வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ விவாகமான ஒரு கிறிஸ்தவ தம்பதி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது பைபிள் நியமங்களுக்கு ஒத்திசைவாய் இருக்கிறதா?
விவாகமான கிறிஸ்தவ தம்பதிகள் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் கடமையில் இருக்கிறார்கள் என்றோ, அப்படிப் பிள்ளைகள் இருந்தால் எத்தனை பிள்ளைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றோ வேதவசனங்கள் தெளிவாகக் கூறுவதில்லை. தங்களுடைய குடும்பத்தின் அளவை நிர்ணயிக்க முற்பட வேண்டுமா என்பதை ஒவ்வொரு தம்பதியும் தனிப்பட்டவிதத்தில் பொறுப்புணர்ச்சியோடு தீர்மானிக்க வேண்டும். அவர்கள் குடும்ப அளவைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டால், கருத்தடை வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதும் ஒரு தனிப்பட்ட விஷயமாகும். என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட முறை உயிரின் பரிசுத்தத் தன்மையை மதிப்பதாயிருக்குமா என்பதை—பைபிளின்பேரில் அவர்கள் பெற்றிருக்கும் தெளிந்துணர்வுக்கு இசைவாகவும் அவர்களுடைய மனச்சாட்சிக்கு இசைவாகவும்—அவர்கள் கவனிக்க வேண்டும்.
ஒருவருடைய உயிர் கர்ப்பத்தில் உருவாகும்போது ஆரம்பமாகிறது; உயிருக்கு ஊற்றுமூலர் கருத்தரித்திருக்கும் அந்த உயிரைப் பார்க்கிறார், பின்னர் அந்தக் கருப்பையில் வளரும் அந்தக் “கருவையும்” பார்க்கிறார் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 139:16; யாத்திராகமம் 21:22, 23a; எரேமியா 1:5) எனவே கருத்தரித்த ஓர் உயிரை அழித்திட எந்த முயற்சியும் எடுக்கப்படக்கூடாது. அப்படிச் செய்வது கருச்சிதைவு செய்வதாயிருக்கும்.
கருத்தடை மாத்திரைகள் உலகமுழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை கருவுறுவதை எப்படித் தடைசெய்கிறது? இரண்டு முக்கிய வகை மாத்திரைகள் உள்ளன—கூட்டு மாத்திரை (combination pill) மற்றும் முன்கருவுறாத்தனி மாத்திரை (progestin-only pill) [குறுமாத்திரை (minipill)]. பிறப்புகளைத் தடை செய்வதற்கான அடிப்படை இயக்கத்தை ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
கூட்டு மாத்திரை எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் கொண்டது. ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கருத்துப்படி, கூட்டு மாத்திரையின் “அடிப்படை இயக்கம்” “கருவுறுதலைத் தடை செய்தலாகும்.” இவை தொடர்ந்து எடுக்கப்படும்போது, இவ்வகை மாத்திரை ஒரு கரு முட்டை கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவதை அநேகமாக எல்லாச் சமயத்திலும் தடைசெய்வதாகத் தெரிகிறது. கருமுட்டை வெளியேற்றப்படாதிருக்கையில், கரு வெளியேற்றப்படும் குழாய்களில் கருத்தரிப்பு ஏற்படுவதில்லை. இவ்வகை மாத்திரை கருப்பையின் உள்வரிச் சவ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன (கருக்கொள்ளும் சாத்தியத்தைக் குறைக்கிறது),” இது ஒரு துணை இயக்கமாகக் கருதப்படுகிறது.
பக்க பாதிப்புகளைக் குறைப்பதற்காக, குறைந்த அளவு எஸ்ட்ரோஜன் கொண்ட கூட்டு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தெளிவாகவே, இந்தக் குறைந்த அளவு எஸ்ட்ரோஜன் கொண்ட கூட்டு மாத்திரைகள் கருவகத்தில் செயலைக் கூட்டுகின்றன. தேசிய சுகாதார நிறுவனங்களின் கருத்தடை சாதனங்கள் வளர்ச்சிக் கிளையின் தலைமை மருத்துவர் டாக்டர் கேபிரியல் பையாலி கூறுகிறார்: “அறிவியல் அத்தாட்சியின் மேம்பட்ட நிலை காண்பிப்பது என்னவென்றால், எஸ்ட்ரோஜன் குறைவான மாத்திரை பயன்படுத்தப்பட்டபோதிலும், கருமுட்டை வெளியேற்றப்படுவதில் தடை 100 சதவீதமாக இருப்பதில்லை, ஆனால் அநேகமாக 95 சதவீதமாக இருக்கிறது. ஆனால் கருமுட்டை வெளியேற்றப்படுதலின் அடிப்படையில் கருவுறுதல் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லுவதற்கு இல்லை.”
