உங்கள் ஜெபங்களை எவ்வாறு மெருகேற்றலாம்?
ஜெபமானது யெகோவா தேவனின் அன்பான ஏற்பாடுகளுள் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஒருவேளை எதிரிகள் உங்கள் பைபிளைப் பறிமுதல் செய்யலாம் அல்லது உடன் வணக்கத்தாரோடு கூடிவருவதைத் தடைசெய்யலாம். ஆனால் ஜெபிப்பதிலிருந்து உங்களை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜெபத்தின் உயரிய மதிப்பைச் சொல்லற்கரிது. எனவே நம்மில் ஒவ்வொருவரும் இந்தச் சிலாக்கியத்தைப் போற்றி மகிழ்வதும் முழுமையானப் பயனைப் பெற்றுக்கொள்வதும் எவ்வளவு முக்கியமானது. உங்கள் ஜெபத்தை மெருகேற்ற எது உங்களுக்கு உதவலாம்?
பைபிள் ஒரு ஜெபப் புத்தகம் அன்று. என்றாலும், ஜெபத்தின் பேரில் மாந்தருக்கு அது பிரதான பாட நூல் என்று வர்ணிக்கப்படலாம். எபிரெய வேதாகமங்கள் மாத்திரம் 150-க்கும் மேற்பட்ட ஜெபங்களைக் கொண்டுள்ளன. சில குறுகியவையாகவும் மற்றவை நீண்டவையாகவும் உள்ளன. அவை மக்கள் மத்தியிலோ தனித்தோ அரசர்களாலோ அடிமைகளாலோ வெற்றிவாகைச் சூடும்போது அல்லது உபத்திரவத்தின்போது உச்சரிக்கப்பட்டன. சங்கீதம் 65:2-ல், “மாம்சமான யாவரும்,” “ஜெபத்தைக் கேட்கிறவ”ராகிய யெகோவாவினிடத்திற்குத் திரும்புவார்கள் என்று தாவீது பாடினார். இத்தகைய மிகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபங்களைப் பதிவுசெய்யும்படி பைபிள் எழுத்தாளர்களைக் கடவுள் ஏன் ஏவினார்?
அந்தக் கேள்விக்கு விடையளிக்க 2 தீமோத்தேயு 3:16-ஐ (NW) கவனியுங்கள். அது கூறுகிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவினால் ஏவப்பட்டவை மற்றும் பிரயோஜனமுள்ளவை.” இவ்வாறாக, வேதப்பூர்வ தீர்க்கதரிசனம், நியமங்கள், வரலாறு போன்றே பைபிளிலுள்ள ஜெபங்கள் நம்மை வழிநடத்த இருக்கின்றன. எவ்வாறு இந்த ஜெபங்கள் நமக்கு நன்மை பயக்கும்?
வேதப்பூர்வ ஜெபங்களை ஆராயும்போது, நமக்குள்ள அதே சூழ்நிலைமைகளின்கீழ் சொல்லப்பட்டவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஜெபங்கள் எவ்வாறு நோக்கத்திலும் சூழ்நிலையிலும் வித்தியாசப்படுகின்றன என்பதை கற்றுக்கொள்ளலாம். மேலுமாக, துதிப்பதற்கும் நன்றி செலுத்துவதற்கும் புதிய பதங்களை கண்டுபிடிப்போம் மற்றும் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் மூலபதங்களைக் கண்டுபிடிப்போம். சுருங்கக்கூறின், பைபிளிலுள்ள ஜெபங்கள் நம்முடைய ஜெபங்களை மெருகேற்ற உதவிசெய்யக்கூடும்.
பின்னர் இயேசுவுக்குத் தாயாக ஆன மரியாள், பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஜெபத்தில் உபயோகிக்கப்பட்ட பதங்களிலிருந்து குறிப்பிடத்தக்க விதத்தில் பயனடைந்த ஒருநபராக இருந்தார். தானும் தன் இனத்தாளாகிய எலிசபெத்தும் தெய்வீக உதவியினால் முறையே ஒவ்வொரு மகனை கர்ப்பம்தரித்திருந்தபோது, இவர் அவரை சந்தித்தார். மரியாள் தேவனுக்குத் துதியையும் நன்றியறிதலையும் செலுத்தினார், குறிப்பிடத்தக்க வகையில், அவருடைய பதங்களுள் சில எபிரெய வேதாகமங்களில் அடங்கியுள்ளவைப் போன்றே இருக்கின்றன. ஒருவேளை மரியாள் தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாய், அன்னாள் உச்சரித்த ஜெபத்தை நன்கு அறிந்திருந்திருப்பார் எனத் தோன்றுகிறது. 1,000-த்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், அன்னாளும்கூட தேவனின் உதவியால் ஒருமகனைக் கர்ப்பந்தரித்திருந்தார். தன்னுடைய சொந்த உணர்வுகளைப் பிரதிபலித்ததன் காரணத்தினாலோ மரியாள் இந்த ஜெபத்தின் பேரில் தியானம் செலுத்தினார்?—1 சாமுவேல் 2:1-10; லூக்கா 1:46-55.
உங்களைப்பற்றி என்ன? உங்களுடைய சூழ்நிலைமைகளுக்கு ஒத்த சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட ஒரு வேதாகம ஜெபத்தை உங்களால் நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறதா? அத்தகைய ஜெபங்களைக் கண்டுபிடிப்பது, வாசிப்பது, தியானிப்பது போன்றவை, கடவுளுடன் உள்ள உங்களுடைய சொந்த பேச்சுத்தொடர்பை மெருகேற்ற உதவிசெய்யும். அடுத்தக் கட்டுரையில் பரிசுத்த வேதாகமங்களிலிருந்து மூன்று ஜெபங்களை ஆராய, உங்களை நாங்கள் அழைக்கிறோம். வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட அவை, ஒருவேளை உங்களுடையதைப் போன்றே இருக்கலாம்.