உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 3/15 பக். 26-30
  • உங்களுக்கு ஓர் ஊழியமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு ஓர் ஊழியமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஊழியர்களுக்கான தேவை
  • கிறிஸ்தவ ஊழியம்
  • அது உங்கள் வாழ்க்கைப் பணியாக இருக்க வேண்டுமா?
  • முழுமையான ஊழியத்துக்காக நாடுங்கள்
  • “முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • இன்று கடவுளுடைய ஊழியர்கள் யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுங்கள்’
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 3/15 பக். 26-30

உங்களுக்கு ஓர் ஊழியமா?

யெகோவா, நாம் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக பூமிக்கு பரிபூரணமான முன்னேற்பாடுகளைச் செய்வதில் தம்முடைய உதாரகுணத்தைக் காண்பித்திருக்கிறார். ஆதாமும் ஏவாளும் கலகம் செய்த பின்னரும்கூட பெருந்தன்மையுடன் இந்த ஏற்பாடுகள் அழியாது நிலைபெற்றிருக்கும்படி அனுமதித்திருக்கிறார். இன்னுமதிகமாக, விசுவாசமுள்ள மனிதர்களை பாவத்தின் அழிவிலிருந்து காப்பாற்ற தம்முடைய குமாரனை அனுப்பியதில் தம்முடைய ஈடிணையற்ற அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.—மத்தேயு 5:45; யோவான் 3:16.

இப்படிப்பட்ட அன்புக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கலாம்? நம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூற வேண்டும் என்று இயேசு சொன்னார். நம்முடைய வணக்கத்தையும் பற்றுறுதியையும் நாம் அவருக்கு செலுத்த கடமைப்பட்டிருப்பதையும், அவருடைய சித்தத்திற்கிசைவாக நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும் இது குறிப்பிடுகிறது.—மாற்கு 12:30; 1 பேதுரு 4:2.

ஆனால் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உட்பட்டிருப்பது என்ன? நாம் அவருக்கு ஆற்றக்கூடிய ஒரு சேவை—நாம் பங்குகொள்ள வேண்டிய ஓர் ஊழியம் இருக்கிறதா?

ஊழியர்களுக்கான தேவை

கடவுளை எவ்விதமாக வணங்குவது, சேவிப்பது என்பதைக் குறித்ததில் சர்ச்சுகள் மக்களை குழப்பிவிட்டிருக்கிறது. என்றபோதிலும், பைபிள், ஒரே உண்மை மதமும், “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு” என்று காண்பிக்கிறது. இயேசு சொன்னார்: “உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்”வார்கள். ஆகவே அவர்களுக்குச் சொல்லப்படும் புத்திமதி: “நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும் பிரிவினைகளில்லாமல்” இருக்கவும் வேண்டும்.—எபேசியர் 4:3-6; யோவான் 4:23; 1 கொரிந்தியர் 1:10.

சாத்தான் கடவுள் ஆட்சிசெய்யும் முறையை சந்தேகிப்பதன் மூலம் யெகோவாவின் அரசுரிமையின் நியாயத்தை எதிர்த்த போது எது உண்மை மதம் என்பது பற்றிய குழப்பம் ஏதேனில் ஆரம்பமானது. (ஆதியாகமம் 3:1-6, 13) “நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டு” கள்ளப்போதகங்களைப் பரப்பும் வஞ்சகமான மத ஊழியர்களைக் கொண்டு சாத்தான் இப்பொழுது கடவுளைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறான். ஆகவே பைபிள் சொல்வதாவது: “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பா”திருங்கள்.—2 கொரிந்தியர் 11:14, 15; 1 யோவான் 4:1.

ஆட்சி பற்றிய இந்த விவாதத்தைத் தீர்ப்பதற்கு கடவுள் நடவடிக்கைகளை எடுத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. மனிதகுலத்தை மீட்டுக்கொள்ள தம்முடைய குமாரனை அனுப்பிய அவர், இப்பொழுது சாத்தானையும் அவனுடைய தீர்க்கதரிசிகளையும் அல்லது ஊழியர்களையும் அழிக்கும் அதிகாரத்தோடு இயேசுவை கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக ஆக்கியிருக்கிறார். கீழ்ப்படிதலுள்ள மனிதர்களின் நித்திய ஆசீர்வாதத்துக்காக கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதை இது உறுதிபடுத்தும்.—தானியேல் 7:13, 14; எபிரெயர் 2:9.