ஒரு பெண் கூட்டு மாத்திரை எடுக்கப்படும் கால அட்டவணைக்கு ஏற்ப அதனை எடுக்க தவறுவாளானால், பிறப்புகளைத் தவிர்ப்பதற்கான துணை இயக்கம் ஒரு பங்கை வகிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. குறைந்த அளவுடைய இரண்டு மாத்திரைகளை எடுக்கத் தவறிய பெண்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வின்படி, அவர்களில் 36 சதவீதத்தினர் விஷயத்தில் கருமுட்டை “தப்பிச்செல்லும்” நிலை காணப்பட்டது. கருத்தடை என்ற பத்திரிகை அறிக்கை செய்ததாவது, அப்படிப்பட்ட நிலைகளில், கருப்பையின் உள்வரி மற்றும் கழுத்துப்பகுதிச் சவ்வில் மாத்திரைகளின் செயல்விளைவு தொடர்ந்து . . . கருத்தடைப் பாதுகாப்பை அளிக்கின்றன.”
இன்னொரு வகை மாத்திரை—புரோஜெஸ்டின் என்ற முன்கருவுறாத்தனி மாத்திரை (குறுமாத்திரை) பற்றியது என்ன? மருந்து கணிப்பு (1986) அறிவிக்கிறது: “புரோஜெஸ்டின் குறுமாத்திரைகளைக் குறித்ததில் கருத்தடை சம்பந்தமாகக் கருமுட்டை வெளியேற்றப்படுதல் தடைசெய்யப்படுவது பிரதான அம்சமாக இல்லை. இந்த ஏதுக்கள் விந்து கடந்துசெல்ல முடியாதளவுக்கு கருப்பையின் கழுத்துப் பகுதியில் அடர்த்தியான ஒரு சவ்வை ஏற்படுத்துகிறது; அவை கரு வெளியேற்றப்படும் குழாயில் கடந்து செல்லும் நேரத்தை அதிகரிக்கக்கூடும், மற்றும் இவற்றிற்குக் கருப்பையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் [கருவுற்ற எந்த ஒரு முட்டையின் வளர்ச்சியையும் தடை செய்யும்].”
புரோஜெஸ்டின் என்ற முன்கருவுறாத்தனி மாத்திரை எடுப்பவர்களில் “கருமுட்டை சாதாரணமாக வெளியேற்றப்படுதல் 40%-க்கும் அதிகமானவர்களில் ஏற்படுகிறது.” எனவே இந்த மாத்திரை கருமுட்டை வெளியேற்றப்படுவதை அநேக சமயங்களில் அனுமதிக்கிறது. கருப்பையின் கழுத்துப்பகுதியில் அடர்த்தியாக அமைந்த சவ்வு ஆண்விந்து உட்செல்லும் பகுதியை அடைத்து, இப்படியாகக் கருவுறுவதைத் தடை செய்யக்கூடும். அவ்விதம் ஏற்படாவிட்டாலும், அந்த மாத்திரை கருவகத்தில் உண்டுபண்ணும் சாதகமற்ற எதிர்ச் சூழல், கருவுற்ற முட்டை நிலைத்து ஒரு குழந்தையாக வளருவதைத் தடைசெய்கிறது.
கர்ப்பத்தடைக் கருதி தவறாமல் பயன்படுத்தப்படும்போது, இந்த இரண்டு முக்கிய வகை மாத்திரைகளும் அநேக சமயங்களில் கருவுறுவதைத் தடை செய்கிறது, இவ்வகையில் இவைக் கருச்சிதைவாக இல்லை. என்றபோதிலும், புரோஜெஸ்டின் மாத்திரை (குறுமாத்திரை) அநேக சமயங்களில் கருமுட்டை வெளியேற்றப்படுவதை அனுமதிப்பதால், கருவுற்ற ஓர் உயிர் சில சமயங்களில் கருப்பையில் நிலைபெற்று வளருவதுடன் தலையிட்டு ஒரு பிறப்பைத் தடைசெய்யும் சாத்தியம் அதிகம். பொதுவாக (கர்ப்பத்தடை மாத்திரைகளால் பாதிக்கப்படாத ஒரு கருப்பையில்) “கருவுற்ற அறுபது சதவீத முட்டைகள் . . . தவறவிடப்பட்ட முதல் காலப்பகுதியில் காணாமற்போகிறது.” இப்படி நடக்கிறது என்றாலும், இது கருவுற்ற முட்டை நிலைபெறுவதைத் தடை செய்வதற்கான சாத்தியம் அதிகமாயுள்ள ஒரு கர்ப்பத்தடை முறையைப் பயன்படுத்துவதைத் தெரிந்துகொள்வதிலிருந்து வித்தியாசமாயிருக்கிறது.
எனவே, விவாகமான தம்பதிகள் கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது குறித்து ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசிக்கையில் கவனிக்கவேண்டிய தார்மிக அல்லது நெறிமுறை அம்சங்கள் இருக்கின்றன. நம்முடைய கடவுளும் சிருஷ்டிகருமாய் இருப்பவரின் முன்னிலையில் “பரிபூரண சுத்த மனச்சாட்சியைக்” காத்துக்கொள்வதற்காக, தனிவாழ்க்கை சம்பந்தப்பட்ட தனிப்பட்ட கேள்விகளைக்கூட கிறிஸ்தவர்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 23:1, NW; கலாத்தியர் 6:5. (w89 6/15)
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1977, பக்கங்கள் 478-80 பார்க்கவும்.