உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/00 பக். 8
  • உதவிக்காக கேளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உதவிக்காக கேளுங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • இதே தகவல்
  • மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
  • மூப்பர்களைக் கூப்பிடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • ‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • சபை எப்படி செயல்படுகிறது?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 3/00 பக். 8

உதவிக்காக கேளுங்கள்

1 “கொடிய காலங்கள்” என்ற ஏவப்பட்ட வார்த்தை, நம்முடைய நெருக்கடி மிகுந்த வாழ்க்கையை சித்தரிக்கும் சரியான வார்த்தை அல்லவா! (2 தீ. 3:1) எனவே, கடினமான ஆவிக்குரிய சவால்கள் சிலவற்றை நீங்கள் எதிர்ப்படும்போது, அதை சமாளிக்கும் அளவிற்கு உங்களுக்கு தகுதி இல்லை என உணர்ந்தால், அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

2 அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்த அங்கத்தினரிடம் இதைக் குறித்து பேச தயாராயிருக்கிறீர்களா? சிலர் இதைக் குறித்து சங்கடமாய் உணரக்கூடும் அல்லது மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் தங்களைக் கட்டுப்படுத்த விரும்பாதவர்களாக இருக்கக்கூடும் அல்லது தனக்கு யாராலும் உதவ முடியாது என்றும்கூட நினைக்கக்கூடும். இதனால் மற்றவர்களிடம் பேச தயங்குவர். நம்முடைய தனிப்பட்ட பொறுப்புகளை நம்மால் முடிந்தளவுக்கு சரிவர நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் ஆவிக்குரிய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மற்றவர்களுடைய உதவியை நாட நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது.​—⁠கலா. 6:2, 5.

3 எங்கிருந்து துவங்குவது: முதலில் உங்கள் புத்தகப் படிப்பு நடத்துனரை அணுகி, அவருடன் நீங்கள் வெளி ஊழியம் செய்ய விரும்புகிறீர்கள் என சொல்லலாம். ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய வேண்டும் என்ற உங்களுடைய விருப்பத்தை, நீங்கள் அவரிடம் தெரியப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இது அளிக்கும். ஒருவேளை அவர் உதவி ஊழியராக இருந்தால், உங்களுக்கு ஆவிக்குரிய உதவி தேவை என்பதை அவர் அறிந்துகொள்ளட்டும். பிறகு அவர் உங்களுக்கு உதவும்படி மூப்பர்களிடம் கேட்பார். அல்லது நீங்கள் இந்த விஷயத்தைக் குறித்து பேச யாராவது ஒரு மூப்பரை அணுகலாம்.

4 உங்களுக்கு என்ன விதமான உதவி தேவை? ஏதாவதொரு விஷயம் உங்கள் ஆர்வத்தை குன்றச் செய்திருக்கிறதா? உங்கள் பிள்ளைகள் சபையுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என விரும்பும் ஒற்றைப் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு வயதாகிவிட்டதால், மற்றவர்களுடைய உதவி இப்போது தேவைப்படுகிறதா? அல்லது எந்த பிரச்சினையாவது உங்களை உற்சாகமிழக்கச் செய்கிறதா? நம்முடைய நெருக்கடியான காலத்தில் வாழ்வது அல்லது அவற்றை எதிர்ப்படுவது கடினமே. ஆனால் முடியவே முடியாதது இல்லை. நமக்கு உதவி காத்திருக்கிறது.

5 முதிர்ந்த சகோதரர்களின் உதவி: மூப்பர்கள், உண்மையான அக்கறையை காண்பிப்பவர்கள். நீங்கள் சொல்ல விரும்புகிறவற்றை செவிகொடுத்து கேட்பர். சபையிலுள்ள மற்ற பிரஸ்தாபிகளும் அதேபோன்ற பிரச்சினைகளை, தடைகளை எதிர்ப்பட்டால், மூப்பர்கள் இதற்கு கவனம் செலுத்துவர். சபையை மேய்க்கும்போதும், போதிக்கும்போதும் அதைக் குறித்து சிந்திப்பர். அவர்கள் “மந்தைக்கு மாதிரிகளாக” இருப்பதால், உங்களுடன் சந்தோஷமாய் வேலை செய்ய தயாராயிருக்கின்றனர். (1 பே. 5:3) அனுபவம் மிக்க இந்தச் சகோதரர்கள் பைபிள் நியமங்களை விளக்கும்போது அதற்கு கவனமாக செவிகொடுத்து கேட்பது, உங்கள் ஊழியத்தை முன்னேற்றுவிக்க உதவுவதோடு தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவும்.​—⁠2 தீ. 3:16, 17.

6 இயேசு நமக்காக, அநேக “மனித வரங்களை” கொடுத்திருக்கிறார். (எபே. 4:8 NW அடிக்குறிப்பு) ஆக, மூப்பர்கள் உங்களுக்கு ஊழியம் செய்வதற்காகவே இருக்கிறார்கள் என இது அர்த்தப்படுத்துகிறது. உங்களுக்கு உதவ இவர்கள் தயாராயிருக்கின்றனர். ஆம், இவர்கள் உண்மையில் ‘உங்களுடையவர்களே.’ (1 கொ. 3:21-23) ஆக, அவர்களிடமிருந்து தயங்கி பின்வாங்காமல், மனம்விட்டு பேசுங்கள். உங்களுக்கு தேவைப்படும் உதவியை வாய் திறந்து கேளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்