சாத்தான் இந்த உண்மைகளை மறைத்துவிட்டிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) இதன் காரணமாக நாம் சாத்தானுடைய பொய்களை அம்பலப்படுத்தி சத்தியத்துக்குச் சாட்சி கொடுக்கும் கடவுளுடைய ஊழியர்களாக சேவிப்பதற்கு ஒரு தேவை இருக்கிறது. யெகோவா நம்மை இந்த ஊழியத்திற்குள் வற்புறுத்துவது கிடையாது. யெகோவாவுக்கும் அவர் நமக்காக செய்திருப்பவற்றிக்குமான போற்றுதலின் காரணமாக, இயேசுவைப் போலவே, நாம் நம்மை மனமுவந்து அளிப்பதை அவர் விரும்புகிறார்.—சங்கீதம் 110:3; எபிரெயர் 12:1-3.

கிறிஸ்தவ ஊழியம்

இயேசு “பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்.” (லூக்கா 8:1) தம்மைப் போன்றே ஊழியர்களாக இருக்கும்படி தம்முடைய சீஷர்களையும்கூட பயிற்றுவித்து பிரசங்கிப்பதற்காக அவர்களை அனுப்பினார். (மத்தேயு 10:1-14, 27) பின்னால், பூமியின் கடையாந்தரமட்டும் தொடர்ந்து ஊழியத்தைச் செய்யும்படியாக அவர்களுக்கு கட்டளையிட்டார்.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.

இந்தப் பொறுப்பு மெய்க் கிறிஸ்தவர்களைச் சார்ந்திருக்கிறது, கடவுளுடைய ஆவி பிரசங்கிக்க அவர்களைத் தூண்டுகிறது. பொ.ச. 33-ல் சம்பவித்தது போன்றே, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் அனைவருமே தங்கள் விசுவாசத்தைப் பகிரங்கமாக அறிவிக்கும் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.—அப்போஸ்தலர் 2:1-4, 16-21; ரோமர் 10:9, 13-15.

ஆனால் பெரும்பாலான ஆட்களால் தங்களை ஊழியர்களாக காணமுடிவதில்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான பீட்டர் சொல்கிறார்: “ஜெர்மனியிலுள்ள மனிதர்கள் அநேகமாக மதத்தைப் பற்றி பேசுவதை மிகத் தாழ்வாகக் கருதுகிறார்கள். ‘அது மதகுருமார் செய்ய வேண்டியது’ என்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.” பல பத்தாண்டுகளாக மிஷனரியாக இருந்த டோனியின் பிரகாரம் இங்கிலாந்திலுள்ள மக்கள் இவ்விதமாகச் சொல்லியிருக்கிறார்கள்: “நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது, யெகோவாவின் சாட்சிகள் மிக நேர்த்தியான ஆட்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் வீட்டுக்கு வீடு பிரசங்கித்துக் கொண்டு செல்வது—என்னால் அதை செய்ய முடியாது.” பென் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு மனிதனோடு பைபிளை படித்தார். இந்த மனிதன் சொன்னார்: “மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் வீட்டுக்கு வீடு பகிரங்கமாக என்னால் பிரசங்கித்துக் கொண்டிருக்க முடியாது; ஆனால் உங்கள் சபையில் அதைச் செய்ய மனமுள்ளவர்களாக இருப்பவர்களுக்கு என்னால் பணம் கொடுத்து உதவ முடியும்.” ஆம், பெரும்பாலான ஆட்களுக்கு கிறிஸ்தவ ஊழியத்துக்குத் தேவைப்படும் விசுவாசமும் உறுதியான நம்பிக்கையும் இருப்பதில்லை.

இருந்தபோதிலும், வெளிப்படையாக பிரசங்கிப்பது வயது அல்லது பால் பாகுபாடில்லாமல், கிறிஸ்தவ சபையிலுள்ள அனைவருடைய பொறுப்பாகவும் இருக்கிறது. அது ‘முன்சென்று நடத்துகிற’ மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் மட்டுமில்லை, ஆனால் பொதுவாக கிறிஸ்தவர்களின் பொறுப்பாக இருக்கிறது. அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் . . . உங்களை நடத்துகிறவர்களுக்குக் . . . கீழ்ப்படிந்திருங்கள்.”—எபிரெயர் 13:15, 17.

பல்வகைப்பட்ட ஒரு மக்கள் தொகுதியிடம் பேசுகிறவராய் இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே, கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” மற்றொரு சந்தர்ப்பத்தில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வது, அவிசுவாசிகளுக்குப் பிரசங்கிப்பதை உட்படுத்துவதை அவர் காண்பித்தார். அவருடைய சீஷர்கள், சாப்பிடுவதற்காக ஒரு சில சமாரியர்களிடம் பிரசங்கிப்பதை விட்டு வரும்படியாக அவரை துரிதப்படுத்தினார்கள், ஆனால் அவர் சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.”—மத்தேயு 7:21; யோவான் 4:27-38.

