கிலியட் படிப்பின் ஆசீர்வாதங்கள் உலகமெங்கும் பரவுகின்றன
இந்தப் பழைய உலகத்தில் படிப்பு, குறைவான மதிப்பையே பெறுகிறது. இது பெரும்பாலும் கடவுளுடைய சத்தியத்தை அடிப்படையாக கொள்வதற்குப் பதிலாக, மனிதனின் கற்பனைகளில் சார்ந்திருக்கிறது, எனவே வாழ்க்கைக்கு உண்மையான நோக்கத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் கிலியட் பள்ளி வித்தியாசமானது. ஆளும் குழுவைச் சேர்ந்த தியோடோர் ஜெராஸ், கிலியட் பள்ளியின் 93-வது பட்டமளிப்பு விழாவில் தன்னுடைய அறிமுகப் பேச்சில், இந்தப் பள்ளி உண்மையான உட்பொருளுடைய படிப்பைத் தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். சங்கீதம் 119:160 (NW) சொல்கிறது: “[கடவுளுடைய] வார்த்தையின் உட்பொருள் சத்தியம்.” ஆகவே, செப்டம்பர் 13, 1992-ல் ஏறக்குறைய 6,000 பேர் இந்தப் பட்டமளிப்பு நிகழ்ச்சியைக் கேட்பதற்கு அதிக சந்தோஷத்தோடு கூடிவந்திருந்தனர்.
காலையில் இருந்த முதல் பேச்சை, உவாட்ச்டவர் ஃபாம்ஸ் குழுவைச் சேர்ந்த லான் ஷில்லிங் கொடுத்தார். அதனுடைய தலைப்பு, “உலகத்தையும் அதன் அதிபதியையும் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருங்கள்.” சகோதரர் ஷில்லிங் வெளிப்படுத்துதல் 12:11-ன் மீது கவனத்தை ஊன்றச்செய்து, அந்த வசனம் மூன்று வழிகளில் ஜெயிப்பதைப் பற்றி கூறுகிறது என்பதாக சுட்டிக்காட்டினார்: (1) ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம், (2) சாட்சிக் கொடுப்பதின் மூலம், (3) சுயதியாகம் செய்யும் ஆவியைக் கொண்டிருப்பதன் மூலம். யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் இப்படிப்பட்ட ஆவியை வெளிக்காட்டியிருக்கிறார்கள்; தங்களுடைய உண்மைத்தன்மையையும் உத்தமத்தன்மையையும் பாதுகாப்பதற்காக மரணத்தையும்கூட முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மாணாக்கர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.
ஆளும் குழுவைச் சேர்ந்த ஜான் E. பார், விவரித்தப் பேச்சின் தலைப்பு, “உங்களுடைய நல்ல நம்பிக்கையைக் காத்துக்கொள்ளுங்கள்,” என்பது. தன்னுடைய தனிப் பண்பான, அனலான குரலில் அவர், யெகோவாவுக்கும் அவருடைய ஊழியக்காரருக்கும் இடையே உள்ள நம்பிக்கையை ஒரு நல்ல திருமண வாழ்க்கையில் வளர்ந்த நம்பிக்கையோடு ஒப்பிட்டுப் பேசினார். அவர் 2 தீமோத்தேயு 1:12, 13-களில் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, பைபிளில் உள்ள “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” பிரியத்தோடு இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருப்பதின்மூலம் அவர்களுடைய பொறுப்புக்களைக் காத்துக்கொள்ளும்படி மாணாக்கர்களைத் துரிதப்படுத்தினார். தனிப்பட்ட படிப்பை அவர்களுடைய தினசரி அட்டவணையின் ஒரு முக்கிய பாகமாக ஆக்கிக்கொள்ளுங்கள்படி அவர் வற்புறுத்திக் கூறினார். கூட்டங்களில் அவர்களுடைய குறிப்புகள் வெறும் கடமைக்கு என்று கொடுக்கப்படுவதாக இல்லாமல், எப்போதும் அர்த்தமுள்ளவையாக இருக்கச் செய்யுங்கள் என்று மாணாக்கர்களை அவர் அன்புடன் எச்சரித்தார்.
ஊழிய இலாகா குழுவைச் சேர்ந்த வில்லியம் வான் டி வால், “செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களுக்கு அன்புள்ள அக்கறையைச் செயலில் காண்பியுங்கள்” என்ற அடுத்தப் பேச்சைக் கொடுத்தார். இவர் மாணாக்கர்களிடம், ஒரு குடும்ப மருத்துவரிடம் தாங்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று கேட்டு, ஒற்றுணர்வு, இரக்கம், பரிவு போன்ற மதிப்பு தரும் இவற்றையே, அவர்களும் வளர்த்துக்கொள்ளும்படி துரிதப்படுத்தினார்.
