உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/93 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • தேவை—4,000 துணைப் பயனியர்கள் உங்களால் துணைப் பயனியர் சேவை செய்யமுடியுமா—மார்ச்சில்? ஏப்ரலில்? மேயில்?
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • துணைப்பயனியர் ஊழியம் செய்ய உங்களால் முடியுமா?
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • நாம் மறுபடியும் செய்யலாமா? துணைப் பயனியர்களுக்கு இன்னொரு அழைப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • புதிய ஊழிய ஆண்டுக்கான மெச்சத்தக்க இலக்கு
    நம் ராஜ்ய ஊழியம்—2007
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 4/93 பக். 7

கேள்விப் பெட்டி

◼ ஒரு துணைப் பயனியராகச் சேவிப்பதை எப்படிக் கருதவேண்டும்?

துணைப் பயனியர் சேவை செய்வதை ஒரு சிலாக்கியமாகவும் முக்கியமான பொறுப்பாகவும் கருதவேண்டும். உலகமுழுவதும் பத்தாயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதமும் துணைப் பயனியர்களாகச் சேவிக்கிறார்கள், சிலர் அவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர். துணைப் பயனியர்களாகச் சேவிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் வெளி ஊழியத்தில் தேவையான 60 மணிநேரங்களைச் செலவிடுவதற்கு அவர்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கக்கூடிய இந்த வைராக்கியமுள்ள பிரஸ்தாபிகளை நாங்கள் போற்றுகிறோம். துணைப் பயனியர் சேவைக்காக விண்ணப்பிக்கும் பிரஸ்தாபிகள் தங்கள் நியமிப்பைப் பொறுப்புவாய்ந்த ஒன்றாக கருதுவதற்கும் ஏனோதானோ என்ற மனப்போக்கைத் தவிர்ப்பதற்கும் மூப்பர்களும் மற்றவர்களும் உற்சாகப்படுத்தவேண்டும்.

ஒழுங்கான பயனியர்களைப் போலவே, ஒரு மாதம் அல்லது அதற்கும் அதிகமான மாதங்கள் துணைப் பயனியர்களாகத் தங்களை மனமுவந்து அளிப்பவர்கள் முதலில் செலவைக் கணக்கிடவேண்டும். (லூக். 14:28, 30ஆ) இது எதை உட்படுத்துகிறதென்றால் மற்ற கிறிஸ்தவ உத்தரவாதங்களை நெகிழவிடாமல் அவர்களால் வெளி ஊழியத்தில் தேவையான மணிநேரங்களைச் செலவிட எதிர்பார்ப்பது நியாயமாக இருக்குமா என முன்தீர்மானிப்பதாகும். துணைப் பயனியராக ஈடுபடவேண்டும் என்ற தீர்மானம் அந்த நபர் தன்னுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளை ஜெபசிந்தையோடு யோசித்தப் பின்பு செய்யவேண்டும். உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்கள் அதற்கு விண்ணப்பிப்பதால் தானும் செய்யவேண்டும் என்ற தூண்டுதலோடு செய்யக்கூடாது. நியாயமாக யோசித்து எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாக இருக்கவேண்டும், அதோடுகூட தேவைகளைப் பூர்த்திசெய்ய ஓர் எழுதப்பட்ட அட்டவணையையும் போடவேண்டும். விண்ணப்பப்படிவத்தைக் கவனத்தோடு வாசிப்பது முக்கியம், பின்னர் என்ன அவசியமாயிருக்கிறதோ அதற்கு உண்மையிலேயே ஒருவர் ஆம் என்று சொல்ல முடியுமா என தன்னுடைய சொந்த இருதயத்தில் தீர்மானிக்கவேண்டும்.

கூடுதலான பிரயாசையை உள்ளடக்குகிறது என்பது உண்மைதான். வருஷத்தில் ஒருசில மாதங்கள், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் “மும்முரமாய் ஈடுப”டுபவர்களாய் ஆவதற்கு நன்றாய் அனுமதிக்கின்றன. (அப். 18:5, NW) நினைவு ஆசரிப்பு காலமாகிய மார்ச்சையும் ஏப்ரலையும், வட்டாரக் கண்காணி சபையை விஜயம் செய்யக்கூடிய மாதங்களையும் இவை உட்படுத்துகின்றன. இந்த விசேஷ நடவடிக்கைக்கான மாதங்களில் பிரசங்க வேலையில் கூடுதலான பங்கைக் கொண்டிருப்பதற்கு அநேக பிரஸ்தாபிகள் மகிழ்ச்சியோடு ஓரளவு கண்டிப்பான அட்டவணையைப் பின்பற்றுவதற்கு தங்களையே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள், இதன் பலனாக எப்போதும் நிறைவான ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை அறிந்திருக்கின்றனர். (2 கொ. 9:6) அநேக பிரஸ்தாபிகள் விடுமுறை மாதங்களிலும் மேலும் வருஷத்தில் ஐந்து முழு வார இறுதி நாட்களைக்கொண்ட எந்தவொரு மாதத்தின்போதும் பயனியர் செய்வதற்கு விசேஷ முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் அதைக் கையொப்பமிடுவதில் அவர்கள் “ஆம் என்பதை ஆம்” என்ற நியமத்தை நெருங்க கடைப்பிடிப்பதன் அவசியத்தை மதித்துணருகின்றனர். துணைப் பயனியர்களாகச் சேவை செய்கிறவர்கள், ஒவ்வொரு மாதமும் 60 மணிநேரங்களோ அதற்கு அதிகமாகவோ அறிக்கை செய்வதற்கு தங்களால் ஆன மிகச்சிறந்ததைச் செய்வதன் மூலம் அதைக் கடைப்பிடிக்கிறார்கள்.—மத். 5:37, தி.மொ.

பயனியர் செய்ய இயலாத பிரஸ்தாபிகள் துணைப் பயனியர்களோடு திட்டவட்டமான நியமிப்புகளை ஏற்பாடு செய்து அவர்களோடு வேலை செய்ய தங்களை வைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு உதவலாம். முடியும்போது பயனியர்களோடு நீண்ட நேரம் ஊழியத்தில் இருப்பது உதவியாயிருக்கும். அதிகாலையிலோ மத்தியான வேளையின் பிற்பகுதியிலோ சாயங்கால வேளையின் முற்பகுதியிலோ மற்ற பிரஸ்தாபிகளின் ஆதரவைக் கொண்டிருப்பதைப் பயனியர்கள் விசேஷமாய் போற்றக்கூடும். துணைப் பயனியர்கள் மறுசந்திப்புகள் செய்வதற்கும் வீட்டுப் பைபிள் படிப்புகள் துவங்குவதற்கும் மற்றவர்களோடு வேலை செய்ய அழைக்கப்படும்போது சந்தோஷப்படுகிறார்கள். இப்படித் துணைப் பயனியர்களுக்கு ஆதரவு தருபவர்கள், கொடுப்பதன் மூலம் வரக்கூடிய பெரிதான சந்தோஷத்தைக் கட்டாயமாய் அறுவடை செய்வர்.—அப். 20:35.

அநேக துணைப் பயனியர்களுடைய விஷயத்தில் ஊக்கமாகச் செயல்படுவது மிகவும் போற்றத்தகுந்தது. அவர்களோடு சேர்ந்துகொள்பவர்கள் அபரிமிதமான ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கலாம். (நீதி. 10:4) ஒரு துணைப் பயனியராக, அடுத்து நீங்கள் எப்போது அதிகமான நடவடிக்கையினால் வரும் சந்தோஷங்களில் பங்குகொள்ளப்போகிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்