நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—ஜனங்களோடு சம்பாஷிப்பதன் மூலம்
1 ஓர் அகராதியின்படி, சம்பாஷணை என்பது “உணர்ச்சிக் கனிவுகள், கூர்ந்து கவனித்தல்கள், அபிப்பிராயங்கள் அல்லது கருத்துக்கள் ஆகியவற்றை வாய்மொழியாக பரிமாற்றம் செய்தல்.” நீங்கள் சந்திக்கும் ஆட்கள் மதப்பிரகாரமாக எதிர்ப்பவர்களாகவும் அல்லது அவர்களுடைய சொந்த அலுவல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கும்போது, பைபிளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சம்பாஷணையை நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கலாம்? கேட்பவர்களை உட்படுத்துவதற்கு இயேசு கேள்விகள் கேட்டார்.—யோ. 4:9–15, 41, 42.
2 நேர்மையான இருதயமுள்ள ஆட்களை கண்டுபிடிப்பதற்கும், அவர்களோடு நாம் சம்பாஷிப்பதற்கு வழியைத் திறக்க உதவி செய்யும்படியும் நாம் கடவுளிடம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வீட்டுக்காரரையும் யெகோவாவின் ஊழியராக ஆகப்போகிறவராக நோக்கினால் சாட்சி கொடுத்தல் சுலபமாகிறது. அக்கறை காட்டும் ஆட்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாம் சத்தியத்தை அனலான, உண்மையான விதத்தில் தெரிவிக்க இந்த மனநிலை நமக்கு உதவிசெய்யும்.
நம்மிடம் இருப்பவற்றை உபயோகியுங்கள்
3 நியாயங்கள் புத்தகம் மிகச் சிறந்த அநேக முன்னுரைகளை பக்கங்கள் 9–15 வரை அளிக்கிறது. இதில் அநேகம் கேள்விகளை திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கின்றன. வீட்டுக்காரர் ஒரு கேள்விக்கு பிரதிபலிக்கும் போது, மரியாதையோடு செவிகொடுங்கள். பிறகு அவர் கூறியதை நாம் சிந்தித்திருக்கிறோம் என்பதை வீட்டுக்காரருக்கு காட்டும் விதத்தில் பதிலளியுங்கள்.—கொலோ. 4:6.
4 இருந்தபோதிலும், நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது வீட்டுக்காரர் எவ்வாறு பதிலளிப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது. அதற்கேற்றவிதமாய் உங்கள் கலந்தாலோசிப்பை மாற்றியமைக்க தயாராயிருங்கள். அவருடைய அக்கறைகளுக்கு ஏற்றாற்போல் பைபிளிலிருந்து இன்னுமதிக தகவலை அறிமுகப்படுத்துவதன் மூலமும், மேலுமதிக சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பதன் மூலமும் சம்பாஷணை தொடர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
முன்னதாகவே தயாரியுங்கள்
5 உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் ஆட்களின் பொதுவான எண்ணத்தோடு நீங்கள் ஏற்கெனவே அறிமுகமாகியிருப்பீர்கள். அப்படியானால், உங்கள் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அதிக திறம்பட்டதாக இருக்கும் முன்னுரைகளை நியாயங்கள் புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுங்கள். முன்னுரைகளில் ஒன்றை தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுக்கு மாற்றியமைப்பது தான் உங்களுக்குத் தேவைப்படுவதாக இருக்கும். வீட்டுக்காரருக்கு அக்கறையாயிருக்கும் என்று நீங்கள் நம்பும் காரியங்களோடு உங்கள் சம்பாஷணையை ஆரம்பியுங்கள். சுருக்கமாகப் பிரச்னையை கூறுங்கள், பிறகு பைபிள் தீர்வுக்கு வழிநடத்துங்கள். அவர் ஒரு கருத்து தெரிவித்தால், அவர் சொல்லும் காரியத்தின் பேரில் குற்றங்காண்கிறபடி இல்லாமல் நேர்மறையான குறிப்பு சொல்லுங்கள். அவருடைய எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் நீங்கள் காட்டும் அக்கறை உங்களோடு அவர் தொடர்ந்து சம்பாஷிக்க அவரை உற்சாகப்படுத்த வேண்டும். ஒத்துக்கொள்ளும் குறிப்புகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து அதன்பேரில் குறிப்பு சொல்லுங்கள். மனிதனின் பிரச்னைகளுக்கு பைபிளின் தீர்வு ராஜ்ய ஆசீர்வாதங்கள் என்பதை அழுத்திக் காட்டுவதன் மூலம் சம்பாஷணையை நேர்தன்மையுள்ளதாய் வைத்துக் கொள்ளுங்கள்.
6 வித்தியாசமான நோக்குநிலைகளை தொடர்ச்சியான சம்பாஷணைக்கு திறவுகோல்களாக கருதுங்கள். வீட்டுக்காரர் நியாயமான முறையில் பேச முன்வந்தால், ஒருவேளை நீங்கள் கேட்கலாம், “இந்த நோக்குநிலையிலிருந்து நீங்கள் இதை எப்பொழுதாவது யோசித்ததுண்டா?” பிறகு அந்தப் பொருளின் பேரில் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள். அவர் நியாயமற்றவராக இருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் கூறியதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். மாறாக, சிநேகப்பான்மையான குறிப்போடு முடியுங்கள், அவருக்கு நற்செய்தியை அளிப்பதில் ஓர் எதிர்கால வாய்ப்பிற்காக வழியை அது திறந்து வைக்கும்.—நீதி. 12:8, 18.
7 சில ஆட்கள் முறைபடியல்லாத சூழமையில் நீங்கள் சந்திக்கும்போது சம்பாஷிக்க அதிக மனசாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர். தெருவில் நீங்கள் சந்திக்கும் ஆட்களோடு அல்லது வேலைசெய்து கொண்டிருப்பவர்களோடு அல்லது முற்றத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர்களோடு சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு தயங்காதீர்கள். அவர்களுடைய வேலையில் உங்கள் உண்மையான அக்கறையை அவர்கள் வரவேற்கலாம், பூமி சீக்கிரத்தில் பரதீஸாகும் என்ற பைபிள் வாக்கிற்கு சம்பாஷணையை ஒரு கலந்தாலோசிப்பாக நீங்கள் வழிநடத்தலாம். ஒரு சம்பாஷணையை நீங்கள் ஆரம்பிக்கும்போது, வீட்டுக்காரருக்கு அதை ஓர் இனிமையான அனுபவமாக ஆக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை கடவுள், அவருடைய வார்த்தை, அவருடைய ஊழியர்கள் ஆகியவற்றைப் பற்றி அதிக ஆதரவான மனநிலையோடு அந்த நபரை விட்டுவாருங்கள். இந்த விதத்தில், அவருடைய இருதயத்தை எட்டுவதில் ஆரம்பத்தில் நீங்கள் வெற்றிகரமாக இல்லையென்றாலும், அடுத்தமுறை ஒரு சாட்சி செல்லும்போது அவர் ஒருவேளை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவராய் இருப்பார்.