ஆளும்குழுவின் டானியல் சிட்லிக், “கடவுள் எதையும் செய்ய முடியும்” என்ற தலைப்பில் உற்சாகத்தைத் தூண்டும்வகையில் பேசினார். ஆபிராகமும் சாராளும் தங்கள் முதிர்வயதில் ஒரு மகனைப் பெற்றெடுப்பது வெளிப்பார்வையில் நடக்க முடியாததாக தோன்றியதினால் சிரித்தனர் என்பதை இவர் மாணாக்கர்களுக்கு ஞாபகப்படுத்தினார். கடவுளுடைய வாக்குறுதிகள் பல, மனிதனுடைய பார்வையில் நடக்க முடியாததுபோல் தோன்றும்; ஆனால் அந்தத் தேவதூதன் ஆபிரகாமைக் கேட்டதுபோல, “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதியாகமம் 18:14) முடியாததைச் செய்துகாட்டும் கடவுளின் திறமையில் விசுவாசம் வைக்கவும் இவர்கள் எந்தச் சோதனைகளை எதிர்ப்பட்டாலும் இந்த விசுவாசத்தை ஒருபோதும் மங்காதபடி அல்லது தளராதபடி கவனித்துக் கொள்ளவும் மாணாக்கர்களை சகோதரர் சிட்லிக் அறிவுறுத்தினார்.
போதனையாளர்கள் ஆலோசனைக் கொடுக்கிறார்கள்
அடுத்ததாக, இரண்டு கிலியட் போதனையாளர்கள் பேசினார்கள். முதலாவதாக, ஜேக் D. ரெட்ஃபோர்ட், “கடவுளோடு ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்தல்” என்ற தலைப்பில் விவரித்துப் பேசினார். ஒருவர் எதைத் தனக்குரியதாக்கிக் கொள்கிறாரோ அதுவே ஒரு நல்ல அல்லது கெட்டப் பெயரைத் தருகிறது என்பதாக அவர் வாதாடினார். ஆதாம், நிம்ரோது, யேசபேல், சவுல், யூதாஸ் போன்ற பெயர்களோடு, நோவா, ஆபிரகாம், ரூத், பவுல், தீமோத்தேயு போன்ற பெயர்களை எதிரெதிராக ஒப்பிட்டு வேறுபாடுகளை இவர் எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு பெயரும் அதைத் தாங்கியவர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்ட அநேக விஷயங்களை உடையதாய் இருக்கிறது. இப்போதிருந்து, 10, 100, அல்லது ஏன் 1,000 வருடங்கள் கழித்து, அவர்கள் எப்படிப்பட்டப் பெயரை தங்களுடையதாக்கி இருப்பார்கள்—விட்டு ஓடிப்போனவர் என்ற ஒரு பெயரையா அல்லது குறைசொல்லுபவர் என்ற ஒரு பெயரையா அல்லது ஒரு விசுவாசமுள்ள மிஷனரி என்ற பெயரையா? என்று மாணாக்கர்களை இவர் கேட்டார். குறைபாடுகள்மீது கூர்ந்து கவனம்செலுத்துவதற்குப் பதிலாக, நோக்கங்களின்மீதும் தீர்வுகளின்மீதும் கவனம்செலுத்தும்படி இவர் அவர்களுக்கு ஆலோசனை சொன்னார்.
“நீங்கள் எந்தளவிற்கு உங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்வீர்கள்?” என்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்பு, யுலிசெஸ் V. கிலாஸ் என்பவரால் விவரிக்கப்பட்டது. உறுதியான விசுவாசத்தை இவர், எப்போதும் சரியான திசையைக் காட்டும் ஒரு நல்ல திசைகாட்டிக்கு ஒப்பிட்டார். ஒரு வாகனத்தில் இருக்கும் திசைகாட்டி, பூமியின் காந்தப்புலங்களால் மட்டுமல்ல, மற்ற காந்தப்புலங்களாலும் பாதிக்கப்படுகிறது. இவை மட்டுப்படுத்தப்பட வேண்டும். இதைப்போலவே இந்தப் பழைய உலகம், நாம் அதை அனுமதித்தால், நம் விசுவாசத்திற்கு ஆட்டங்கொடுக்கும் அல்லது உறுதியற்றதாக மாற்றும் அநேக கவர்ச்சிகளை உருவாக்குகிறது. இப்படிப்பட்டக் கவர்ச்சிகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படி வகுப்பினரை அவர் எச்சரித்திருந்தார். எனவே, சகோதரர் கிளாஸ், மற்றவர்களின் எண்ணங்களைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் கரிசனையுள்ளவர்களாக இருப்பதற்காகவும் இவர்களைப் பாராட்டினார்.
