உங்களுடைய போதனைக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்
1 புதிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை ஜனவரி 1995-ல் ஆரம்பமாகும். ஆங்கிலத்தில் நடத்தப்படுகிற பள்ளி அட்டவணையைப் பின்பற்றுகிற சபைகளில் கொடுக்கப்படுகிற பெரும்பாலான போதனைப் பேச்சுக்களில், யெகோவாவின் நவீனநாளைய அமைப்பைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் சரித்திரம் கலந்துபேசுவதற்கான பேச்சுப்பொருளாக இருக்கும். அந்த ஆண்டின்போது, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் 178-பக்கங்கள் அந்தச் சபைகளில் கலந்தாலோசிக்கப்படும். அறிவிப்போர் புத்தகத்திலிருந்து கொடுக்கப்படுகிற போதனைப் பேச்சைத் தொடர்ந்து மறுபார்வைக் கேள்விகள் எதுவும் இருக்காது. எனவே நம்முடைய போதனைக்கு கவனம் செலுத்துவதற்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கும் நாம் என்ன செய்யலாம்?—1 தீ. 4:16.
2 அறிவிப்போர் புத்தகத்தை அநேகர் ஏற்கெனவே வாசித்திருக்கிறபோதிலும், பள்ளி அட்டவணையின்படி பொருளைச் சிந்திப்பதானது அனைவரும் தங்களுடைய தேவராஜ்ய சுதந்தரத்தை இன்னும் அதிகமாகப் போற்றுவதற்கு உதவிசெய்யும். (சங். 71:17, 18) அறிவிப்போர் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அந்தப் பொருளை மறுபார்வை செய்வதற்கு ஒவ்வொரு வாரமும் ஏன் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி வைக்கக்கூடாது?
3 உயிரூட்டமுள்ள, ஆர்வத்தைத் தூண்டுகிற போதனைப் பேச்சுக்கள்: அறிவிப்போர் புத்தகத்திலிருந்து கொடுக்கப்படுகிற போதனைப் பேச்சுக்கள் உயிரூட்டமுள்ள, ஆர்வத்தைத் தூண்டுவிக்கிற முறையில் கொடுக்கப்படவேண்டும். தகவலின் நடைமுறையான மதிப்பை அவர்கள் சிறப்பித்துக் காட்டி, யெகோவாவுடைய அமைப்பிற்கான மரியாதையையும் கடவுளுடைய ஊழியர்களாய் நமக்கிருக்கிற சிலாக்கியங்களுக்கான போற்றுதலையும் ஆழப்படுத்துவதற்காகவும் அதைப் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு ஆஜராகிற ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிவிப்போர் புத்தக பிரதி ஒன்றைக் கூட்டத்திற்குக் கொண்டுவருவார்களானால், குடும்ப அங்கத்தினர்கள் போதனைப் பேச்சை அதிகமாக கூர்ந்து பின்பற்றி வரமுடியும், மேலும் அந்தப் புத்தகத்திலுள்ள விளக்கப்படங்களிலிருந்தும் நிழற்படங்களிலிருந்தும் நன்மையடைய முடியும். உள்ளூர் மொழி பள்ளி அட்டவணையைப் பின்பற்றுகிற சபைகள் ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் என்ற புத்தகத்தை 1994-ல் செய்தது போல அதே முறையிலேயே தொடர்ந்து பயன்படுத்தும்.
4 சிந்தனையைத் தூண்டும் பைபிள் வாசிப்புகள்: சரியான அழுத்தம் கொடுத்து உணர்ச்சியோடு நன்றாக வாசிப்பது திறம்பட்ட போதனையின் ஓர் இன்றியமையா பாகமாகும். அதோடுகூட, பேச்சு எண் 2-ல் வாசிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பகுதியின் அளவு அதிகமல்ல, மேலும் பேச்சாளரால் கொடுக்கப்படுகிற அறிமுகத்திற்கும் முடிவான குறிப்புகளுக்கும் சாதாரணமாக போதுமான நேரம் கிடைக்கும். அறிமுகமானது கொடுக்கப்பட்டுள்ள பொருளில் அக்கறையைத் தூண்டி, சபையார் அதன் நடைமுறையான மதிப்பை பகுத்துணரும்படி அவர்களைத் தயார்செய்ய வேண்டும். முடிவுரையானது, விளக்கக் குறிப்புகள், பொருளைப் பொருத்திக் காண்பித்தல் ஆகியவற்றை உட்படுத்துவதாக, கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை பேச்சாளர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5 பள்ளி நிகழ்ச்சியின்பேரிலும் நியமிப்புகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதன்பேரிலும் கூடுதலான தகவல்களை “1995-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யில் காணலாம். இந்தப் பொருளிலுள்ள போதனைகளை மறுபார்வை செய்வதன்மூலம், நம்முடைய நியமிப்புகளை நன்றாக தயார்செய்வதன்மூலம், பேச்சு மற்றும் போதிக்கும் கலையில் முன்னேறுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற ஆலோசனைகளைப் பொருத்துவதன்மூலம் நம்முடைய போதனைக்கு நாம் கவனம் செலுத்துகிறோம். பள்ளியில் இன்னும் சேர்ந்துகொள்ளாதவர்கள் சேர்ந்துகொள்ளும்படியாக அனலோடு வரவேற்கப்படுகிறார்கள்.