மனிதனின் “புதிய உலக ஒழுங்கு” சமீபித்திருக்கிறதா?
1. மேலுமதிக அரசியல் சுயாதீனத்துக்கான ஆவல் சமீப ஆண்டுகளில் எவ்வாறு வெளிப்படுத்திக் கூறப்பட்டுள்ளது?
இன்று, லட்சக்கணக்கான ஆட்கள் பொய் மதத்துக்கு அடிமைப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் அவ்வாறே நிலைத்திருக்கத் தெரிந்துகொள்கின்றனர். அதேசமயத்தில், மேலும் மேலும் அதிகமான ஆட்கள் அரசியல் சுயாதீனங்களை வற்புறுத்திக் கேட்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் நடந்த அசாதாரண நிகழ்ச்சிகள், மக்கள் சுயாதீன வகை அரசாங்கத்தை விரும்புகின்றனரென நிரூபித்துக் காட்டியுள்ளன. இதன் பலனாக, சுயாதீனத்துக்குரிய ஒரு புதிய சகாப்தம் சமீபித்திருக்கிறதென பலர் சொல்லிக்கொள்கின்றனர். ஐக்கிய மாகாணங்களின் தலைவர் அதை “ஒரு புதிய உலக ஒழுங்கு,” என அழைத்தார். நிச்சயமாகவே, உள்ளூரக் குமுறும் சூழ்ச்சிப்போர் மற்றும் போர்த்தளவாடப் போட்டி முடிந்துவிட்டன, சமாதானத்துக்குரிய ஒரு புதிய சகாப்தம் மனிதவர்க்கத்துக்குத் தொடங்கிவிட்டதென எங்குமுள்ள உலகத் தலைவர்கள் சொல்லிக்கொள்கின்றனர்.—1 தெசலோனிக்கேயர் 5:3-ஐ ஒத்துப்பாருங்கள்.
2, 3. என்ன நிலைமைகள் உண்மையான சுயாதீனத்துக்கு எதிராக இருக்கின்றன?
2 எனினும், மனித முயற்சிகள் குறைந்த போர்த்தளவாடங்களிலும் சற்று அதிக சுயாதீன ஆட்சி வகைகளிலும் பலன்தந்தாலும், உண்மையான சுயாதீனம் மெய்யாகவே இருக்குமா? இராது, குடியரசு நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் இருந்துவரும் திகைக்க வைக்கும் பிரச்னைகளின் காரணமாக அவ்வாறிருக்க முடியாது, அங்கே ஏழைகளின் எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன, லட்சக்கணக்கானோர் பொருளாதாரக் குறைவினால் உயிர்பிழைத்திருப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தும், உலகமுழுவதிலும் ஒவ்வொருநாளும் சராசரி 40,000 பிள்ளைகள் உணவு ஊட்டக் குறைவினால் அல்லது தவிர்க்கக்கூடிய நோய்களால் சாகின்றனர் என ஐக்கிய நாட்டு சங்க அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்தத் துறையில் நிபுணரான ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்: “வறுமை மனிதரின் எதிர்காலத்துக்கு உண்மையில் ஆபத்துண்டாக்கும் உருவமைப்பு தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறது.”
3 கூடுதலாக, முன்னொருபோதும் இராத வகையில் அதிக ஆட்கள் மேலும் மேலுமதிகம் கொடியதாகிக் கொண்டிருக்கும் குற்றச் செயல்களுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். ஜாதிபேத, அரசியல், மற்றும் மத பகைகள் பல்வேறு நாடுகளைப் பிரித்து சிதறடித்துக்கொண்டிருக்கின்றன. சில இடங்களில் நிலைமை சகரியா 14:13-ல் விவரிக்கப்பட்டுள்ள எதிர்காலத்தை நெருங்கியுள்ளது, அப்பொழுது, ஜனங்கள் “அவ்வளவு குழப்பமும் திகிலும் அடை[வதால்] ஒவ்வொருவனும் தனக்கு அடுத்துள்ள மனிதனைப் பிடித்து அவனைத் தாக்”குவான். (டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்) போதைப்பொருள் துர்ப்பிரயோகமும் பாலுறவு மூலமாகக் கடத்தப்பட்ட நோய்களும் மிகப்பேரளவாய்ப் பரவியுள்ளன. இலட்சக்கணக்கான ஆட்கள் ஏய்ட்ஸ் நோய் நுண்மங்கள் தொற்றியுள்ளனர்; ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, 1,20,000-க்கு மேற்பட்டவர்கள் ஏற்கெனவே அதால் மாண்டுள்ளனர்.
பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைத்தனம்
4, 5. இன்று இருந்துவரும் சுயாதீனங்களுக்கு மத்தியிலும், என்ன வகையான அடிமைத்தனம் அதன் பிடியில் எல்லாரையும் கைப்பற்றி வைத்திருக்கிறது?
4 எனினும், அந்தக் கெட்ட நிலைமைகள் ஒன்றும் இல்லாவிடினும், ஜனங்கள் இன்னும் உண்மையான சுயாதீனத்தை உடையோராக இரார். எல்லாரும் இன்னும் அடிமைத்தனத்தில் இருப்பர். ஏன் இவ்வாறு இருக்கும்? உதாரணமாக வைத்துக்கொள்வோம்: யாரோவொரு சர்வாதிகாரி பூமியிலுள்ள ஒவ்வொரு ஆளையும் அடிமைப்படுத்தி அவர்களெல்லாரையும் கொலைசெய்தால் என்ன செய்வது? நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுக்கு எதிராகக் கலகஞ்செய்து பிசாசின் கொடுங்கோன்மையான ஆட்சிக்கு அடிமைப்பட்டவர்களானபோது உண்மையில், இதுவே மனிதவர்க்கத்துக்கு நேரிட்டது.—2 கொரிந்தியர் 4:4.
5 ஆதியாகமம் 1-ம் 2-ம் அதிகாரங்கள் காட்டுகிறபடி, கடவுள் மனிதனைப் படைத்தபோது, அவர்கள் பூமியில், பரதீஸில், என்றென்றும் பரிபூரணராய் வாழும்படி அவர் நோக்கங்கொண்டார். ஆனால் நம்முடைய மூதாதையாகிய ஆதாம் கடவுளுக்கு எதிராகக் கலகஞ்செய்ததால், நாமெல்லாரும் நாம் கருத்தரிக்கப்பட்ட வினாடி முதற்கொண்டு மரணத் தீர்ப்பின்கீழ் இருக்கிறோம்: “ஒரே மனுஷனால் [மனிதவர்க்கத்தின் குடும்பத் தலைவனான ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்தில் வந்ததுபோலவும் . . . மரணம் எல்லாருக்கும் பரவினது.” பைபிள் சொல்லுகிறபிரகாரம், “மரணம் அரசனாக ஆண்டது.” (NW) (ரோமர் 5:12, 14, தி.மொ.) ஆகையால் தனிப்பட்டவராய் நமக்கு எவ்வளவு அதிகம் சுயாதீனம் இருந்தாலும், நாம் எல்லாரும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருக்கிறோம்.
6. சங்கீதம் 90:10 எழுதப்பட்டது முதற்கொண்டு, வாழ்க்கை கால எதிர்பார்ப்பில் ஏன் முன்னேற்றம் எதுவும் இல்லை?
6 மேலும், இப்போது நமக்கு இருக்கும் இந்த வாழ்க்கை வெகு மட்டுப்பட்டது. நல்வாய்ப்புடையோருக்குங்கூட, அது வெறும் ஒருசில பத்தாண்டுகளேயாகும். வாய்ப்புக் குறைந்தோருக்கு, ஒருசில ஆண்டுகளே, அல்லது அதற்கும் குறைந்ததேயாகும். ஒரு புதிய ஆராய்ச்சி பின்வருமாறு கூறுகிறது: “விஞ்ஞானமும் மருத்துவமும் மனித வாழ்க்கை எதிர்பார்ப்பை அதன் இயல்பான மட்டளவுக்குத் தள்ளியுள்ளன.” இது ஏனெனில், ஆதாமின் பாவத்தின் விளைவாக, நம்முடைய பிறப்பு மூலத்துக்குரிய ஒழுங்கமைப்பு, அபூரணத்தையும் மரணத்தையும் அதற்குள் இணைத்துருவாக்கப்பட்டதாக உள்ளது. நாம் 70 அல்லது 80 வயதுவரை வாழ்ந்தால், நாம் மேலுமதிக ஞானமுள்ளோராகி வாழ்க்கையை மேலும் நன்றாய் அனுபவித்து மகிழக்கூடியோராயும் இருக்க வேண்டியபோது, நம்முடைய உடல்கள் தளர்ந்து நாம் தூசியில் முடிவடைவது எவ்வளவு விசனகரமானது!—சங்கீதம் 90:10.
