“ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?”
1 அருமையான, உணர்ச்சியைத் தூண்டத்தக்க, மனதிற்கு இதமளிக்கும் ஒரு செய்தி உலகம் முழுவதும் 169 மொழிகளில் அறிவிக்கப்படவுள்ளது. இது என்ன செய்தி? எவ்வாறு அறிவிக்கப்படும்?
2 செய்தியானது அயலார் அன்பைப் பற்றியதாகும். “ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என தலைப்பிடப்பட்டிருக்கும் ராஜ்ய செய்தி எண் 35-ல் இது காணப்படும். இந்த ராஜ்ய செய்தி, இன்றைய உலக நிலவரங்களை சுருக்கமாக ஆராய்ந்து, மக்களிடையே அன்பு இல்லாததுதான் இந்தளவு மனவேதனைக்கும் துயரத்திற்கும் அடிப்படைக் காரணம் என காண்பிக்கிறது. பிறரிடம் காட்டும் அன்பு, நம்முடைய நாட்களில் முக்கியமாக ஏன் தணிந்திருக்கிறது என்பதையும் இதனால் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பதையும் அது விளக்குகிறது.
3 அதுமட்டுமல்லாமல், இன்றைய உலகில் வாழும் லட்சக்கணக்கானோருக்கிடையே உண்மையான அயலார் அன்பு காணப்படுகிறது என்பதையும் ராஜ்ய செய்தி எண் 35 காட்டுகிறது. அது, ஆரம்பகால கிறிஸ்தவத்தை—இயேசு கிறிஸ்து கற்பித்த அயலார் அன்புக்கு பெயர்பெற்றிருந்த முதல்-நூற்றாண்டு வணக்கத்தை—மீண்டும் நிலைநாட்டுவதில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை அடையாளங்காட்டுகிறது.—லூக். 10:25-37.
4 விரைவில் எவ்வாறு இந்த முழு மனிதவர்க்கமும் கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவின் ஆட்சியில் அயலார் அன்பை பொழியும் என்ற விளக்கத்தை ராஜ்ய செய்தி எண் 35 முடிவுரையில் தருகிறது. இந்தச் செய்தியை வாசிப்போர், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பெற்றுக்கொள்ளும்படியும், கடவுளுடைய வார்த்தையில் விவரமாக விளக்கப்பட்டிருக்கும் இந்த உலகளாவிய அன்பின் ஏற்பாட்டில் ஒரு பாகமாவதை கற்றுக்கொள்ளும்படியும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.
5 யார் இந்தச் செய்தியை அறிவிப்பர்? உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள், அக்டோபர் மாதத்திலும் நவம்பர் மாதத்திலும், அயலார் அன்பைப் பற்றிய இந்தச் செய்தியை, தங்களுக்கு அறிமுகமானவர்களோடும் தங்கள் அயலகத்தாரோடும் உறவினர்களோடும் பகிர்ந்துகொள்வர். ராஜ்ய செய்தி எண் 35-ஐ பிறருக்கு விநியோகிப்பதில் பங்குகொள்ளும்படி தகுதிபெற்ற அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.
6 இந்த விசேஷ அளிப்பு ஏற்பாட்டின் முடிவான நோக்கம், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலோ அறிவு புத்தகத்திலோ பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும்படி மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகும். அதுமட்டுமல்லாமல், யெகோவாவின் ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரது இருதயப்பூர்வமான முயற்சியும், அன்பின் தேவனாகிய யெகோவாவிற்கும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் மகத்தான சாட்சி பகரும்.