உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 7/15 பக். 31
  • அறிவிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆளும் குழுவின் ஆலோசனைக் குழுக்களுக்கு உதவி
  • இன்று ஆளும் குழுவுடன் ஒத்துழைத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • யெகோவாவின் ஏற்பாடு, “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 7/15 பக். 31

அறிவிப்பு

ஆளும் குழுவின் ஆலோசனைக் குழுக்களுக்கு உதவி

தற்போது எண்ணிக்கையில் 12-ஆக இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் தொடர்ந்து தங்கள் நியமிப்புகளில் உண்மையுடன் சேவித்து வருகிறார்கள். இவர்கள், அதிகரித்துவரும் “திரள் கூட்டத்தின்” உண்மைபிரமாணிக்கமுள்ள அங்கத்தினர்களுக்கு அவர்களுடைய வைராக்கியமான ஆதரவுக்காக எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 15) உலகம் முழுவதிலுமுள்ள பிரமாண்டமான அதிகரிப்பை முன்னிட்டுப் பார்க்கையில், ஆளும் குழுவுக்கு இந்தச் சமயத்தில் கூடுதலான ஏதோ சில உதவிகளை அளிப்பது பொருத்தமானதாக தோன்றுகிறது. ஆகவே ஆளும் குழுவின் ஆலோசனைக்குழுக்களின் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும், அதாவது, பணியாளர், பிரசுரித்தல், ஊழியம், கற்பித்தல் மற்றும் எழுத்து ஆலோசனை குழுக்கள் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள முக்கியமாக திரள் கூட்டத்தினரின் மத்தியிலிருந்து அநேக உதவியாளர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விதமாக இந்த ஆலோசனைக் குழுக்களின் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஆஜராயிருப்பவர்களின் எண்ணிக்கை ஏழு அல்லது எட்டாக உயர்த்தப்படும். ஆளும் குழுவின் ஆலோசனைக் குழு அங்கத்தினர்களின் வழிநடத்துதலின் கீழ், இந்த உதவியாளர்கள் கலந்தாலோசிப்புகளில் பங்குகொண்டு ஆலோசனைக் குழுக்களினால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் பல்வேறு வேலைகளையும் நிறைவேற்றுவர். இந்தப் புதிய ஏற்பாடு 1992, மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

அநேக ஆண்டுகளாக இப்போது அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரின் எண்ணிக்கை குறைந்த வண்ணமாகவே இருக்கையில், திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கை நம்முடைய மகத்தான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் அதிகரித்திருக்கிறது. (ஏசாயா 60:22) இந்த வியத்தகு பெருக்கத்துக்காக நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம்! 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்றப் புதிய பெயர் நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை 39,372 ஆக இருந்தது. இவர்களில் பெரும்பான்மையர் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவினுடைய சகோதரர்களென உரிமைப்பாராட்டினர். (ஏசாயா 43:10-12; எபிரெயர் 2:11) அறுபது வருடங்களுக்குப் பிறகு 1991-ல் உலகம் முழுவதிலும் பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை 42,78,820 ஆக இருக்க, இவர்களில் 8,850 பேர் மாத்திரமே அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரென உரிமைப்பாராட்டினர். வேதாகமத்தின் வெளிச்சத்தில் எதிர்பார்த்தபடி, “திரள் கூட்டத்தார்” இப்பொழுது சிறுமந்தையைவிட 480 பேருக்கு 1 என்ற கணக்கில் எண்ணிக்கையில் விஞ்சி விட்டிருக்கின்றனர். (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 7:4-9) விரிவாகிவரும் ராஜ்ய அக்கறைகளை கவனிப்பதற்கு மீதியானோருக்கு நிச்சயமாகவே திரள்கூட்டத்தாரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவையாகவும் அதை அவர்கள் போற்றுகிறவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தக் காவற்கோபுரம் பிரதியில் விளக்கப்பட்டுள்ளபடியே, யூத மீதியானோரோடு பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த நிதனீமியர்களுக்கும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரருக்கும் ஒப்பிடப்படக்கூடிய ஒரு தொகுதி இன்று ஆவிக்குரிய இஸ்ரவேலோடுகூட சேவித்து வருகிறது; இஸ்ரவேல் அல்லாத இவர்கள் திரும்பி வந்த லேவியர்களைவிடவும்கூட எண்ணிக்கையில் அதிகமாயிருந்தனர். (எஸ்றா 2:40-58; 8:15-20) இன்றைய திரள்கூட்டத்தாரின் மத்தியிலிருக்கும் “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்,” முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஆண்களாக இருக்கின்றனர். இவர்கள் கிளைக்காரியாலயங்களிலும், பிரயாண வேலையிலும் இப்பொழுது பூமி முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 66,000 சபைகளிலும் கண்காணிப்பு வேலையை கவனித்து வந்திருப்பதன் விளைவாக கணிசமான அனுபவமுடையவர்களாக இருக்கின்றனர்.