அது உங்கள் வாழ்க்கைப் பணியாக இருக்க வேண்டுமா?

மக்கள் பொதுவாக சரீர உணவையும் செல்வத்தையும் நாடுவதையே விரும்புகிறார்கள். ஆனால் மலைபிரசங்கத்தில் இதற்கு முன்னதாக இயேசு இப்படிப்பட்ட காரியங்களை மிகவும் ஆவலோடு நாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக தமக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அலோசனை கூறினார்: “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் . . . முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய [கடவுளுடைய] நீதியையும் தேடுங்கள்.”—மத்தேயு 6:20, 33.

ராஜ்யத்தை முதலாவது தேடுவது என்பது, மற்ற அக்கறைகள் நம்முடைய ஊழியத்தைவிட அதிக முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்வதை அனுமதியாதிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. என்றபோதிலும், இதைச் செய்வது, மற்ற எல்லா காரியங்களையும் ஒதுக்கி வைப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக பைபிள் உண்மையான குடும்ப கடமைகளை அசட்டை செய்யாதிருக்கும்படியாக நம்மை உற்சாகப்படுத்துகிறது. எல்லா மனிதரோடும்கூட இப்படிப்பட்ட கடமைகளை நாம் பெற்றிருக்கிறோம். அவைகளை அசட்டை செய்வது என்பது கிறிஸ்தவ விசுவாசத்துக்கு நேர்மாறான வகையில் செயல்படுவதாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) இருந்தபோதிலும் மற்ற பொறுப்புகளை சமநிலையான வகையில் கையாண்டு கொண்டு ஊழியத்தில் நியாயமாக நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.

இயேசு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) அந்தத் தீர்க்கதரிசனத்தின் சூழமைவு, அதன் நிறைவேற்றம் நம்முடைய நாளுக்குரியதாக இருப்பதைக் காண்பிக்கிறது. ராஜ்யம் யெகோவாவின் அரசுரிமைக்கு ஆதரவாகவும் சாத்தானுக்கும் அவனுடைய உலகத்துக்கும் எதிராகவும் செயல்பட அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது என்பதே 1914 முதற்கொண்டு நற்செய்தியாக இருந்து வருகிறது. (வெளிப்படுத்துதல் 11:15-18) இது குறிப்பாக உணர்த்துகிற காரியத்தைக் குறித்து நாம் பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டும். முடிவு வரும், அதற்கு முன்பாக பிரசங்க வேலையை நாம் செய்து முடிக்க வேண்டும். உயிர்கள் ஆபத்திலிருக்கின்றன; அவர்களில் அநேகரை காப்பாற்ற நாம் உதவி செய்ய முடியும்.

முழுமையான ஊழியத்துக்காக நாடுங்கள்

யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் ஒவ்வொரு மாதமும், நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு பத்து அல்லது அதிகமான மணிநேரங்களை அர்ப்பணிக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் துணைப்பயனியர்களாக பிரசங்கிப்பதில் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது அதிகமான மணிநேரங்களை செலவிடுகிறார்கள், மற்றவர்கள் தொடர்ச்சியாக ஒழுங்கான மற்றும் விசேஷித்த பயனியர்களாக சேவை செய்கிறார்கள். இந்த வேலையின் அவசரத்தன்மையை அவர்கள் மதித்துணர்ந்து, மகிழ்ச்சியற்ற இந்த உலகின் முடிவு வருவதற்கு முன்பாக அதைச் செய்து முடிப்பதில் கூடியவரை முழுமையான ஒரு பங்கைக் கொண்டிருக்க விரும்புகின்றனர்.

நீங்கள் ஏற்கனவே யெகோவாவின் ஒரு சுறுசுறுப்பான சாட்சியா? அப்படியென்றால் ஊழியத்தில் ஒரு முழுமையான பங்கை கொண்டிருக்க நாடுங்கள். பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் உங்கள் திறமையை மேம்படுத்தி ஊழியத்தில் அதிகத்தை சாதிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு பயனியராகக்கூடிய நிலையிலிருந்தால் அவ்விதமாகச் செய்யுங்கள். உங்களுடைய சூழ்நிலைமைகள் உண்மையாகவே உங்களை அனுமதியாவிட்டால், அப்பொழுது இந்த ஊழியத்தை நாட முடிகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நீங்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு சாட்சியாக இல்லாவிட்டால், ஊழியம் உங்களுக்கல்ல என்பதாக சொல்லாதீர்கள். இயந்திர பொறியாளரான பீட்டர் என்ற பெயர் கொண்ட மற்றொரு மனிதன், தன் மனைவி மற்றவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதை தீவிரமாக ஆட்சேபித்தார். “என்னுடைய மனைவி வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதை நான் எவ்விதமாக அனுமதிக்க முடியும்?” என்பதாக அவர் கேட்பார். கடவுளுடைய வார்த்தையினுடைய சத்தியத்தின் சம்பந்தமாக அவளுடைய உறுதியான நம்பிக்கையை பல வருடங்கள் கவனித்துப் பார்த்த பிறகு அவரும்கூட பைபிளை படிக்க தீர்மானித்தார்! இப்பொழுது அவர் தன்னுடைய மனைவியைப் போலவே, ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட நற்செய்தியின் ஊழியராக இருக்கிறார்.

