பூமியெங்கும் யெகோவாவின் பெயரை தெரியப்படுத்துதல்
1 தம் சீஷர்கள் “பூமியின் கடைசிபரியந்தமும்” சாட்சிகளாய் இருப்பார்கள் என இயேசு சொன்னார். (அப். 1:8) அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்குமுன், அவர்கள் பின்பற்றுவதற்கான மாதிரியை அவர் வைத்துச் சென்றார். எப்போதெல்லாம், எங்கெல்லாம் மக்களை பார்த்தாரோ அங்கெல்லாம் மனிதகுலத்திற்கான கடவுளின் நோக்கத்தைக் குறித்து பேசினார். இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, உண்மையுள்ள அடிமை வகுப்பார், யெகோவாவின் பெயரை ‘பூமியெங்கும் தெரியப்படுத்த’ வித்தியாசமான பல வழிகளை உபயோகிக்கின்றனர்.—ஏசா. 12:4, 5.
2 கடந்த காலங்களில் கையாளப்பட்ட வழிமுறைகள்: கடந்த காலங்களில், நற்செய்தியைப் பற்றிய பிரசங்கம் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டன; “ஃபோட்டோ-டிராமா ஆஃப் க்ரியேஷன்” என்ற சிருஷ்டிப்பைப் பற்றிய ஸ்லைடு தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோருக்கு காட்டப்பட்டது; ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்கள் பயன்படுத்தப்பட்டன; கிராமஃபோன் கருவிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன; சிறிது காலத்திற்கு ரேடியோ பயன்படுத்தப்பட்டது. இவையனைத்தும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவே. என்றபோதிலும், ஜனங்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களிடம் நற்செய்தியை சொல்லுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்போதுதான், ஆர்வம் காட்டும் நபர்களை திரும்ப சந்தித்து, அவர்களுடைய ஆவலை வளர்க்க முடியும். எனவே, யெகோவாவின் பெயரை பிரஸ்தாபப்படுத்துவதில் மிகச் சிறந்த வழியாக நிரூபித்துள்ளது வீட்டுக்கு வீடு ஊழியமே.—அப். 5:42.
3 தற்சமயம் கையாளப்படும் வழிமுறைகள்: காலம் மாறுவதற்கு ஏற்ப உலகமும் இன்று இயந்திரகதியில் செல்கிறது. பல இடங்களில் மக்களை வீடுகளில் சந்திப்பதே அபூர்வமாக உள்ளது. ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி படிப்பதிலும் தியானிப்பதிலும் நேரத்தை செலவிட வெகு சிலரே ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, காலத்திற்கேற்ப நாமும் நம் ஊழியத்தில் கையாளும் வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். வீட்டு வீடு ஊழியத்தில் ஈடுபடுவதால் பிராந்தியத்தை முழுமையாக சாட்சி கொடுக்க முடிகிறது. அதோடுகூட, எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் அவர்களிடம் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி சொல்ல “எப்போதும் ஆயத்தமாயிருக்க” உற்சாகப்படுத்தப்படுகிறோம். (1 பேதுரு 3:15) அதாவது, உடன் வேலை செய்வோரிடம், உடன் மாணவர்களிடம், தெருக்களில், பூங்காக்களில் அல்லது வாகனங்களை நிறுத்துமிடங்களில், கடைகளில், மற்றும் எங்கெல்லாம் ஜனங்களை சந்திக்கிறீர்களோ அங்கெல்லாம் அவர்களிடம் பிரசங்கிக்க முயற்சி எடுப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. நம் முயற்சிகள் வெற்றி பெற யெகோவா நமக்கு பக்கபலமாய் இருப்பார். மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு நற்செய்தியை சொல்ல நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?
4 நம் பிராந்தியத்தில் யெகோவாவின் பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்த தேவையான எல்லா முயற்சிகளையும் நாம் எடுப்போமாக. நல்லிருதயமுள்ள ஜனங்களை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்வதன்மூலம் நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றி, மிகுந்த திருப்தியடையலாம்.—யோவா. 6:44.