காலை நேரத்தின் இறுதிப்பேச்சு, ஆளுங்குழுவின் அங்கத்தினராகிய, ஆல்பர்ட் D. ஷூரோடர் என்பவரால் கொடுக்கப்பட்டது. மாணாக்கர்களை, “மிஷனரி ஆவியைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று இவர் உற்சாகப்படுத்தினார். இவர் பதிவாளராக செயல்பட்ட 1943-ல் நடந்த முதல் வகுப்பில் இருந்த அதே ஆவியை இன்னும் உடையவர்களாக இருப்பதற்காக, இவர்களை மிகவும் போற்றினார்; அவர்கள் அப்போது மக்கள்நலம் கருதினர், இயற்கையாகவே பிரசங்கிகளாக இருந்தார்கள், கடவுளுடைய ஆவியினால் வழிநடத்தப்பட விரும்பினார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆவியைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்படியும், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை தங்களுடைய தனிப்பட்ட படிப்பில் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளும்படியும் அவர் தூண்டினார். ஓர் உதாரணமாக, சங்கீதம் 24-வது அதிகாரத்தை ஒவ்வொரு வசனம் வசனமாக விளக்கிக் காண்பிப்பதோடு தன் பேச்சை முடித்தார்.
பின்பு, கிலியட் மாணாக்கர்கள் கிலியட் பட்டதாரிகளானார்கள்! பார்வையாளர்களின் கைத்தட்டுதல்களோடு, அவர்களுக்குப் பட்டங்கள் அளிக்கப்பட்டன, இதே சமயத்தில் அவர்களுடைய மிஷனரி நியமிப்புகளும் வாசிக்கப்பட்டன.
பிற்பகலில், அச்சாலைக் குழுவைச் சேர்ந்த கல்வின் சைக், உவாட்ச்டவர் படிப்பை நடத்தினார். மகிழ்ச்சிகரமான மாணாக்கர்களின் நிகழ்ச்சிநிரல் பின்தொடர்ந்தது. இது ஐந்து மாத பயிற்றுவிப்பு காலத்தில் ஊழியத்தில் மாணாக்கர்கள் அடைந்த அனுபவங்களையும், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நாடுகளைப் பற்றிய படங்களையும் (சிலைடுகளையும்) உள்ளடக்கியது. இதோடுகூட, ஒரு வயதான தம்பதி பேட்டி காணப்பட்டனர். அநேக ஆண்டுகளாக அவர்கள் மிஷனரிகளாக இருக்கிறதால் அடைந்த ஞானத்தையும் அனுபவங்களையும் சிறிது பகிர்ந்துகொண்டனர். பிற்பகல் நிகழ்ச்சி, வஞ்சிக்கப்படாதிருங்கள் அல்லது கடவுளை நிந்திக்காதீர்கள் என்ற தலைப்பையுடைய காலத்திற்கு ஏற்ற நாடகத்தோடு முடிவிற்கு வந்தது.
பார்வையாளர்கள் மிகுந்த ஆனந்தமடைந்து, கடவுளுடைய சத்தியத்தில் படிப்பு எதைச் சாதிக்கும் என்பதைப் பார்ப்பதில் கிளர்ச்சியடைந்தார்கள், இப்படிப்பட்ட படிப்பின் பலன்கள் உலகமெங்கும் தொடர்ந்து உணரப்பட்டுவரும் என்பதை அறிவதில் மிகுந்த ஆனந்தகளிப்படைந்தார்கள். இந்த 48 மிஷனரிகள் தங்கள்தங்கள் நியமிப்புகளுக்குப் பிரிந்துசென்றபோது, விசுவாசமுள்ள இவர்களனைவரும் எங்குப் போனாலும், கடவுளுடைய மக்களுக்கு ஓர் ஆசீர்வாதமாகத் திகழவேண்டும் என்ற இருதயப்பூர்வமான ஆர்வத்தையும் முழுநம்பிக்கையையும் வெளிக்காட்டும்வகையில் அநேக ஜெபங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தன.