7. நாம் விரும்பும் மற்றும் நமக்குத் தேவைப்படும் இந்த உண்மையான சுயாதீனங்களுக்கு, மனிதர் ஏன் மூலகாரணராக ஒருபோதும் இருக்க முடியாது?
7 பாவத்துக்கும் மரணத்துக்கும் உட்பட்ட இந்த அடிமைத்தனத்தை எந்த வகையான மனித ஆட்சி தவிர்க்க முடியும்? எதாலும் முடியாது. எந்த இடத்திலுமுள்ள எந்த அரசாங்க அதிகாரிகளோ, விஞ்ஞானிகளோ, மருத்துவர்களோ, இந்த நோய், முதிர் வயது, மற்றும் மரணத்தின் சாபங்களிலிருந்து நம்மை விடுவிக்க முடியாது, மேலும் பாதுகாப்பின்மை, அநீதி, குற்றச் செயல், பசி, மற்றும் வறுமையை அவை எதுவும் விலக்கி ஒழிக்கவும் முடியாது. (சங்கீதம் 89:48) மனிதர் எவ்வளவு நல்நோக்கத்துடன் இருந்தாலும், நாம் விரும்புகிற மற்றும் நமக்குத் தேவைப்படுகிற உண்மையான சுயாதீனங்களுக்கு மூலகாரணராக இருப்பது அவர்களுக்குக் கூடாதக் காரியம்.—சங்கீதம் 146:3.
தெரிவு சுயாதீனத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினது
8, 9. எது மனிதவர்க்கத்தை அதன் தற்போதைய விசனகரமான நிலைமைக்குள்ளாக்கியது?
8 ஆதாமும் ஏவாளும் தங்கள் தெரிவு சுயாதீனத்தைத் தவறான வகையில் பயன்படுத்தினதால் மனித குடும்பம் இந்த விசனகரமான நிலைமையில் இருக்கிறது. தி ஜெருசலெம் பைபிளின்படி, ஒன்று பேதுரு 2:16 சொல்வதாவது: “சுயாதீன மனிதரைப்போல் நடந்துகொள்ளுங்கள், உங்கள் சுயாதீனத்தைப் பொல்லாங்குக்கு ஒரு சாக்குப்போக்காக ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.” ஆகவே, மனிதனின் சுயாதீனம் வரையறையற்றதாத இருக்கும்படி கடவுள் நோக்கங்கொள்ளவில்லை என்பது தெளிவாயுள்ளது. அதைக் கடவுளுடைய சட்டங்களின் வரம்புகளுக்குள்தானே பயன்படுத்த வேண்டியிருந்தது, இந்தச் சட்டங்கள் நீதியானவை மற்றும் எல்லாருடைய நன்மைக்காக செயல்படுபவை. மேலும், கடவுளுடைய ஆட்சி ஒருபோதும் ஒடுக்கும் பாங்குடையதாக இருக்க முடியாதபடி, அந்த வரம்புகள் மிகுதியான அளவு தனிப்பட்ட தெரிவு சுயாதீனத்தை அனுமதிப்பதற்குப் போதிய விரிவானவையாக இருந்தன.—உபாகமம் 32:4.