சமீபத்தில், கண்காணிகளுக்கும் அவர்களுக்கு உதவிபுரியும் உதவி ஊழியர்களுக்கும் போதிக்க ராஜ்ய ஊழியப்பள்ளிகள் உலகம் முழுவதிலும் நடத்தப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, 59,420 கண்காணிகள் ஆஜரானார்கள். இவ்விதமாக இந்த “மூப்பர்கள்” தங்கள் உத்தரவாதங்களை அதிக திறம்பட்ட வகையில் நிறைவேற்றுவதற்கு தயார் செய்யப்பட்டனர்.—1 பேதுரு 5:1-3; எபேசியர் 4:8 ஒப்பிடவும்.

யெகோவாவின் சாட்சிகளுடைய புரூக்ளின் தலைமைக் காரியாலயத்தில், “ஒப்புக்கொடுக்கப்பட்ட” சிலர் மிகப் பல ஆண்டுகள் சேவித்து வந்திருக்கிறார்கள். இவர்களில் மிகுதியான திறமையையும் அனுபவத்தையும் பெற்றிருக்கும் திரள் கூட்டத்தாரிலிருந்து வரும் முதிர்ச்சியுள்ள கண்காணிகள் அடங்குவர். இதன் காரணமாக ஆளும் குழு, இப்படிப்பட்ட கண்காணிகளில் சிலரை ஆளும் குழுவின் ஆலோசனைக் குழுக்களில் உதவி செய்ய தெரிந்துகொண்டிருக்கிறது. இவர்கள் கட்டாயமாகவே நீண்ட கால ஊழிய பதிவைக் கொண்ட மனிதர்கள் அல்ல. மாறாக, அவர்கள் முதிர்ச்சியுள்ள, அனுபவமுள்ள மனிதர்களாக குறிப்பிட்ட துறைகளில் உதவியளிக்க அவர்களைச் சிறப்புப்பண்புள்ளவர்களாக்கும் தகுதியுடையவர்கள். ஓர் ஆலோசனைக் குழுவோடு வேலை செய்ய அவர்கள் நியமிக்கப்படுதல் அவர்களுக்கு விசேஷித்த அந்தஸ்தை அளிப்பதில்லை. இயேசு தம்முடைய சீஷர்களைக் குறித்து சொன்ன வண்ணமாகவே, “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:8) என்றபோதிலும் இந்த மனிதர்களிடம் அதிகம் ஒப்படைக்கப்படும், இதன் விளைவாக அவர்களிடம், ‘அதிகமாய்க் கேட்கப்’படும்.—லூக்கா 12:48.

இன்று யெகோவாவின் அமைப்பினுடைய முன்னோக்கிய அணிவகுப்பில் நாம் களிகூருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக வெளி ஊழியத்தில் சேவை செய்பவர்களின் எண்ணிக்கையில், ஏறக்குறைய 100 சதவீத அதிகரிப்பு இருந்திருக்கிறது: “அவருடைய கர்த்தத்துவத்தின் [அரசாங்கத்தின்] பெருக்கத்துக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:7, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) எருசலேமின் மதில்களைப் பழுதுபார்ப்பதில் ஆசாரியர்களோடுகூட நிதனீமியர்கள் வேலை செய்த விதமாகவே யெகோவாவின் அமைப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது: “அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டு”வார்கள். (ஏசாயா 60:10; நெகேமியா 3:22, 26) யெகோவாவின் உலகளாவிய அமைப்பில் எந்த வேலையிலும் அல்லது சேவையிலும் நியமிக்கப்பட்டாலும் “யெகோவாவின் ஆசாரியர்களுக்கு” உதவி செய்து மெய் வணக்கத்தை கட்டுவிப்பதில் நவீன நாளைய நிதனீமியர்கள் காண்பிக்கும் வைராக்கியத்துக்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.—ஏசாயா 61:5, 6. (w92 4/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்