடைய கடவுளாகவும் சிருஷ்டிகராகவும் வணங்குகிறேன்.”

சங்கீதக்காரனைப் போன்று இந்தப் பெண் யெகோவாவைச் சிருஷ்டிப்பின் மகத்தான ஓவியர் என்று போற்ற ஆரம்பித்தது மட்டுமல்லாமல், அவரைத் துதித்துப் பாடவும் செய்தாள். சங்கீதக்காரன் இப்படியாக எழுதினான்: “வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள் . . . சூரியசந்திரரே, அவரைத் துதியுங்கள். பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள் . . . அவைகள் யெகோவாவின் திருநாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டன.”—சங்கீதம் 148:1–5, தி.மொ. (w89 1/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்