9 எனினும், நம்முடைய முதல் பெற்றோர், எது சரி எது தவறு என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ள தெரிந்துகொண்டனர். அவர்கள் அறிந்து வேண்டுமென்றே கடவுளுடைய ஆட்சிக்குப் புறம்பே விலகிச் சென்றதால், அவர் தம்முடைய ஆதரவை அவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டார். (ஆதியாகமம் 3:17-19) இவ்வாறு அவர்கள் அபூரணரானார்கள், அதன் விளைவாக நோயும் மரணமும் அடைந்தார்கள். சுயாதீனமடைவதற்குப் பதிலாக, மனிதவர்க்கத்தினர் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைத்தனத்துக்குள்ளானார்கள். மேலும், அபூரணமும், அடிக்கடி, கொடூரமுமான மனித அரசர்களின் தற்போக்கெண்ணங்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டவர்களானார்கள்.—உபாகமம் 32:5.
10 முழு சுயாதீனமென கருதினதில் இந்தச் சோதனை செய்வதை ஒரு வரையறை காலப் பகுதிக்கே கடவுள் மனிதரை அனுமதித்திருக்கிறார். கடவுளை விட்டு விலகி சுதந்திரமாக ஆளும் மனித ஆட்சி வெற்றிகாணாதென்பதை விளைவுகள் எவ்வித சந்தேகமுமில்லாமல் மெய்ப்பிக்குமென அவர் அறிந்திருந்தார். சரியான முறையில் பயன்படுத்தும் தெரிவு சுயாதீனம், அத்தகைய பொக்கிஷமாக இருந்ததால், கடவுள், அந்தத் தெரிவு சுயாதீன ஈவைத் திரும்ப எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, நடந்ததைத் தம்முடைய அன்பினால் தற்காலிகமாக அனுமதித்தார்.
‘மனிதன் தன் நடையை நடத்திக்கொள்ள முடியாது’
11. பைபிள் திருத்தமாயிருப்பதைச் சரித்திரம் எவ்வாறு ஆதரித்திருக்கிறது?
11 எரேமியா 10-ம் அதிகாரம், 23-ம் 24-ம் வசனங்களின் திருத்தமானத் தன்மையைச் சரித்திரத்தின் பதிவு காட்டியுள்ளது, அவற்றில் சொல்லியிருப்பதாவது: “தன் நடையை நடத்துவது நடக்கிறவன் [மனிதனின்] வசத்தில் இல்லை . . . யெகோவாவே, என்னை சிட்சியும்.” (தி.மொ.) பிரசங்கி 8:9-ன் திருத்தமானத் தன்மையையும் சரித்திரம் காட்டியுள்ளது, அது அறிவிப்பதாவது: “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகி”றான். எவ்வளவு உண்மை! மனிதக் குடும்பம் ஒரு பெருந்துன்பத்திலிருந்து மற்றொன்றுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்திருக்கிறது, பிரேதக்குழியே எல்லாருடைய முடிவாகவும் இருந்திருக்கிறது. ரோமர் 8:22-ல் பதிவுசெய்திருக்கிறபடி, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது இந்த நிலைமையை நுட்பதிட்டமாய் விவரித்தான்: “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” ஆம், கடவுளுடைய சட்டங்களை விட்டு விலகி சுதந்திரமாய் நடந்தது அழிவுக்கேதுவாய் இருந்திருக்கிறது.
12. முழுமையான சுயாதீனத்தைப்பற்றி உலகப்பிரகாரமான தகவல்மூலங்கள் சில என்ன சொல்கின்றன?
