புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
“தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்—பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” இது புதிய ஊழிய ஆண்டிற்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியின் பொருள்; பைபிள் சார்ந்த இந்த கலந்தாலோசிப்பு பலமான அஸ்திவாரமாக அமையும். (யாக். 4:7) கஷ்டமான இக்காலங்களில் இது ஓர் அருமையான வழிகாட்டி! கடவுளுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவது, சாத்தானை நேரடியாக எதிர்க்கும் நிலையில் நம்மை வைக்கிறது. நம் விசுவாசத்தை குலைக்கச் செய்யும் பிசாசின் தீய சதி திட்டங்களுக்கு எதிராக உறுதியாக நிலைத்து நிற்பது எப்படி என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு கற்பிக்கும். இம்மாநாட்டில் நாம் பெறப்போகும் ஆவிக்குரிய ரத்தினங்களில் சில யாவை?
“குடும்ப அங்கத்தினர்களாக தெய்வீக கீழ்ப்படிதலை காண்பித்தல்” இவ்வுலகம் தரும் தொல்லைகளை தாக்குப்பிடிக்க எப்படி குடும்பங்களை பலப்படுத்தும் என்பதை வட்டார கண்காணி விளக்குவார். அன்றைய விசேஷ பேச்சாளரின் முதல் பேச்சு, “பிசாசுக்கு எதிர்த்து நிற்பதன் அர்த்தம்” என்பதாகும்; நம் ஆவிக்குரிய தன்மையை கெடுக்க சாத்தான் வைக்கும் குறியிலிருந்து தப்புவதற்கு ஏன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்று இப்பேச்சில் விளக்கப்படும். இளைஞர்களும் பிசாசின் தந்திரங்களுக்கு எதிராக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியதால் இரண்டு பாகங்கள் அவர்களுக்கென்றே பொருத்திக் காட்டப்படுகின்றன. இப்போது பெரியவர்களாய் இருக்கும் அநேக கிறிஸ்தவர்கள், இளைஞர்களாய் இருந்தபோது உலக ஆசைகளுக்கு அடிபணிய மறுத்தவர்கள். அவர்களில் சிலரது சொந்த அனுபவங்களை கேட்டு மகிழ்வோம்.
மனித சமுதாயத்தின் பாகமாயிருக்கும் அனைவருமே அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே, (1) அரசாங்கங்கள், (2) சபை, (3)வேலை பார்க்கும் இடங்கள், (4)குடும்பம் என நான்கு இடங்களிலும் தெய்வீக கீழ்ப்படிதலை காட்ட வேண்டும் என்பதை விசேஷ பேச்சாளரின் முடிவான பேச்சு சிறப்பித்துக் காட்டும். நடைமுறைக்கு எவ்வளவு பிரயோஜனமான நிகழ்ச்சி!
இந்த விசேஷ மாநாட்டு தினத்தன்று முழுக்காட்டுதல் பெற விரும்புவோர் அதை கூடிய சீக்கிரம் நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்க வேண்டும். நாம் அனைவருமே இம்மாநாடு நடக்கும் தேதியை காலண்டரில் குறித்து வைத்து முழு மாநாட்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள திட்டமிட வேண்டும். நித்தியமாய் யெகோவாவுக்கு நம்மை கீழ்ப்படுத்துகையில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.