ஆகவே யெகோவாவை சேவிக்கும் சிலாக்கியத்திலிருந்து உங்களை நீங்களே தடுத்து வைத்து விடாதிருங்கள். பைபிளைப் படிக்கவும் மெய் கிறிஸ்தவர்களோடு கூட்டங்களில் அவர்களோடு கூட்டுறவுக் கொள்ளவும் நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இது கடவுளுடைய நீதிக்கிசைவாக உங்கள் வாழ்க்கையை உருபடுத்தவும் அவருடைய நோக்கங்களில் உறுதியான விசுவாசத்தை கட்டியெழுப்பவும் உங்களுக்கு உதவி செய்யும். இதில் நீங்கள் முன்னேற்றஞ் செய்வீர்களானால், நீங்களும் கூட கடவுளுடைய ஊழியராக இருக்க தகுதி பெறுவீர்கள். அப்பொழுது நீங்கள் இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு சிலாக்கியம் பெற்றவர்களாயிருப்பீர்கள்: “நீங்கள் புறப்பட்டுப் போய், . . . சீஷராக்கி . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.

ஆம், நீங்கள் பங்குகொள்ளக்கூடிய ஓர் ஊழியம் இருக்கிறது, நீங்கள் அதைச் செய்வது, எக்காலத்திலிமிருந்ததைக் காட்டிலும் அதிக அவசரமானது. (w91 12/15)

[பக்கம் 26-ன் பெட்டி]

குடும்ப பொறுப்புள்ள ஒரு செவிலி சொல்லுகிறார்கள்: “நான் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் செல்ல ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக நான் பயணம் செய்கிறேன், ஆகவே என்னால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாது என்பதாக நான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு அதிகாலையும் வேலைக்குச் செல்வதற்கு முன்னும், இடைவேளையின் போதும், விடுமுறை நாட்களிலும் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு என் வேலைகளை நான் கவனமாக ஒழுங்குபடுத்திக் கொண்டேன். ஒரே மாத முடிவுக்குள் நான் பிரசங்கிப்பதில் 117 மணிநேரத்தை செலவழித்த போது என் சந்தோஷத்தைக் கற்பனைச் செய்துப் பாருங்கள். நான் 263 பத்திரிகைகளை அளித்து, பத்திரிகைகளுக்கு 22 சந்தாக்களைப் பெற்றுக்கொண்டு 3 பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கக் கூடியவளாக இருந்தேன்.”

[பக்கம் 29-ன் பெட்டி]

மைக்கேல் ஏழு சிறு பிள்ளைகளையுடையவராக, நைஜீரியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் பொறுப்புள்ள ஒரு வேலையில் இருக்கிறார். அவர் கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகவும் இருக்கிறார். அவர் ஆயிரக்கணக்கான சாட்சிகளின் கருத்தையே கொண்டிருக்கிறார்:

“நான் ஊழியத்தை என்னுடைய வாழ்க்கைப் பணியாக கருதி ‘நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார்’ என்று பவுல் சொன்னதை எப்போதும் நினைவில் கொள்கிறேன். வீட்டுக்கு வீடு சென்று நற்செய்தியை சுருக்கமாக கலந்து பேசுகையில் நானும் என் மனைவியும் ‘நடுகிறோம்.’ இயேசு சொன்னவிதமாகவே, அக்கறை காண்பிப்பவர்களுக்கு பைபிளிலிருந்து கற்பிப்பதற்காக திரும்ப சந்திப்பதன் மூலம் நாங்கள் ‘நீர்ப்பாய்ச்சுகிறோம்.’ வாராந்தர வீட்டு பைபிள் படிப்புகள் அநேகர்—ஒரு சிலருடைய விஷயத்தில் முழு குடும்பங்கள்—சத்தியத்தின் அறிவுக்குள் வருவதற்கு உதவியிருக்கிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்