12 இன்குவிஸிஷன் அண்டு லிபெர்ட்டி என்ற ஆங்கில புத்தகம் சுயாதீனத்தின்பேரில் பின்வருமாறு குறிப்புரை அளித்தது: “சுதந்திரம், தன்னில்தானே, கட்டாயமாகச் சிறந்த பண்பு என்பதல்ல: மேலுமான தகுதியில்லாமல் பெருமையுடனிருப்பதற்குரிய ஒன்றல்ல. அது, உண்மையில், தன்னலத்தின் கீழ்த்தர வகைகளில் ஒன்றாக வெறுமென இருக்கலாம் . . . மனிதன், முழுமையாக ஒரு சுதந்திர சிருஷ்டியாக இல்லை, மற்றும் அவ்வாறிருக்க முட்டாள்தனமில்லாமல் நாடவும் முடியாது.” இங்கிலாந்தின் இளவரசன் பிலிப் ஒருமுறை சொன்னதாவது: “மனம்போகும் ஒவ்வொரு போக்கிலும் உணர்ச்சி தூண்டுதலிலும் ஈடுபடுவதற்கு சுயாதீனம் இருப்பது கவர்ச்சியூட்டுவதாயிருக்கலாம், ஆனால், தன்னுணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத சுயாதீனம் . . . மற்றவர்களின் நலத்தை எண்ணாத நடத்தை, ஒரு சமுதாயத்தின் செல்வம் என்னவாயிருந்தாலும் சரிதான், அதன் வாழ்க்கை பண்புத்தரத்தை அழிப்பதற்கு மிக நிச்சயமான வழி என்று அனுபவம் மறுபடியும் மறுபடியுமாகக் கற்பிக்கிறது.”
மிக நன்றாய் அறிந்திருப்பவர் யார்?
13, 14. மனித குடும்பத்துக்கு உண்மையான சுயாதீனத்தை யார் ஒருவரே அளிக்க முடியும்?
13 ஒரு குடும்பத்தை ஒழுங்குபடுத்துவதை யார் மிக நன்றாய் அறிந்திருக்கிறார்கள்—அன்புள்ள, திறமையுள்ள, அனுபவமுள்ள பெற்றோரா, இளம்பிள்ளைகளா? பதில் தெளிவாயுள்ளது. அவ்வாறே, மனிதரின் சிருஷ்டிகராகிய, நம்முடைய பரலோகத் தகப்பன், நமக்கு மிகச் சிறந்தது என்னவென அறிந்திருக்கிறார். மனித சமுதாயம் எவ்வாறு அமைக்கப்பட்டு ஆளப்படவேண்டுமென்பதை அவர் அறிந்திருக்கிறார். எல்லாருக்கும் உண்மையான சுயாதீனத்தின் நன்மைகளைக் கொண்டுவரும்படி தெரிவு சுயாதீனத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குட்படுத்த வேண்டுமென அவர் அறிந்திருக்கிறார். சர்வவல்லமையுள்ள கடவுளாகிய, யெகோவா ஒருவரே, மனித குடும்பத்தை அதன் அடிமைத்தனத்தினின்று விடுவித்து எல்லாருக்கும் உண்மையான சுயாதீனத்தை அளிப்பது எவ்வாறென அறிந்திருக்கிறார்.—ஏசாயா 48:17-19.
14 தம்முடைய வார்த்தையில், ரோமர் 8:20-ல், யெகோவா பின்வரும் இந்த ஏவப்பட்ட வாக்கை அளிக்கிறார்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” ஆம், மனித குடும்பத்தை இந்தத் தற்போதைய துயரமிகுந்த நிலைமையிலிருந்து முற்றிலும் விடுவிப்பாரென கடவுள் வாக்குக்கொடுக்கிறார். இது எவ்வாறு நடக்குமென்பது பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
(பக்கங்கள் 3-லிருந்து 8 வரை விமரிசனம் செய்தல்)
◻ மனிதர் ஏன் சுயாதீனத்தை வற்புறுத்தும் உணர்ச்சியுடையோராக இருக்கின்றனர்?
◻ சரித்திரம் முழுவதிலும் எந்த முறைகளில் ஆட்கள் அடிமைத்தனத்துக்கு உட்பட்டவர்களாயினர்?
◻ தெரிவு சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை, யெகோவா ஏன் இவ்வளவு காலம் அனுமதித்திருக்கிறார்?
◻ யார் ஒருவரே மனிதவர்க்கம் முழுவதற்கும் உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவர முடியும், ஏன்?
10. யெகோவா எவ்வாறு காரியங்களை அன்புடன் கையாண்டார்?
[பக்கம் 7-ன் படம்]
மனிதனுடைய வாழ்நாள் 3,500 ஆண்டுகளுக்கு முன்னால் சங்கீதம் 90:10-ல் சொல்லப்பட்ட அளவிலேயே பெரும்பாலும் உள்ளது
[படத்திற்கான நன்றி]
Courtesy of The British Museum