ஏப்ரலில் பத்திரிகை அளிப்புக்குத் தயாரிக்கவும்
நமது 1996 வருட நாள்காட்டியில் காட்டியிருப்பதைப்போல், இவ்வருடம் ஏப்ரல் 2-ம் தேதி கர்த்தரின் இராப்போஜனம் அனுசரிக்கப்படும். இந்த மகத்தான நிகழ்ச்சியால் உற்சாகப்படுத்தப்பட்டவர்களாக நாம் எல்லாரும் சேர்ந்து ஏப்ரல் முழுவதும் பத்திரிகை விநியோகிப்பதில் வைராக்கியத்துடன் பங்குபெறுவோமாக. காலத்திற்கேற்ற பத்திரிகைகளை அல்லவா பயன்படுத்துவோம்! ஏப்ரல் 1-ன் காவற்கோபுரம் சென்றாண்டு மாவட்ட மாநாட்டின் பொதுப் பேச்சான, “நித்திய ராஜாவை துதியுங்கள்!” என்பதன்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும். ஏப்ரல் 15-ன் காவற்கோபுரம் சென்றாண்டின் விசேஷ பொதுப் பேச்சின் தலைப்பாகிய “பொய் மதத்தின் முடிவு சமீபம்” என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஏப்ரல் 21-ல் கொடுக்கப்படவிருக்கும், “கோணலான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களாயிருத்தல்” என்ற இவ்வருட விசேஷ பொதுப் பேச்சின் பொருள், ராஜ்ய நடவடிக்கைக்கு அதிகரிக்கப்பட்ட தூண்டுதலை கொடுக்கவேண்டும். நாம், “போரே இல்லாதிருக்கையில்” என்ற தலைப்பை கொண்ட ஏப்ரல் 22, விழித்தெழு!-ஐ அளிப்போம்.
சென்ற ஏப்ரலின் ராஜ்ய செய்தி அளிப்பு ஏற்பாட்டை பின்தொடர்ந்தாற்போல், இந்த ஏப்ரல் பத்திரிகை விநியோகிப்புக்கு முனைப்பான மாதமாக இருக்கவேண்டும். திட்டமிடுவதற்கான காலம் இதுவே. பலர் துணைப் பயனியர்களாகச் சேர்ந்துகொள்ள விரும்புவார்கள். தேவைக்கு ஏற்ப ஏப்ரல் மாத பத்திரிகைகளின் அதிகப்படியான பிரதிகளை ஆர்டர் செய்யவும். கூடுமானவரை ஒவ்வொருவரும்—காலையிலும் மதியவேளையிலும் மாலையிலும்—பங்கேற்கும் வகையில் பத்திரிகை ஊழியத்துக்காகத் திட்டங்களைத் தீட்டலாம். நாம் அனைவரும் ‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாய்’ இருப்போமாக. “உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது,” என்று சங்கீதம் 69:9-ல் மேசியாவைப்பற்றி முன்னுரைக்கப்பட்டதைப் போன்றே நாமும் சொல்லக்கூடியவர்களாக இருப்போமாக.—யாக். 1:22; யோவா. 2:17.