உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/97 பக். 3
  • இன்டர்நெட்டில் நற்செய்தி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்டர்நெட்டில் நற்செய்தி
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • இதே தகவல்
  • இன்டர்நெட்—சேவைகளும் தகவல்மூலங்களும்
    விழித்தெழு!—1997
  • இன்டர்நெட்—ஜாக்கிரதை!
    நம் ராஜ்ய ஊழியம்—1999
  • இன்டர்நெட் ஞானமாய் உபயோகியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • அவர்களுக்கு உதவும் வழி
    நம் ராஜ்ய ஊழியம்—2004
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 11/97 பக். 3

இன்டர்நெட்டில் நற்செய்தி

நமது தொழில்நுட்ப சகாப்தத்தில், சிலர் எலெக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து தகவலைப் பெறுகின்றனர்; இதில் இன்டர்நெட்டும் அடங்கும். ஆகவே சங்கம், யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பற்றிய திருத்தமான சில தகவல்களை இன்டர்நெட்டில் வழங்கியிருக்கிறது.

நமது இன்டர்நெட் முகவரி, http://www.watchtower.org என்பதாகும். இதில் துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்புகள் ஆங்கிலத்திலும், (எளிதாக்கப்பட்ட) சைனீஸ், ஜெர்மன், ரஷ்யன், ஸ்பானிஷ் என இன்னும் பல மொழிகளிலும் அடங்கியுள்ளன. இந்த வெப் மையத்திலுள்ள பிரசுரங்கள் ஏற்கெனவே சபைகள் மூலமாக கிடைக்கின்றன; மேலும், இவை வெளி ஊழியத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. நமது வெப் மையத்தின் நோக்கம், புதிய பிரசுரங்களை வெளியிடுவது அல்ல, ஆனால் தகவலை எலக்ட்ரானிக் முறையில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும்படி செய்வதே. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியோ, நம் நடவடிக்கைகளை அல்லது நம் நம்பிக்கைகளைப் பற்றியோ, இன்டர்நெட் பக்கங்களை எந்தவொரு தனிநபரும் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் பெற விரும்பும் எவருக்கும் திருத்தமான தகவலை நமது வெப் மையம் (web site) அளிக்கிறது.

எலெக்ட்ரானிக் செய்திகளுக்கான (ஈ-மெய்ல்) ஏற்பாடு நம் மையத்தில் இல்லாதபோதிலும், உலகமுழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களின் விலாசங்கள் அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, கூடுதலான தகவலைப் பெறுவதற்காகவோ, உள்ளூர் சாட்சிகளிடமிருந்து தனிப்பட்ட உதவியைப் பெறுவதற்காகவோ மக்கள் எழுதலாம். இம் முறையில் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும், மேற்கூறப்பட்ட இன்டர்நெட் முகவரியைத் தெரியப்படுத்த தயங்காதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்