புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
இந்தப் பொல்லாத உலகம் முடிவுறப்போகும் இந்த நாட்களில், நம் ஆவிக்குரிய ஆடையை இழந்துவிடாமல் நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்வது அத்தியாவசியம். (வெளி. 16:15) எனவே, 2006 ஊழிய ஆண்டுக்கான வட்டார மாநாட்டு நிகழ்ச்சிக்கு, ‘புதிய ஆள்தன்மையை தரித்துக்கொள்ளுங்கள்’ என்ற பொருள் மிகப் பொருத்தமானதே.—கொலோ. 3:10, NW.
முதல் நாள்: புதிய ஆள்தன்மையில் முன்னேறுவது எவ்வாறு நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பயன் அளிக்கிறது என்பதை “புதிய ஆள்தன்மையின் பல்வேறு அம்சங்களை வெளிக்காட்டுதல்” என்ற முதல் தொடர்பேச்சு சிறப்பித்துக் காட்டும். புதிய ஆள்தன்மையில் நாம் எவ்வாறு முன்னேறுகிறோம்? இது, முதல் நாளில் கொடுக்கப்படும் கடைசி இரண்டு பேச்சுகளில், அதாவது “சரியாக தியானிக்க ஊக்கமான முயற்சி எடுங்கள்,” “புதிய ஆள்தன்மையை வடிவமைக்கும் கல்வி” ஆகிய பேச்சுகளில், கலந்தாலோசிக்கப்படும்.
இரண்டாம் நாள்: நம் நாவைப் பயன்படுத்துவதில் புதிய ஆள்தன்மை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பது “ஞானமுள்ளவர்களாய் நாவைப் பயன்படுத்துதல்” என்ற இரண்டாவது தொடர்பேச்சில் கலந்தாலோசிக்கப்படும். “நீங்கள் பொல்லாங்கனை ஜெயிக்கிறீர்களா?” என்பது பொதுப் பேச்சின் தலைப்பு; இப்பேச்சு, சாத்தானின் தந்திரங்களில் சிக்காமல் கவனமாய் இருப்பதன் அவசியத்தைச் சிறப்பித்துக் காட்டும். மாநாட்டின் கடைசி இரண்டு பேச்சுகளான “உலகத்தால் கறைபடாதபடி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்,” “உள்ளான மனிதனை தினந்தோறும் புதுப்பித்தல்” ஆகியவை கடவுளுடைய நீதியான வழிகளுக்கு எதிரான மனப்பான்மையையும் நடத்தையையும் ஒதுக்கித்தள்ள நமக்கு உதவும், அதோடு யெகோவாவை வணங்குவதில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கும் நமக்கு உதவும்.
புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொண்டு, அதைத் தொடர்ந்து வெளிக்காட்டுவதற்கு இத்தகைய உற்சாகமூட்டுதலைப் பெற நாம் எவ்வளவு ஆவலாய் காத்திருக்கிறோம்!