செவிகொடுத்து கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாயிருங்கள்
சபை கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றிற்கு செல்கையில் கவனித்து கேட்க வேண்டியது மிகவும் அவசியம். (லூக். 8:18) செவிகொடுத்து கேட்கும் திறமையை நீங்கள் எவ்வாறு அதிகரிக்கலாம்?
◼ கூட்டங்களுக்கு முன்பு வயிறுமுட்ட சாப்பிடுவதைத் தவிருங்கள்.
◼ மனதை அலைபாயவிடாமல் கட்டுப்படுத்துங்கள்.
◼ முக்கிய விஷயங்கள் பற்றி சுருக்கமான குறிப்புகள் எடுங்கள்.
◼ வேதவசனங்கள் வாசிக்கப்படும்போது பைபிளைத் திறந்து பாருங்கள்.
◼ சந்தர்ப்பம் கிடைக்கும்போது பங்குகொள்ளுங்கள்.
◼ அளிக்கப்படும் விஷயத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
◼ நீங்கள் கேட்கும் காரியங்களை எப்படி உபயோகிக்கலாம் என சிந்தியுங்கள்.
◼ பிறகு கற்றுக்கொண்டவற்றைப் பற்றி கலந்துபேசுங்கள்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல், படிப்பு 5-ஐப் பாருங்கள்.