உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp16 எண் 1 பக். 4
  • நம் பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • இதே தகவல்
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபத்தின் மூலமாய் உதவியை அடைவது எப்படி?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
wp16 எண் 1 பக். 4
இயேசு ஜெபம் செய்கிறார், சீடர்கள் அதை கேட்கிறார்கள்

அட்டைப்படக் கட்டுரை | கடவுளிடம் வேண்டினால் பலன் கிடைக்குமா?

நம் பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா?

ஜெபம் செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை, நம்முடைய ஜெபத்தை யாருமே கேட்பதில்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர்கூட, ஒருமுறை ஜெபம் செய்துதான் பார்க்கலாமே என்று நினைத்தார்; ஆனால், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று சொன்னார்.

நம்மை படைத்த கடவுள் நாம் செய்யும் ஜெபங்களை கேட்கிறார் என்று பைபிள் சொல்கிறது. “நீங்கள் உதவிக்காக கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உங்கள் குரலைக் கேட்ட உடனே பதிலளிப்பார்.” (ஏசாயா 30:19, NW) கடவுள் ‘நல்லவர்களின் ஜெபங்களை கேட்கிறார்.’—நீதிமொழிகள் 15:8, ஈஸி டு ரீட் வர்ஷன் பைபிள்.

இயேசுவும் கடவுளிடம் ஜெபம் செய்தார்; அவருடைய ஜெபத்துக்கு பதில் கிடைத்தது. —எபிரெயர் 5:7

இயேசுவும் ஜெபம் செய்தார். ‘மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி மன்றாடினார், விண்ணப்பம் செய்தார்.’ கடவுள் அவருடைய ஜெபத்தை கேட்டார். (எபிரெயர் 5:7) அதுபோல் நிறைய பேருடைய ஜெபங்களை கடவுள் கேட்டிருக்கிறார். பைபிளில், தானியேல் 9:21, 2 நாளாகமம் 7:1-ஐ படித்துப் பாருங்கள்.

எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்பாரா? நம்முடைய ஜெபத்தை கடவுள் கேட்க வேண்டுமென்றால், கடவுள் யார், அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். நம்மை படைத்த கடவுளுடைய பெயர், யெகோவா என்று பைபிள் சொல்கிறது. அதனால், யெகோவாவிடம் மட்டும்தான் ஜெபம் செய்ய வேண்டும். வேறெந்த கடவுளிடமோ இறந்தவர்களிடமோ ஜெபம் செய்யக் கூடாது. ‘கடவுளுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி எதைக் கேட்டாலும் அவர் நம் ஜெபத்தை கேட்பார்’ என்று பைபிள் தெளிவாக சொல்கிறது.—1 யோவான் 5:14.

நாம் செய்யும் ஜெபங்களை கடவுள் கேட்கிறார் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். கென்யாவில் இருக்கும் ஐசக் இப்படி சொல்கிறார்: “பைபிளை புரிஞ்சிக்கிறதுக்காக கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சேன். கொஞ்ச நாள்லயே ஒருத்தவங்க வந்து பைபிளை பத்தி சொல்லிக்கொடுத்தாங்க.” ஃப்ராங்க் என்பவர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். சிகரெட் பிடிப்பதை நிறுத்த ரொம்ப கஷ்டப்பட்டார். அதற்காக கடவுளிடம் அடிக்கடி ஜெபம் செய்தார். கடைசியில், சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிட்டார்.

கடவுளுக்கு பிடித்த மாதிரி ஜெபம் செய்யுங்கள். கடவுள் உங்களுடைய ஜெபத்தை கேட்டு, கண்டிப்பாக பதில் சொல்வார். (w15-E 10/01)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்