[பக்கம் 19-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 7
அவர்கள் அனுப்பப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 18
மாணாக்கர்களின் எண்ணிக்கை: 48
திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 32.8
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 15.3
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 10.4
கிலியட் புதுவிரிவு வகுப்பின் பட்டதாரிகள்
[பக்கம் 20-ன் பெட்டி]
ஜூன் 21, 1992-ல் 24 மிஷனரிகள் அடங்கிய ஒரு குழு, ஜெர்மனியில் உள்ள ஸெல்ட்டர்ஸ்/டானஸ் என்ற இடத்தில் நடந்த கிலியட் புதுவிரிவு பள்ளியின் (Gilead Extension School) நான்காவது வகுப்பிலிருந்து பட்டம் பெற்றனர். இந்த வகுப்பு, 11 திருமணமான தம்பதிகளையும் 2 தனி சகோதரிகளையும் உடையதாக இருந்தது. இவர்கள் ஏழு நாடுகளிலிருந்து வந்திருந்தனர், சராசரி வயது 32, முழுக்காட்டுதல் எடுத்ததிலிருந்து சராசரி வருடங்கள் 14, முழு நேர சுவிசேஷ வேலையில் சராசரி வருடங்கள் 8.5. பட்டமளிப்பு விழாவிற்கு 2,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்.
சகோதரர் ஜெராஸ், நீதிமொழிகள் 11:24 (NW) என்ற வசனத்தின் விளக்கத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தார், இந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதிகரித்துக்கொண்டிருக்கிறவன் ஒருவன் உண்டு.” மாணாக்கர்கள் இப்போது சிதறடிக்கப்படப் போகிறார்கள், ஆனால் நிச்சயமாகவே அதிகரிப்பைத் தருவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனியின் கிளைஅலுவலகக் குழுவின் ஒத்திசைவாளர் ரிச்சர்டு கெல்சி; ஊழிய இலாகாவைச் சேர்ந்த வல்ஃப்கெங் கிரப்பே; கிளைஅலுவலகக் குழுவின் அங்கத்தினர்களான, வெர்னர் ரட்க்கி, மற்றும் எட்மண்ட் அன்ஸ்டெட்; மேலும் இரண்டு போதனையாளர்கள், டையட்ரிச் ஃபார்ஸ்ட்டர், லோத்தர் க்கிமர்; ஆகியோரால் உற்சாகமளிக்கும் வேதப்பூர்வமான பேச்சுக்கள் கொடுக்கப்பட்டன. ஆளும்குழுவைச் சேர்ந்த, ஆல்பர்ட் ஸ்ஷூடர், “ஆவிக்குரிய முத்துக்களைத் தேடுகிறவர்களாக தொடர்ந்து இருங்கள்” என்ற தலைப்பை உடைய ஆர்வத்தைத் தூண்டிய சிறப்புப் பேச்சைக் கொடுத்தார். ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ள 11 நாடுகளுக்கு இவர்கள் தங்களுடைய நியமிப்புகளைப் பெறுவது இந்த நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக இருந்தது. இதற்குப் பின்பு, பட்டம்பெற்ற ஒருவர், வகுப்பின் சார்பாக, ஆளும்குழுவிற்கு இருதயப்பூர்வமான போற்றுதலைத் தெரிவிக்கும் ஒரு கடிதத்தை வாசித்தார்.
[பக்கம் 18-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் பட்டம் பெறும் 93-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசைகள் முன்னிருந்து பின்நோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஹிட்ஸ்மேன், C.; வெஸ்ட், P.; இவான்ஸ், D.; ஹிப்ஸ், M.; சிமோனெலி, N.; வுட், S.; கார்க்கிள், M.; பிளோர்ஸ், C.; தாமஸ், J. (2) ஜோன்ஸ், M.; நிஸ்ஸினன், J.; ஸ்பானேன்பெர்க், M.; ஸேச்சரி, K.; ராவ்ன், G.; பேக்மேன், M.; வெட்டர்கிரன், A.; இவான்ஸ், D.; பிளோர்ஸ், R.; கேப்போரேல், G. (3) சிமோனெலி, N.; ரெச்ஸ்டெய்னர், M.; ரெச்ஸ்டெய்னர், M.; ருய்ஸ்-எஸ்ப்பார்ஸா, L.; ஜெர்பிக், B.; சிம்சன், C.; ஷேன்விச், C.; ஸேச்சரி, B.; ரிக்கட்ஸ், L. (4) சிம்சன், J.; பேக்மேன், J.; கார்க்கிள், G.; ஜெர்பிக், M.; ரிக்கட்ஸ், B.; பெக்கர்-ஹேன்சென், L.; ஜோன்ஸ், A.; ஷேன்விச், K.; ராவ்ன், J.; ஹிப்ஸ், C. (5) ஸ்பானேன்பெர்க், S.; ஹிட்ஸ்மேன், A.; கேப்போரேல், L.; ருய்ஸ்-எஸ்ப்பார்ஸா, S.; தாமஸ், R.; பெக்கர்-ஹேன்சென், B.; வுட், M.; வெஸ்ட், M.; வெட்டர்கிரன், C.; நிஸ்ஸினன், E.