பொறாமையுள்ள மனிதன்
எபிரெய மொழியில் “பொறாமை” என்பதற்கும் “வைராக்கியம்” என்பதற்கும் ஒரே ஒரு அடிப்படை வார்த்தையே இருக்கிறது. (ஆதியாகமம் 26:14; பிரசங்கி 4:4) என்றபோதிலும், கிரேக்க மொழியில் “பொறாமை” என்பதற்கு ஒன்றுக்கும் மேலான வார்த்தைகள் இருக்கின்றன. ஸீலாஸ் (zeʹlos) என்ற வார்த்தை, அதற்கு ஒப்பான எபிரெய பதத்தைப் போலவே நீதியுள்ள மற்றும் பாவமுள்ள பொறாமை ஆகிய இரண்டையும் குறிக்கக்கூடும். மற்றொரு கிரேக்க வார்த்தையாகிய தானாஸ் (phthoʹnos) என்பது முற்றிலும் எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கிறது.
தானாஸ் என்ற வார்த்தை, பண்டைய கிரேக்கில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? தி ஆங்கர் பைபிள் டிக்ஷனரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “பேராசையுள்ள மனிதனைப் போலில்லாமல், தானாஸ் என்பதால் பாதிக்கப்பட்ட மனிதனைப் பொறுத்தவரையில், மற்றவர் கொண்டிருக்கக்கூடாது என்று அவர் நினைக்கிற பொருள்கள் தனக்கு வேண்டும் என்று விரும்புவதில்லை; அவர் வெறுமனே மற்றவர் அதைக் கொண்டிருக்கக்கூடாது என்று நினைக்கிறார். போட்டிமனப்பான்மையுள்ள மனிதனிலிருந்து அவர் வேறுபடுகிறார்; எவ்வாறென்றால், அவருடைய இலக்கு போட்டிமனப்பான்மை உள்ளவருக்கு இருப்பதுபோல் வெற்றி பெற வேண்டும் என்பதாக இருப்பதற்கு மாறாக மற்றவர்களை வெற்றி பெறுவதிலிருந்து தடுக்கவேண்டும் என்பதாக இருக்கிறது.”
தன்னுடைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் தன் சொந்த மனநிலையே என்று பொறாமையுள்ள மனிதன் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. “தானாஸ் என்பதன் தனித்தன்மைகளில் ஒன்று என்னவென்றால், தன்னைப் பற்றிய அறிவின்றி இருப்பதே” என்று அதே அகராதி விவரிக்கிறது. “தானெராஸ் மனிதன், தன்னுடைய நடத்தைக்குக் காரணம் காட்டும்படி கேட்கப்பட்டால், தன்னால் தாக்கப்படுகிறவர்கள் அதைப் பெற தகுதிபெற்றவர்கள் என்றும் நிலைமையின் நேர்மையற்ற தன்மையே அவரைக் குறைகூறும்படி செய்தது என்றும் அவர் தன்னிடமும் மற்றவர்களிடமும் எப்போதும் சொல்வார். ஒரு நண்பரைக் குறித்து, எப்படி அவரால் அந்தவிதமாகப் பேசமுடிகிறது என்று கேட்கப்பட்டால், அந்த நண்பரின் மிகச்சிறந்த நலனை மனதில் கொண்டே குறைகூறுவதாகச் சொல்வார்.”
இயேசுவைக் கொலைசெய்ய காரணமாக இருந்தவர்களுடைய உள்நோக்கை விளக்குவதற்கு, சுவிசேஷ எழுத்தாளர்களாகிய மத்தேயுவும் மாற்கும் கிரேக்க வார்த்தையாகிய தானாஸ் என்பதை பயன்படுத்துகிறார்கள். (மத்தேயு 27:17; மாற்கு 15:9) ஆம், அவர்கள் பொறாமையால் தூண்டப்பட்டார்கள். கேடுள்ள அதே உணர்ச்சி, விசுவாசதுரோகிகளைத் தங்களுடைய முன்னாள் சகோதரரின் கடுமையான பகைவர்களாக மாற்றியிருக்கிறது. (1 தீமோத்தேயு 6:3-5) பொறாமையுள்ள மனிதர்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை! ‘பொறாமை நிறைந்தவர்களாய்’ தொடர்ந்திருப்பவர்கள் ‘மரணத்துக்குப் பாத்திரராயிருக்கிறார்கள்’ என்று யெகோவா தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.—ரோமர் 1:29, 32; கலாத்தியர் 5:21.
[பக்கம் 7-ன் படங்கள்]
பொறாமை உங்கள் வாழ்க்கையை நாசமாக்க அனுமதிக்காதீர்கள்