உலகளாவிய பாதுகாப்பு அண்மையில் இருக்கிறது என்பதைஅனைவரும் அறியட்டும்
1 விரைவில் “சமாதானப் பிரபு” மெய் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பூமி முழுவதிலும் நிலைநாட்டுவார். இந்த பைபிள் வாக்கின் பேரில் உள்ள நம்முடைய விசுவாசம், மற்றவர்களோடு இதைப் பகிர்ந்து கொள்ள நம்மை உந்துவிக்க வேண்டும். (ஏசா. 9:6, 7; மீகா 4:3, 4) பிப்ரவரி, மார்ச் மாதங்களின் போது, நாம் ஏதாவது இரண்டு 192 பக்க பழைய புத்தகங்களை அளிப்போம்.
2 இந்த இதழின் நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 4-ல், பிப்ரவரி, மார்ச் மாதங்களின் போது நீங்கள் ஊழியத்தில் உபயோகிப்பதற்கு அநேக முன்னுரைகளை நாங்கள் அளித்துள்ளோம். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? ஆகிய புத்தகங்களிடமாக வீட்டுக்காரர்களின் கவனத்தைத் திருப்புவதற்கு உதவியாயிருக்கும் மூன்று வகை இணைப்புக்கூற்றுகள் பின்வரும் பாராக்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
3 நற்செய்தி புத்தகத்தை உபயோகிக்கும் போது இணைப்புக்கூற்று: உங்களுடைய முன்னுரைக்குப் பிறகு, உங்களை மகிழ்விக்க நற்செய்தி (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 109-க்குத் திருப்பி, இவ்வாறு கேளுங்கள்: “கடவுள் நியமித்திருக்கும் ‘சமாதானப் பிரபுவின்’ கைகளில் இருக்கும் கடவுளுடைய ஆட்சி, மனித ஆட்சியைவிட ஏன் மேம்பட்டதாயிருக்கும்? பாரா 7-ல் சில நல்ல காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு நான் அதை வாசித்துக்காட்ட அனுமதியுங்கள்.” பின்பு கேளுங்கள்: “‘சமாதானப் பிரபு’ தன் பிரஜைகளிடம் உண்மைத் தவறாமல் இருப்பார் என்று எவ்வாறு ஒரு நபர் நிச்சயமாயிருக்கலாம்?” பதிலுக்காக நேரம் அனுமதித்து, பின்பு தொடருங்கள்: “‘சமாதானப் பிரபுவை’ பற்றியும், நம்முடைய காலத்தில் அவர் எவ்வாறு உலகளாவிய சமாதானத்தைக் கொண்டு வருவார் என்பதைப் பற்றியும், இப்புத்தகம் இன்னும் கூடுதலான விஷயங்களை உங்களுக்குச் சொல்லும். இதை வாசிக்க நீங்கள் ஆர்வமுள்ளவர்களாய் இருப்பீர்கள். வாக்களிக்கப்பட்டிருக்கும் புதிய உலகத்தைப் பற்றியும் இன்னுமதிகமாகக் கற்றறிய விரும்புவீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.” பின்பு இப் புத்தகத்தை, வேறு ஏதாவது ஒரு 192 பக்க புத்தகத்தோடு ரூ.12.00-க்கு அளியுங்கள்.
4 சத்தியம் புத்தகத்தை உபயோகிக்கும் போது இணைப்புக்கூற்று: ஏசாயா 9:6, 7-ஐ வாசித்தப் பிறகு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தில் பக்கம் 4-க்கு திருப்பி, வீட்டுக்காரரைக் கேளுங்கள்: “எப்படிப்பட்ட சமாதானமான நிலைமைகளை இந்தப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்?” பதிலுக்காக நேரம் அனுமதித்து, இவ்வாறு சொல்வதன் மூலம் தொடருங்கள்: “அங்கு மனிதர்களிடையே சமாதானம் இருக்கிறது, மிருகங்களோடும், சமாதானம் இருக்கிறது. அப்படிப்பட்ட சமாதானத்தை மனித அரசாங்கங்கள் கொண்டு வரும் என்று சிலர் ஒருவேளை நினைக்கலாம். பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் மெய்யான சமாதானமும் பாதுகாப்பும் கடவுளால் ஏற்படுத்தப்பட வேண்டும், மனிதனால் அல்ல. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்கள் அல்லவா?” பதிலுக்காக நேரம் அனுமதியுங்கள், பின்பு பக்கம் 6-ல் இருக்கும் பாரா 4-ஐ வாசித்து, ராஜ்யத்தைப் பற்றியும், பூமியில் சமாதானத்தைப் பற்றியும் அநேக கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கிறது என்று விளக்குங்கள். இவ்விதத்தில் புத்தகத்திடமாகக் கவனத்தைத் திருப்பிய பின்பு, இறுதியில் இதை மற்றொரு பழைய 192 பக்க புத்தகத்தோடு அளியுங்கள்.
5 இந்த வாழ்க்கை புத்தகத்தை உபயோகிக்கும் போது இணைப்புக்கூற்று: உங்களுடைய அளிப்பை நீங்கள் முடிக்க முடியாமல் இடையே குறுக்கிட்டுத் தடை செய்யும் மனச் சாய்வையுடைய மக்கள் இருக்கும் இடங்களில், நீங்கள் இந்த அணுகுமுறையை உபயோகிக்கலாம்: “நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?” வீட்டுக்காரர் ஒப்புக்கொண்டால் இப்படியாகத் தொடருங்கள்: “இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். கேள்வி என்னவென்றால்: ‘சமாதானப் பிரபுவாக’ அவர் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளைப் பெற்று தந்தையாக விளங்க வேண்டிய அவசியம் இருக்குமா? உங்களுடைய கருத்து என்ன?” பதிலுக்காக நேரம் அனுமதித்து, பின்னர் இவ்வாறு சொல்லுங்கள்: “அந்தக் கேள்விக்குரிய பைபிள் பதில் பக்கம் 167-ல் இருக்கிறது.” பின்பு, பக்கம் 167-ல் பாரா 1-ஐ வாசித்து, இப்புத்தகத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கும் வசனங்கள் எவ்வாறு அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். மேலும் உலகளாவிய பாதுகாப்பைப் பற்றியும், “சமாதானப் பிரபுவைப்” பற்றியும் அநேக கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கிறது.
6 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 4-லிருந்து உங்களுக்கு விருப்பமான ஒரு முன்னுரையை நீங்கள் ஒருவேளை தேர்ந்தெடுத்திருக்கலாம். இக் கட்டுரையில் இருக்கும் இணைப்புக்கூற்றுகளை விமர்சித்தப் பிறகு, நீங்கள் அளிக்கப் போகும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தோடு உபயோகிக்க, ஓர் இணைப்புக்கூற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வெளி ஊழியத்துக்குச் செல்தற்கு முன்பு, உங்களுடைய முன்னுரையையும், இணைப்புக்கூற்றையும் பழகிக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். “சமாதானப் பிரபுவின் மூலமாகவும், அவருடைய ராஜ்யத்தின் மூலமாகவும் மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் வரும் என்ற உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கையும், உங்களுடைய தயாரிப்பும், பழைய 192-பக்க புத்தகங்களை அளிப்பதில் பிறரை இணங்க வைக்கும் உங்கள் திறமையையும் ஆர்வத்தையும் கூட்டும்.