கடவுளுடைய நற்குணம் உங்களைக் கவர்ந்திழுக்கிறதா?
உங்களுக்கு நெருங்கிய ஒரு நண்பர் இருக்கிறாரா? அப்படியென்றால், உங்களை அந்த நபரிடமாகக் கவர்ந்திழுத்தது என்ன என்பதுகுறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அது அந்த நபரின் தோற்றமா? உங்களுடைய அக்கறை ஒரே காரியத்தில் இருந்தது என்ற உண்மையா? அல்லது தயவு, ஞானம் போன்ற ஆழ்ந்த பண்புகளா? உங்களுடைய நட்புக்குச் சாந்து நற்குணமாக இருக்குமானால், நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த உறவைக் கொண்டிருக்கிறீர்கள். இன்று உண்மையான நற்குணம் என்பது காண்பதற்கு அரிய பண்பாக இருக்கிறது, ஏனென்றால் மக்கள் பெரும்பாலும் “நற்குணப் பிரியராய் இராதவர்களா”யிருக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:3, NW.
இன்னொரு மனிதனோடு அல்ல, ஆனால் கடவுளோடுள்ள உறவுதானே ஒரு கிறிஸ்தவனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான உறவாகும். எனவே நீங்கள் இந்த உறவைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது, ‘கடவுளுடைய பண்புகளில் எது என்னை அவரிடமாக அதிக நெருக்கமாய் இழுக்கிறது?’ என்று எப்பொழுதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
கடவுளுடைய பிரதான பண்புகள்
உண்மையில் பார்க்கப்போனால், பைபிள் கடவுளுடைய தலைசிறந்த பண்புகளில் பலவற்றை விவரிக்கிறது. பொதுவாக சிறப்பித்துக் காண்பிக்கப்படும் நான்கு பண்புகள் அவருடைய அன்பு, அவருடைய நீதி, அவருடைய ஞானம், அவருடைய சர்வவல்லமை. (உபாகமம் 32:4; யோபு 12:13; சங்கீதம் 147:5; 1 யோவான் 4:8) இந்தத் தலைச்சிறந்த நான்குப் பண்புகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுப்பது என்றால், கடவுளுடைய அன்பு தானே நம்மை அதிகமாகக் கவர்ந்திழுத்தது என்று நாம் சொல்லக்கூடும். என்றபோதிலும் அவருடைய அன்புடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு பண்பு அவருடைய மேம்பட்ட நற்குணம். இந்தக்காரியத்தைக் குறித்து பைபிள் எழுத்தாளர்கள் சரளமாக எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நற்குணம் சிருஷ்டிகருடன் மனிதர் ஓர் ஆரோக்கியமான, இன்பமான உறவுக்குள் வர அவர்களைக் கவர்ந்திழுக்கக்கூடும்.
உதாரணமாக, 6-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் சகரியா தீர்க்கதரிசி யெகோவாவைக் குறித்துப் இப்படியாக வியந்து கூறினான்: “அவருடைய காருண்யம் (நற்குணம், NW) எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது?” (சகரியா 9:17) சகரியாவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா கடவுளை இதுபோன்று துதித்தான்: “நான் யெகோவாவின் கிருபைவரங்களைப் பிரஸ்தாபம் பண்ணுவேன், . . . அவர் இஸ்ரவேலர் வீட்டாருக்கு மிகுந்த நன்மை செய்தாரே.”—ஏசாயா 63:7, NW.
இதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தாவீது அரசன் கடவுளுடைய நற்குணத்தைப் பற்றி மிகுந்த உருக்கமாய் எழுதியிருந்தான். இந்த நற்குணத்தைத் தன்னுடைய வாழ்க்கை முழுவதுமாய் அனுபவித்து மகிழ்ந்தவனாய்த் தாவீது தன்னுடைய அனுபவத்திலிருந்து எழுதினான். கடவுள் தாவீதுக்கு மிகப்பெரிய அளவில் நல்லவராயிருந்தார், விசேஷமாக பத்சேபாள் மற்றும் அவளுடைய கணவர் உரியாவின் சம்பந்தமாக அதிக வினைமையான பாவத்தைச் செய்ததைத் தொடர்ந்து கடவுள் அவனுக்கு இரக்கம் காண்பித்த போது அப்படியாயிருந்தது. (2 சாமுவேல் 12:9, 13) சங்கீதம் 31:19-ல் தாவீது போற்றுதலுடன் இப்படியாக அறிக்கைசெய்தான்: “உமக்குப் பயந்தவர்களுக்கு . . . நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை (நற்குணம், NW) எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”
கடவுளுடைய அந்தப் பூர்வீக வணக்கத்தாரைப் போல் அந்த அளவுக்கு நீங்கள் அவருடைய நற்குணத்தை மதிக்கிறீர்களா? அப்படிச் செய்வீர்களானால், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்”தை நீங்கள் அனுபவிப்பீர்கள், அதேசமயத்தில் கடவுளுடைய சித்தத்தை எல்லாச் சமயத்திலும் செய்வதற்கு உள்ளப்பூர்வமாய் உந்தப்படுவீர்கள். (பிலிப்பியர் 4:7) கடவுளுடைய நற்குணம் எதை உட்படுத்துகிறது, அதன் பரப்பெல்லை எந்தளவுக்கு வியந்து பாராட்டுவதற்குரியதாயிருக்கிறது என்பதை நாம் சற்று சிந்திப்போம். இது நம்முடைய அன்புள்ள பரம தந்தைக்கு நம் போற்றுதலை நிச்சயமாகவே ஆழப்படுத்திடும். (w89 12/1)